Maganai Kanda Mannan

சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த நதியில் நீர் ஏன் குறைவாக ஓடுகிறது..பெருக்கெடுத்து ஓடவில்லை..என்று எண்ணியபடியே நின்றான். அப்போது ஒரு வாலிபன், தன் அம்பு செலுத்தும் திறமையால்..கங்கை நீரை தடுத்து நிறுத்துவதைக் கண்டான்.உடன் கங்காதேவியை அழைத்தான்.கங்காதேவி, தன் மகனை கைகளில் பிடித்தபடி,மன்னர் முன் தோன்றினாள். 'மன்னா..இவன் தான் நமது எட்டாவது மகன்.இவன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன்.வசிஷ்டரின் வேதங்களையும்,வேத அங்கங்களையும் கற்றவன்.தேவேந்திரனுக்கு இணையான இவனை..இனி உன்னிடம் ஒப்படைக்கிறேன்' என்று கூறிவிட்டு கங்காதேவி மறைந்தாள். தன் மகனுக்கு..சந்தனு, இளவரசு பட்டம் சூட்டினான்.தன் மகனுடன்..நான்கு ஆண்டுகள் கழித்த நிலையில்..மன்னன் யமுனை கரைக்கு சென்ற போது..ஒரு அழகிய பெண்ணைக் கண்டான்.'பெண்ணே..நீ யார்?யாருடைய மகள்?என்ன செய்கிறாய்?' என்றான். அதற்கு அவள்,'நான் செம்படவப் பெண்..என் தந்தை செம்படவர்களின் அரசன்..நான் ஆற்றில் ஓடம் ஓட்டுகிறேன்' என்றாள். அவள் அழகில் மயங்கிய அரசன்..அவளுடன் வாழ விரும்பி..அப்பெண்ணின் தந்தையைக் காணச்சென்றான். செம்படவன்..மன்னனை நோக்கி'இவளை உங்களுக்கு மணம் முடிக்க ஒரு நிபந்தனை.அதை நிறைவேற்றுவதாக இருந்தால்..மணம் முடித்துத் தருகிறேன்' என்றான். அந்த நிபந்தனை..என்ன? நிறைவேற்ற முடியாததாக இருந்தால் வாக்கு தரமாட்டேன்..என்றான் மன்னன். 'மன்னா..என் மகளுக்கு பிறக்கும்..மகனே..உன் நாட்டை ஆள வேண்டும்' என்றான் செம்படவன். நிபந்தனையை ஏற்க மறுத்த மன்னன் ஊர் திரும்பினான்.ஆனாலும் அவனால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை.உடலும் உள்ளமும் சோர்ந்து காணப்பட்டான். தந்தையின் போக்கைக் கண்ட தேவவிரதன்..அவனிடம் போய்..'தந்தையே தங்களின் துயரத்துக்கான காரணம் என்ன?'என்றான். மகனிடம், தன் நிலைக்கான காரணத்தைச் சொல்ல..நாணிய மன்னன்..மறைமுகமாக'மகனே..இக்குல வாரிசாக நீ ஒருவனே இருக்கிறாய்..யாக்கை நிலையாமை என்பதை நீ அறிவாயா?நாளை திடீரென உனக்கு ஏதேனும் நேர்ந்தால்..நம் குலம் சந்ததி அற்றுப் போகும்.ஒரு மகன் இறந்தால்..குலத்திற்கு அழிவு ..என சாத்திரங்கள் கூறுகின்றன.அதனால் சந்ததி எண்ணிி மனம் ஏங்குகிறேன்' என்றான்.செம்படவப் பெண் பற்றிக் கூறவில்லை. மன்னன் ஏதோ மறைக்கிறான் என தேவவிரதன் உணர்ந்தான். மன்னனின்..தேரோட்டியைக் கேட்டால், உண்மை அறியலாம் என..தேரோட்டியைக் கூப்பிட்டு விவரம் கேட்டான். தேரோட்டி'உங்கள் தந்தை ஒரு செம்படவப் பெண்ணை விரும்புகிறார்.அவளை மணந்தால்..அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு முடி சூட்டப் படவேண்டும் என்று நிபந்தனை போடுகிறார்கள்.அதற்கு மன்னன் இணங்கவில்லை.அந்தப் பெண்ணையும் அவரால் மறக்க முடியவில்லை'என்றான்.

Related Articles

  • Mahabharatha
    Mahabharatha
    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
  • Vyasarin Mahabharatham
    Vyasarin Mahabharatham
    பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
  • Aadi Parvam
    Aadi Parvam
    இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
  • Bhishmar
    Bhishmar
    தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை…
  • Ambhai,Ambhigai,Ambhaligai
    Ambhai,Ambhigai,Ambhaligai
    பெரியோர்கள் ஆசியோடு செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு…