Bhishmar

தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை தன் தந்தைக்கு மணமுடிக்க எண்ணினான்.யமுனைக் கரையை நோக்கி விரைந்தான். செம்படவ அரசன்...தேவவிரதனை மிக்க மரியாதையுடன் அழைத்துச் சென்றான். தேவவிரதன் தான் வந்த நோக்கத்தைச் சொன்னான்.. செம்படவ மன்னனோ..தன் நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தினான்.'என் மகளுக்குப் பிறக்கும் மகனே...சந்தனுக்குப் பின் அரசுரிமை பெறவேண்டும் ' என்றான். உடனே..தேவவிரதன் 'இவளுக்குப் பிறக்கும் மகனே..அரசுரிமை ஏற்பான்.வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை' என்று உறுதியாகக் கூறினான்.'நீங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும்'என்றான். செம்படவ அரசன்..'தேவவிரதனே..அரச குலத்தில் பிறந்தவன்...கூறாததை நீர் கூறினீர்...நீர் சொல்வதை உம்மால் காப்பாற்ற இயலும்..நீங்கள் சத்தியம் தவறாதவர் என்பதில்..எனக்கு துளியும் சந்தேகம் கிடையாது. ஆனால் உமக்கு உண்டாகும் சந்ததிப் பற்றி..எனக்கு சந்தேகம் உண்டு.நீங்கள் இப்போது தரும் வாக்குறுதியை..உம் சந்ததியினர் மீறலாம் இல்லையா?'என வினவினான். உடன் தேவவிரதன் கூறுகிறான்... 'செம்படவ அரசே! எனது சபதத்தை கேளுங்கள்.இங்குள்ள புலனாகாத..பூதங்களும்..பலர் அறிய வீற்றிருப்போரும்..இந்த சபதத்தை கேட்கட்டும்.அரசுரிமையை சற்றுமுன் துறந்து விட்டேன்..சந்ததியையும் துறக்க நான் மேற்கொள்ளும் சபததைக் கேளுங்கள்...இன்று முதல்..பிரமசரிய விரதத்தை மேற்கொள்கிறேன்.நான் பொய் சொன்னதில்லை.என் உயிர் உள்ளவரை..புத்திர உற்பத்தி செய்யேன்.இது சத்தியம்.என் தந்தைக்காக இந்த தியாகம் செய்கிறேன்..இனியாவது சந்தேகம் இல்லாமல்..உம் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து கொடுங்கள்' தேவவிரதனின் இந்த சபதத்தைக் கேட்டு..செயற்கரிய சபதம் செய்த அவன் மன உறுதியை அனைவரும் புகழ்ந்தனர்.அனைவரும் அவரை பீஷ்மர் (யாவரும் அஞ்சத்தக்க சபதம் மேர்கொண்டவர்) எனப் போற்றினர்

Related Articles

  • Mahabharatha
    Mahabharatha
    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
  • Vyasarin Mahabharatham
    Vyasarin Mahabharatham
    பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
  • Aadi Parvam
    Aadi Parvam
    இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
  • Maganai Kanda Mannan
    Maganai Kanda Mannan
    சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த…
  • Ambhai,Ambhigai,Ambhaligai
    Ambhai,Ambhigai,Ambhaligai
    பெரியோர்கள் ஆசியோடு செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு…