Siva Purana- Nyana Samhitha -2

19. திரிபுர சம்ஹார ஆலோசனை தேவர்கள் முறையிட்டதை கேட்ட பிரமதேவர் தேவர்களே! என்னால் வரமளிக்கப்பட்ட அவ்வசுரர்களை நானே வதைத்து அழிப்பது முறைமையல்ல. அவர்களை நீங்களே வென்று அழிப்பது தான் சிறந்தது. அதற்கு வேண்டிய உபாயங்களையோ யுத்தியையோ வேண்டுமானால் நானே சொல்லித் தருகிறேன். அது வேறொன்றும் விசித்திரமானதில்லை சாட்சாத் சிவபெருமானிடம் நீங்கள் அனைவருமே சென்று முறையிட்டுக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை அக்கருணாநிதியிடம் அபயம் கேட்டால் அவர் இல்லை என்று புறக்கணிக்கப் போவதுமில்லை. உங்கள் குறை தீர்க்க அவர்தான் முயற்சியெடுப்பார் ஆகவே அவரிடமே செல்லுங்கள் என்று கூறி அகன்றார். அதுவே சரியெனக் கருதிய தேவர்களும் நந்திக்கொடியுடைய சிவபெருமானிடம் விரைந்து சென்று விண்ணப்பித்தார்கள், சிவபெருமான் அவர்களை நோக்கி தேவர்களே! திரிபுரங்களை ஆட்சி செலுத்துகிற அவ்வசுரர்கள் புண்ணிய சீலர்களாதலால் அவர்களையாம் சங்காரம் செய்தல் கூடாது. அவர்கள் புண்ணியர்களாய் விளங்கும் வரையிலும் விபத்துக்கள் அவர்களை தீண்ட முடியாது. ஆகையால் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகா மாயாவியான மகாவிஷ்ணுவிடம் சென்று என்கட்டளையைக் கூறி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேவர்களும் அவரிடம் விடைபெற்றுத் திருமாலிடஞ் சென்று முறையிட்டார்கள். தேவர்களின் துயர்கேட்டுத் திருமாலோ வானவர்களே நீங்கள் துயரப்படுவதும் உண்மை தான். ஆனால் நீங்கள் கேட்கும் திரிரபுர சம்ஹாரம் சாத்தியப்படக் கூடுமோ? அத்திரிபுராதிகள் அசுரர்களாயினும் பாபிகள் அல்லவே! தருமம் மிகுந்த புண்ணியசீலர்களாயிற்றே, அவர்களைச் சங்கரிக்க நியாயம் ஏது? தருமம் இருக்குமிடத்தில் அதர்மம் புகமுடியுமா? சூரிய சன்னதியில் இருள் உண்டாகக் கூடுமோ? என்றெல்லாம் சொன்னார். அதைக் கேட்ட தேவர்கள் மிகவும் துயருற்று தலைவணங்கி பரமாத்மாவே! எங்களுக்கு வேறுவழியில்லை நாங்கள் என்ன செய்வோம்? அவ்வசுரர்கள் இருப்பதால் எங்கள் தருமங்கள் விருத்தியடையவில்லை ஒன்று அவர்கள் வாழ வேண்டுமென்று எங்களை அகாலப் பிரளயஞ் செய்து விடுங்கள். அல்லது அவர்களையாவது நாங்கள் வென்றிட வழி செய்யுங்கள் என்று மிகப் பக்திச் சிரத்தையோடு வேண்டினார்கள். திருமாலோ தீவிரமாக யோசித்துவிட்டு தேவர்களே! யச்சுதாரித்தால் சிவபெருமானைப் பூஜித்தால், உங்கள் இஷ்டசித்திகள் கைகூடுமாதலின் நீங்களும் யாகங்கள் செய்தால் திரிபுரங்கள் நாசமாகும்! என்று சொன்னார் தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து மனத்திடமும் தெம்பும் பெற்றார்கள் அப்போது திருமால் மேலும் சொல்லலானார். திரிபுர அசுரர்கள் மூவரும் மந்திரமஹிமையாலேயே இறக்கவேண்டும். ஆதலால் அதற்குச் சிவனாரின் தயவுவேண்டும் அது இல்லாமல் அவ்வசுரர்களை வதம் செய்ய நானோ, பிரமனோ தைத்தியர்களோ சக்தியற்றவர்களாகி விடுவோம். சிவபெருமானே அவரவர் இஷ்ட சித்திகளை நிறைவேற்றுபவர் தேவர்கள் கூட அவரைப் பூஜித்ததால் தான் வல்லமைகளைப் பெற்றனர், அவ்வளவு ஏன்? பிரமனும் சரி, நானும் சரி, சிவபெருமானைப் பூஜித்ததால் தான் படைக்கும் ஆற்றலைப் பிரமனும் காக்கும் ஆற்றலை நானும் பெற்றோம். ஆகையால் நீங்கள் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறி அவர்களுக்குச் சிவ மூலமந்திரத்தையும் உபதேசித்துக் கந்த புஷ்ப தூபதீப நைவேத்தியங்களால் இலக்ஷ லிங்கார்ச்சனை செய்வித்தார். அப் பூஜையின் முடிவில், கோரப்பல்-சூலம்-வேல்-கதை-பாணம் எறிகல் ஆகிய ஆயுதங்களையேந்திக் காலாக்நி ருத்ரன் போலவும் பிரளயகால சூரியன் போலவும் காந்தி மிக்க பற்பல பூதங்கள். தோன்றித்தேவர்களை வணங்கி எதிர் நின்றன விஷ்ணுமூர்த்தி அப்பூதங்களை நோக்கி நீங்கள் முப்புரங்களையும் கொளுத்தி இடித்துப் பொடிசூரணமாக்கிச் செல்லுங்கள் என்று பணித்தார். ஆனாலும் அவர் மனம் சலனமுற்றது அவர் சிவபெருமானைத் தனியே துதித்து நமஸ்கரித்து நான் இவர்களிடம் இப்படி ஏன் கட்டளையிட்டேன்; அசுரத் திரிபுராதிகளிடம் புண்ணியமும் தருமமும் பூரணமாய் விளங்கும்போது, அவர்களைச் சங்கரிக்கக் கூடுமோ? இப்பொழுதோ அவ்வசுரர்கள் ஒருவராலுஞ் சாகாவரம் பெற்றிருக்கிறார்களே! பாபிகளாயினும் சிவார்ச்சனை செய்தால் தாமரை இலையில் தண்ணீர் சேராதது போல அவர்களை விட்டுப் பாவங்கள் விலகுமாதலால் என்ன செய்வது? என்று யோசிக்கலானார் திரிபுராதிகள் சிவபூஜையை மறக்க நமது மாயா சக்தியால் ஏதாவது செய்ய வேண்டும் வேத தருமங்களும் சிவபூஜையும் தூய நடத்தையும் உள்ளவரையிலும். அவ்வசுரர்கள் அழிய மாட்டார்கள். அதற்குள்ள உபாயத்தைச் சிந்திக்க வேண்டும் என்று மாயோன் நினைத்துதேவர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு. ஏகாந்தமாகி இரகசிய சிந்தனையில் மூழ்கினார். 20. மாயரூபி செய்த புறச்சமய உபதேசம் விஷ்ணு மூர்த்தி தன்னிடமிருந்தே மாயாஸ்வரூபமான ஒரு புருஷனைத் தர்மவிக்நத்தை முன்னிட்டு உண்டாக்கினார். அப்புருஷன் மொட்டைத்தலையும் மலினவுடையும் மரத்தால் செய்த குண்டிகையும் மயில்தோகையால் செய்யப்பட்ட குஞ்சமும் ஒரு கையில் ஆடையும் தர்மாயென்னுஞ் சொல்லுமுடையவனாய், விஷ்ணுவைக் கைகுவித்துப் பணிந்து கட்டளைக்காகக் காத்து நின்றான். அவனைப்பார்த்து திருமால் நீ என்னுடலினின்றுதோன்றியதால் என் கட்டளைப்படி நடக்ககடவாய் மாயாமயமான சிரவுதாசார ஸ்மார்த்தாசார விருத்தமானதும் வருணாஸ்ரமமில்லாததும், இவ்வுலகத்திலேயே சுவர்க்க நரகங்கள் உள்ளன வென்பதும் வேதம் பொய் என்றும் சாஸ்திரங்கள் கர்மவாத மென்பதுமாய் உள்ள அக்கிரந்தங்களை நீ என்னிடமே கற்றுத் தேர்ந்து விரிவு படுத்த வேண்டிய ஆற்றலையும் என்னிடமே பெற்றுபல விதமாயைகளையும் என்னிடமிருந்தே சுவாதீனமாக அடைவாய் தோன்றுதல் மறைதல் வசியம்-அவசியம் சிநேகம்-விரோதம் முதலிய விசித்திர வித்தைகள் யாவும் உனக்குக் கைகூடும் என்று கூறி அவற்றை அவனுக்குக் கற்பித்து நீ திரிபுரம் சென்று அவ்வசுரர்களை உன் மாயா வித்தையால் மயக்கி அவர்களுக்கு இந்த சாஸ்திரத்தைக் கற்பித்து, அவர்களிடமிருந்து சிரவுதஸ்மார்த்த ஆசாரங்களை உன் வலிமையால் விக்கிதிரிபுரம் நாசமாகும்படி செய்ய வேண்டும் என்று பணித்து அம்மாயா புருஷனை அனுப்பி வைக்கலானார் அவ்விசுரர்கள் உன்னிடம் வசப்பட்டு நீ சொல்லும் சாஸ்திரத்தை மோகித்தபிறகு உவர் நிலத்தையடைந்து கலியுகம் வரும்வரையில் இருந்து, கலியுகம் வந்த பிறகு உன் சிஷ்யர்களுக்கும் பிறசிஷ்யர்களுக்கும் இக்கிரந்த சாஸ்திரங்களைப் போதித்து இவைகளை விருத்தி செய்யக்கடவாய் இதை நீ செய்வதால் நீயும் என் பதவியை அடைவாய் என்று ஆசிர்வதிக்கவே மாயாரூபியானவன் நான்கு சிஷ்யர்களைப் படைத்து அவர்களுக்கு இவ்விதத்தையை படிப்பித்து பண்டிதர்களாக்கி, விஷ்ணு சமூகத்திடம் வந்து நால்வரூமாக வணங்கினார்கள். மகிழ்வுற்ற மகாவிஷ்ணு நீங்கள் நால்வரும் உங்கள் குருவைப் போலவே வித்தை பயின்று விளங்குவீர்களாக! என்று ஆசிர்வதிக்க அந்நால்வரும் நமக்கு கிடப்பதெல்லாம் தர்மமே என்று சொல்லிக் கொண்டு சந்தைகளை கட்டிய பிராணி நிவாரண குச்சிகளைக் கையிலேந்தி விஷ்ணுவைப் பணிய அவர்களின் கையில் ஒப்புவித்து இவர்களை உன் போலவே நினைத்து காப்பாற்று என்று கூறி உங்களுக்கு பூஜ்யன் ருஷி பதி ஆசார்யன், உபாத்தியாயன் என்னும் இப்பெயர்கள் விளங்கிப் பரவுவதுடன் (ஆரிஹந்) சத்துருவைச் செபிப்பவன் என்னும் என் பெயரும் கூட உனக்கு உண்டாகுக! என்று ஆசிர்வதித்தார். நீங்கள் இப்பெயர்களை உச்சரித்து கொண்டிருங்கள் என்று அவர் கூறியதும் மாயாரூபி நமஸ்கரித்து விடை பெற்று நால்வரையுமுடன் கொண்டு திரிபுரத்திற்கருகில் ஒரு வனத்திலிருந்து மாயையுடையவர்களையும் மயக்கும் மாயை செய்யத் தக்கதான வினோத வித்தைகள் செய்து கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டவர்கள் அம்மதத்தில் போதனை பெற்று அம்மகத்தில் பற்றுக் கொண்டிருந்தார்கள் மாயைக் கண்டோர் மதிமயங்கினார்கள் இப்படி மாயை செய்து வந்த மாயாரூபியின் வித்தைகள் விஸ்தாரமாகிக் கொண்டிருக்கும்போது நாரத மகரிஷி விஷ்ணு மூர்த்தியையடைய விஷ்ணு அவரையும் இந்த ஐவரோடு சேர்ந்துக் கொள்ளும்படிச் சொன்னார் அதனால் மாயாரூபியும் அவர் சிஷ்யர்கள் நால்வரும் அவருடன் நாரதம் ஆக அறுவராக அவர் அசுரர்களின் பட்டணத்தில் பிரவேசித்தார்கள் நாரதர் முதலில் வித்யுன்மாலியைக் கண்டு இவர் மகா புத்திமான் தருமத்தைக் கருமமாகக் கருதுகிறவர். இவரிடம் அநேக தர்மங்கள் உள்ளன. இவருக்குச் சமமானவர் யாருமில்லை நானும் இவர் சிஷ்யனாகி உபதேசம் பெற்றேன். நீயும் இவரிடம் மந்திரோபதேசம் பெற்றுக்கொள்! என்று கூறினார். வித்யுன்மாலி நாரதரை நோக்கி மகா புண்ணியரான தாங்களே உபதேசம் பெற்றுள்ளபோது நானும் பெறுவதுதான் தருமம்! என்று கூறி மாயாரூபியை வணங்கி மகானுபாவரே! நீர் எனக்கு திøக்ஷ செய்யவேண்டும்! என்று வேண்டி நின்றார் மாயாரூபியோ வித்யுன்மாலியை நோக்கி அரசனே! நான் சொல்வதைத் தடையின்றி செய்யவேண்டும்! என்று சொல்வதற்கு முன்னரே அவ்வித்யுன்மாலி தங்கள் கட்டளைப்படியே நான் நடப்பேன்! என்றான் உடனே மாயாரூபி தன் வாயை மறைத்துக் கட்டிக் கொண்டிருந்த வெள்ளைத் துணியை நீக்கி, என் உபதேச மந்திரத்தையடைக! என்று சிவ தருமங்கள் நசிக்கத் தக்கதான சிலவகை மந்திரங்களை உபதேசித்து தீøக்ஷ செய்வித்து உன் பட்டணத்தார் அனைவரும் தீக்ஷõதாரராக மேற்கொண்ட அவ்வரசனும் தன் பிரஜைகளைத் தான் தீøக்ஷ பெற்றது போல் அவர்களும் பெறவேண்டும் என்று கட்டளையிட்டான். இதனால் மாயாரூபியின் சிஷ்யப் பிரஷ்யர்கள் நகர முழுதும் தீøக்ஷ செய்வித்து சமணமதத்தை பரப்பினார்கள். 21. திரிபுராதியர் வஞ்சிக்கப்பட்ட கதை மாயாரூபியானவன் திரிபுரம் முழுதும் சிவமதத்திற்குப் புறம்பான தன் கொள்கைகளைப் பரவிச் செய்து பதிவிரதத் தன்மை முதலிய மாதர் அறநெறிகள் சிரார்த்த கருமங்கள் சிவபூஜை யாகங்கள், தானங்கள், தீர்த்த தரிசனங்கள், வைதீக கர்மங்கள் ஆகியவற்றால் யாதொரு பயனுமில்லை என்று உபதேசித்தான் இதனால் அந்நகரவாசிகள் அவ்வாறே அவற்றை விட்டு ஒழித்தனர் விஷ்ணுவின் கட்டளையை ஏற்று அந்த மாயாரூபி அந்த நகரத்தையடைந்தவுடன் அந்த மாயையோடு மூதேவியும் அப்பட்டணத்தில் குடியேறி விட்டாள் திரிபுரசூரர்கள் தவஞ்செய்து அடைந்த ஐஸ்வரியலக்ஷ்மி பிரமதேவரின் கட்டளைப்படி இனி அங்கிருக்க ஒண்ணாது விலகினாள். மாயாஜாலனாகிய ஜைனனும் நாரதரும் அந்நகத்தாரையெல்லாம் மாயையால் மயக்கினார்கள் அசுரகுல மக்கள் நற்செயல்கள் விட்டு விட்டார்கள். அதைக் கண்டதும் திருமால் இனிக் காரிய சித்தியாகி விடும் என்று உள்ளூர மகிழ்ந்து சிவபெருமானிடம் சென்று மஹாதேவா! பரமாத்ம ஸ்வரூபா! நாராயணாயா! சம்சாரதுக்க நாசத்தைப் பிரமஞான உபதேசித்தால் போக்குபவரே! பிரமானந்த ஸ்வரூபரே உமக்கு நமஸ்காரம்! என்று வழிபட்டு தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை ஜலத்திலிருந்து மூன்றரைகோடி உரு ஜபித்துக் கொண்டிருந்தார் அப்போது தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமானைத் தியானித்து, சர்வ ஸ்வரூபா! மங்களதரா! பாபரஹிதா! நித்யா! நீலகண்டா! நாமரூபக்கிரியா ரஹிதா! ஜலஸ்வரூபா! நமஸ்காரம் நமஸ்காரம் துக்கம் அடையும் போது முறையிடக் கட்டளையிட்ட தேவரீரே எங்களுக்கு உற்றதுணை, உம்மை பூஜித்தாலொழிய எங்கள் துக்கங்கள் ஒழியா பிரகிருதி புருஷர்களுக்கு ஆதியானவரே ஜகத்குருவே ஜகத்துக்களை ரட்சிப்பவரே வேதங்கள் உம்மையே பரம த்மனாகக் கூறுகின்றன. அணுவுக்கு அணுவும் மகத்துக்கு மகத் மாய் உள்ளவர் நீரே! விசுவரூபியானவரே ஆயினும் ஒன்றிலும் அகப்படாதவரே! கோடிசூர்ய பிரகாசரே! சுவயம்புவே நீரே. இந்தத் திரிபுர அசுரர்களை சங்கரித்து, எங்களை ரட்சிக்க வேண்டும் என்று துதித்தார்கள். அப்போது சிவபெருமான், விஷ்ணுமூர்த்தி செய்த ஜெபத்திற்கும் தேவர்கள் செய்த தோத்திரத்திற்கும் மகிழ்ந்து அப்போதே பிரசன்னமாய் திருமாலை ஆலிங்கனஞ் செய்து கொண்டு, அவர்களைப் பார்த்து தேவர்களே விஷ்ணுவினால் செய்யப்பட்ட மாய உபாயமும் நாரதர் உடன்பாடும் எனக்குத் தெரியும் தர்மசூனியர்களாக மாறியிருக்கும் அத்திரிரபுர அசுரர்களின் திரிபுரங்களையும் இனி சம்ஹாரம் செய்வேன் என்று கூறி அந்தர்தானமானார் அவர் கூறியதைக் கேட்டதும் நாராயணன், நான்முகன், இந்திரன் முதலிய வானவர்கள் யாவரும் தங்கள் கைகளைத் தலைமேல் குவித்துக் கும்பிட்டு மகிழ்ந்தார்கள் இந்தச் சரித்தைக் கேட்டனர். சொன்னோர் எழுதியோர் முதலியவர்கள் சகலமான இஷ்ட காரியங்களையும் அடைவார்கள். 22. போருக்குப் புதுமையான ரதம் தேவர்கள், தத்தமது புத்திரர்களுடன் சிவபெருமானின் திருச்சன்னதிக்குச் சென்று, இனி நாம் என்ன செய்யலாம்? எங்கு போகலாம்? இன்னும் என்ன நடக்கப் போகிறதோ? என்று சிலரும் நாம் பாவிகள் என்று வேறு சிலரும் தைத்தியர்களே பாக்கியசாலிகள் என்று சிலரும் சொல்லி தம்மைத்தாமே பழித்துரைத்துக் கொண்டு மீண்டும் சிவசன்னதிக்குள் புகுந்தார்கள். அதுவரை அத்தேவர்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டிருந்த குபோதரன் அவர்கள் இரைச்சலைச் சகிக்காமல் தன் கையில் இருந்த தண்டாயுதத்தால் தேவர்கள் அடித்தான். அதனால் அமரர் யாவரும் அச்சங் கொண்டு ஓடினார்கள் பிறகு இமையவர் யாவரும் முனிவர்கள் முதலிய புண்ணியருக்கும் இத்தகைய விபத்து விளைந்தது தெய்வபலமா என்று அருகிலிருந்த விஷ்ணுவைக் கேட்டார்கள். அதற்குப் பரந்தாமர் அத்தேவர்கள் நோக்கி உங்களுக்கு ஏன் இத்தகைய துக்கம் வந்தது? இத்துன்பத்தை அறவே ஒழியுங்கள் பயன்கள் யாவையும் ஒருங்கே தரத்தக்க சிவ பூஜையை நீங்கள் செய்வீர்களேயானால் உங்களுக்குக் கிடைக்காதது ஏதாவது உண்டோ? சகல கணங்களுக்கும் தலைவராகிய சங்கரர் தயையுடையவராவதற்கான வகையைச் சொல்லுகிறேன் கேளுங்கள். தேவர்களே, நீங்கள் முதலில் பிரணவத்தை உச்சரித்து நம: என்பதைப் பிறகு கூறி சிவாய என்பதை இறுதியில் சுபம் சுபம் குரு குரு என்றும் மேல் சிவாய என்றும் நம என்றும் மீண்டும் ப்ரணவம் சேர்த்து சிவகடாக்ஷம் கிடைக்கும் வரையிலும் ஜெபிக்க வேண்டும் இந்த மந்திரத்தைக் கோடி முறை ஜெப்பித்தால் சிவபெருமான் கிருபையோடு இஷ்டப்பட்டக் காரியங்களை அனுகூலமாக்குவார் என்று உபதேசித்தார் பிறகு தேவர்கள் யாவரும் அந்தரங்கமான ஓர் இடம் சென்று அடைந்து சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டே மந்திரஜபம் செய்தார்கள். இதுபோலக் கோடிமுறைகள் அந்த மந்திரத்தை ஜெபித்த பிறகு சிவபெருமான் கிருபையுடன் தோன்றி. உங்கள் மனோபீஷ்டத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது தேவர்கள் வரங்கள் அனைத்தையும் கொடுப்பவரான சிவபெருமான் பின்வருமாறு துதிக்கலானார்கள் சகல உலகங்களுக்குச் சுகங்களை அளிக்கும் சுவாமி! பரமாத்மரூபி உலக ரக்ஷணயத்துக்காகச் சூலத்தை தரித்தவரே! உயர்வும் இழிவும் இல்லாதவரே பிரமத கணங்களுக்கு இறைவரே, கபர்த்தி முக்கிருதிக்குக் காரணரே, சர்வ வியாபியே நமஸ்காரம் என்று துதித்து தேவர்கள் அவர் முன்பு கைகட்டி வாய்பொத்தி நின்று எங்கள் விஷயத்தில் கிருபையுடையவராக இருந்தால் திரிபுரங்களை அழிக்கவேண்டும் என்று வேண்டினார்கள் அதனால் சிவபெருமான் விசுவகர்மனை அழைத்து, இரதம், தனுசு, பாணங்கள் ஆகியவற்றை உறுதியுள்ளனவாகச் சித்தஞ்செய் அப்படிச் செய்தால் திரிபுரங்கள் சீக்கிரமே அழிந்து விட்டதாகவே கருதலாம் என்று உத்தரவிட்டார் உடனே, விசுவகர்மன் பிரபஞ்சத்தைக் காக்கும் பொருட்டு சர்வதேவ தேஜோமய திவ்விய மங்கள ஸ்வரூபமான இரதம் ஒன்றைச் செய்து முடித்தான். 23. திரிபுர தகனம் சூதமாமுனிவர் மேலும் தொடர்ந்து சொல்லலானார். முனிவர்களே பதினான்கு உலகமயமான திவ்யரதத்தை மிக முயன்று தேவதேவனான மஹாதேவனுக்கு விசுவகர்மன் செய்து முடித்தான், சர்வ பூதமயமாயும் பொன்னால் செய்யப் பட்டதும் வலதுபுரம் சூரியனையும் இடதுபுறம் சந்திரனையும் சக்கரங்களாகக் கொண்டதும் நட்சத்திரங்கள் எல்லாம் வாமபாரிச சக்கரத்திற்கு அலங்காரஞ் செய்யப்பட்டதாயும் ருதுக்கள் ஆறும் கால நிரூபணத்துக்காக இரு சக்கரங்களில் இருக்கத் தக்கதாகவும் ஆகாயமே கொடுமுடியாகவும் மந்திரகிரியே ரதநீடம் ஆகவும் அஸ்தகிரியும் இருசுகள் ஆகவும் வர்ஷங்கள் வேகமாகவும், உத்தராயண தக்ஷணாயனங்கள் ரதஞ் செல்லும் வழியாகவும் சப்தசமுத்திரங்கள் அலங்காரமாகவும் கங்கை முதலிய நதி நங்கையர் சகல ஆபரண பூஷணதாரிகளாய் சாமரை வீசவும், பிரமன் ரதசாரதியாக கடிவாளங்களை ஏந்தவும் பிரணவத்தை குதிரைகளைச் செலுத்தும் கோலாகவும் விந்தமலையைக் குடையாகவும், மந்திர மலையைக் குடைக்கொம்பாகவும் மேருமலையை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் சரஸ்வதி அதிற்கட்டிய மணியாகவும், விஷ்ணு பாணமாகவும் அக்கினி சல்லியமாகவும் வேதங்கள் நான்கும் நான்கு குதிரைகளாகவும் துருவன் முதலிய நட்சத்திரங்கள் அலங்காரமாகவும் பிரமாண்டத்திலுள்ளயாவும் சம்பந்தமுங் கொண்ட திவ்விய ரதத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தான். சிவபெருமான் ஸர்வதேவஸ்வரூபராய் அந்த யுத்த ஸந்நத்தமான இரத்தில் ஆரோகணித்தார். அச்சமயத்தில் முனிவர்கள் ஜயஜய வென்று முழங்கினார்கள் தேவமங்கையர்கள் பல்லாண்டு பாடினார்கள். அந்த ரதம் செல்லும் போது உலகத்தைத் தாங்கும் கூர்ம ரூபியான நாராயணன் இடபரூபத்தை வகித்துவந்து அந்த ரதத்தை தானுஞ் சுமந்தார். அந்த ரதம் மனோவேகத்துடன் நடந்து யுத்தகோலமாகத் திரிபுரமாகிய ராக்ஷஸ வாசஸ்தானத்திற்குச் சென்றது. அதாதஸ்யர தஸ்யாஸ்ய பகவாந்தரணீதர வ்ருஷேந்த்ரரூபி சோததாய ஸ்தாபயாமாஸவைரதம் அச்சமயத்தில் தேவர்களும் மாமுனிவர்களும் சகல உலகங்கட்குஞ் சுகத்தைச் செய்யும் சதாசிவமூர்த்தியைத் தரிசித்துக் களித்து ஜயவென்று புகழ்ந்தார்கள். அந்த ஸ்தோத்திரத்தையும், அவ்வலங்காரத்தையும் நூறு வருஷம் வரை வர்ணித்துச் சொன்னாலும் முடியாது. பார்வதி தேவியும் சிவபெருமானுடன் அவ்விரதத்திலிருந்து திரிபுரசம்ஹாரஞ்செய்து தேவர் முனிவர்கட்குச் சுகம் உண்டாக்குவதற்காகத் தானும் உடன் சென்றாள். விஷ்ணு, இந்திரன், முதலிய இமையவர்கள் தங்கள் தங்கள் வாகனங்களான இரத கஜதுரக விமானாதிகளில் ஏறி ஆயுதபாணிகளாய்ச் சிவபெருமானுக்கு முன்னே திரிபுரத்தை நோக்கி நடந்தார்கள் ஜடைகளையுடைய முனிவர்கள் தண்ட கமண்டலங்களுடன் குதித்து ஆர்ப்பரித்தார்கள். சித்தர் சாரணர் முதலானவர் புஷ்பமாரி பொழிந்தார்கள் சிவபெருமான் யுத்த கோலமாக திரிபுரத்தை நோக்கிச் செல்லும்போது ப்ரக்கிரந்தன் குந்ததந்தன், கம்பன், ப்ரகம்பன், இந்திரன், இந்திர, பகவான், யந்தன், ஹிமகரன், ஸதாட்சன், ஸ்தாயன், கங்கடன், கடபூதனன், த்விசிரன், த்ரிசிரன், ஏகானனன், அஜவக்கிரன்; க்ஷய வக்திரன், கஜவக்திரன் ஊர்த்வவத்திரன் முதலான எண்ணிறந்த லக்ஷக்கணக்குள்ள சிவகணத் தலைவர்கள் ஒரு வார்த்தை சொல்லலானார்கள் ஐயனே தாங்கள் மனதால் நினைத்தவுடனே சகல சராசரங்களையும் சம்ஹரிக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்கும் போது இந்த ஆடம்பரங்கள் எதற்கு? சகலமான போர்படை பரிவாரங்களுடன் கூடி இப்படி இரதத்தில் ஏறி ஆயுதபாணியாய்த் தேவசேனா சமூகத்துடன் வருவானேன் நம்பிக்கை வரவும் தங்கள் கீர்த்தி உலகத்தில் வியாபிக்கவும் பவர் சிவபெருமானேயன்றிப் பிறிதொருவர் இல்லையாதலால் அவர் திரிபுரசம்ஹார நிமித்தமாக வில்லை வளைத்தார். அப்பொழுது திரிபுரங்கள் ஒன்று சேர்ந்தன. அது கண்ட தேவர்கள் பெருஞ் சந்தோஷமடைந்தார்கள். தேவர்கள் முனிவர்கள் சித்தர் முதலிய பதினென் கணங்களும் அஷ்ட மூர்த்தமாக விளங்குஞ் சிவபெருமானைத் துதித்தார்கள். அப்பொழுது பிரம தேவர் முக்கண் பெருமானே! முப்புரங்களும் ஒன்று சேர்ந்துள்ள இந்தச் சமயமே நல்ல சமயம்! சிறிது தாமதமானால் அவைபிரிந்து போகக்கூடும் ஆகையால் சீக்கிரமே பாணத்தை எய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார் சிவபெருமானும் உடனே மேருமலையை வில்லாக வளைத்து வாசுகியான நாணையேறிட்டு விஷ்ணுவான முனையையுடைய பாசுபதாஸ்திரத்தை ஏற்றி, பிரமன் வார்த்தை பயனற்றதென்றும் நினைத்து, திரிபுரத்தை சினந்து பார்க்கத் திக்கென்று தீப்பற்றிப் புரங்கள் மூன்றும் எரிந்தன. பிரமன் நடு நடுங்கிச் சிவபெருமானைப் பார்த்துப் பணிந்து கைகட்டி வாய் பொத்தி எதிர் நின்று தேவதேவா! நீங்கள் பார்த்தவுடனேயே திரிபுரங்கள் சுடுசாம்பலாக போவதாயிற்றே? இந்த திரிபுரதகனத்திற்கு இரதம் முதலிய ஆடம்பரங்களெல்லாம் என்னையொத்தவர்கள் இதில் பணிவிடைகள் புரிந்து புகழ் பெறுவதற்காகவே செய்தீர் இனி இப்பாணத்தை விட்டுவிட வேண்டும் என்று பிரார்த்தித்தார் அதற்கிணங்கச் சிவபெருமான் அந்த அஸ்திரத்தைவிட அது திரிபுரத்தையடைந்து நாசம் செய்து சிவனாரிடம் திரும்பி வந்தது பல பல கோடி தைத்ய சேனைகளுடன் கூடிய திரிபுரங்கள் ஒரே அஸ்திரத்தால் எரிந்தது அது கற்பாந்த காலத்தில் திரிலோகங்களும் ஒரே பிரளய கால ருத்ரனால் அழிக்கப்பட்ட போலிருந்தது அந்தத் திரிபுரத்தில் சிவபூஜை செய்து வந்த பெருந்தவமுனிவர்கள் யாவரும் சிவகணப் பதவி அடைந்தார்கள் அப்பொழுது மகாவிஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் தேவதேவனான சிவபெருமானையும் அவர் வாம பாகத்தில் வீற்றிருக்கும் சகலலோக மாதாவான உமாதேவியையும் பார்த்துப் பயந்தால் ஒன்றும் பேசாது கும்பிட்டு நின்றார்கள். பிரமதேவன் விஷ்ணு இந்திரன் முதலிய இமையவர்கள் ஒன்று சேர்ந்து திரிபுரதகனஞ் செய்த சிவபெருமானை நோக்கி மெய்யன்போடு கைகுவித்து அண்ணலே தேவ தேவனாகவும் பரமேஸ்வரனாகவும் ஜகத் பிரபுவாகவும் உலகத்திற்குச் சுகத்தைச் செய்பவராகவும் விளங்குபவரே! எங்களிடம் கோபந்தணிந்து திருவருள் புரியவேண்டும் பிரணவஸ்வரூபியாயும், குணாஹிதனாகியும், சகுணனாகியும், சதாசிவனாகியும், சாந்தனாகியும் மகேசனாகியும், பிநாகியாகியும், சர்வஜ்ஞனாகியும் சகலத்தையும், ரக்ஷிப்பவனாகியும், ஸத்யோஜாதஸ்வரூபியாகியும் விளங்கும் உமக்கு நமஸ்காரம் என்று தோத்திரம் செய்து அவரவரும் தனித்தனியாக சாஷ்டாங்கமாகப் பணித்து, பகைவரை வென்றமைப் பற்றிப் பெருங்களிப்புடன் சிவத்தியனபரராய் இருந்தார்கள். அப்பொழுது பிரமதேவர் திரிபுர தகனரே எனக்கு உம்மிடம் பிரியாத திடபக்தியும் இதுபோலவே என்றும் சாரதித் தொழிலும் நிலைபெற அருள் பாலிக்க வேண்டும் என்றார். விஷ்ணு, சாஷ்டாங்க மாய்ப் பணிந்து கைகட்டி நின்று சற்குண நிர்குணஸ்வரூபியாகவும் ப்ரகிருதி புருஷ ரூபனாகவும் விசுவாத் மகனாகவும் விளங்கும் உமக்கு நமஸ்காரம் உம்மிடம் எனக்கு என்றும் நீங்காத பக்தியிருந்து வரவேண்டும் என்றார் பிறகுசகல நமஸ்கரித்து புராரியை நோக்கி நுதல் விழிப் பெருமானே எங்களிடம் தயையுடையவராயிருந்து எங்கள் பக்தியை வளர்க்க வேண்டும் என்றார்கள். சிவபெருமான் பெருமகிழ்ச்சியடைந்து தேவர்களே உங்கள் தோத்திரத்திற்கு நாம் மனங்களித்தோம் உங்களுக்கு வேண்டிய வரங்களை கேளுங்கள்! என்றார். மகாதேவா! எங்களுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் காட்சியளித்து எங்கள் கஷ்டங்களைப் போக்கியருள வேண்டும் என்றார்கள். சிவபெருமான் அவ்வாறே ஆகுக வென்றும் உங்களுக்கு முக்தியருள் புரிவோம் என்றும் திருவாய் மலர்ந்தருளிச் சில வரங்களைக் கொடுத்தார், அப்பொழுது நிரீசுவர வாதிகளான சில முண்டித சிரசுடையவர்கள் வந்து தேவர்களைப் பணிந்து எங்கள் கதி என்ன? என்று கேட்டார்கள் அதற்கு திருமால் பிரமன் முதலிய தேவர்கள் நீங்கள் கலியுகம் வரும் வரையில் நிர்ஜ்ஜல பூமியில் வசிக்க வேண்டும் என்று கூறவே அவர்கள் பணிந்து அவ்வாறே சென்றிருந்தார்கள் பிறகு தேவர்கள் தத்தமது இருப்பிடஞ் சேர்ந்தனர். இந்த உபாக்யானததைத் கேட்கிறவன் ஸர்வபீஷ்டமுமடைவான் என்பது திண்ணம். 24. விசுவகர்மா தந்த சிவலிங்கங்கள் பிருமதேவர் அவருடைய சத்தியலோகம் சென்றார் முனிவர்களை அழைத்தார். அவர்களைப் பார்த்து நகைத்த வண்ணம் முனிவர்களே! உங்களுக்கு இஷ்டகாரிய சித்தியும் இன்னும் அநேக நன்மைகளும் உண்டாக வேண்டுமென்றால் என்னுடன் சேர்த்து திருப்பாற்கடலுக்கு வாருங்கள். நான் தத்வரகசியத்தை நன்றாக விசாரித்திருக்கிறேன் என்று சொன்னார். அதைக் கேட்ட தேவர்களும் முனிவர்களும் பிருமதேவருடன் சென்று விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் க்ஷராபதியையடைந்து திருமாலை வணங்கி பரந்தாமா ஜகந்நாதா, பக்தப்பிரியா, லக்ஷ்மிநாயகா, அபயங்கொடுத்து அநுக்ரஹிப்போன், மேகவர்ணா, சதுரபுஜங்களையுடையாய் பீதாம்பரதாரா, சங்கு, சக்கர, கதை, பத்மங்களையளித்தோய், புரு÷ஷாத்தமா, புண்டரீகாஷா கவுஸ்துவாபணா இடர்பட்டவர்களுக்கு இரக்ஷண்யம் அளிப்பவன் நீ தான் ஆதலால் எங்கள் விஷயத்திலும் அபயமளித்திட வேண்டும். சந்தோஷத்துடன் பிரசன்னமாக வேண்டும். ஜய ஜய வென்று துதித்தார்கள் அதனால் மனங்குளிர்ந்த கார்மேக வண்ணர் அவருடைய நிஜ வடிவம் எடுத்து அவர்கள் முன்னால் தோற்றமளித்தார்! அதைக் கண்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர், அவர்களை திருமால் நோக்கி தேவர்களே, நீங்கள் என்னை நாடி வந்த நோக்கம் என்ன? என்று கேட்டார் அதற்கு பிரமதேவர் வைகுந்தவாசா உம் குளுமையான கிருபையால் சகல துன்பங்களும் ஒழிந்தன. ஆனாலும் அனைவருக்கும் இதமுண்டாகும்படி ஒன்று உம்மிடம் கேட்க விரும்புகிறோம். நாள்தோறும் எவரைச் சேவித்தால் எல்லாத் துயரங்களும் நீங்கி நித்தமான சுகங் கிடைக்கும் நானும் இவ்வமையவர்களும் எவரை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் பெறுவோம் என்று கேட்டார். அவரை விஷ்ணு பரமாத்மா புன்முறுவலோடு நோக்கி பிரமனே! உனக்கு இதனை நான் ஆதியிலேயே அறிவித்திகுக்கிறேன், நீ அதைக் கேட்டு அறிந்திருக்கிறாய் ஆயினும் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்துகிறேன் பிரமனே! பூஜிக்கத்தக்கப் பொருள் உனக்குடைதாயிருந்தும் என்னைக் கேட்கிறாய் சகலலோகத்திலும் சங்கரர்தானே பூஜிக்க வேண்டிய பதி? அவரன்றி பிறனொருவன் உண்டோ? இவ்வுண்மையை உனக்கும் எனக்கும் முன்பொரு சமயம் சிவபெருமானே சொல்லியிருக்கிறாரே. அதற்குத் திருஷ்டாந்தமாகத் தாரகாசுரத் திரிபுராதிகளை சிவபக்தியிலிருந்து மறக்கச் செய்து என்னால் சிருஷ்டிக்கப்பட்ட மாயாரூபிகளின் மயக்கத்தில் சுட்டுண்டு அவ்வசுரர்கள் மாண்டு போனதையும் நீ அறிவாயல்லவா? ஆகையால் தேவர்களான நீங்கள் விரும்பும் நித்தியமான சுகத்தை அடைய அதி பத்தி சிரவணத்தோடு, சிவலிங்கமான ரூபியான சிவபெருமானைப் பூஜைசெய்து வாருங்கள், நானும் சாட்சாத் சிவபெருமானைப் பூஜித்து வருவதால்தான், இப்படி உங்கள் தோத்திரங்களுக்கெல்லாம் உரியவனாக இருக்கிறேனேயன்றி மற்றபடியல்ல உலகில் எந்தப் பொருளையும் சிவலிங்க ரூபமாகச் செய்தால் அதில் சிவபெருமான் தோற்றமளிக்கிறார் . ஆகையால், இஷ்ட சித்தியடைய விரும்பும் யாவரும் சிவலிங்கார்ச்சனை செய்ய வேண்டும் தேவர்களும் வைத்தியர்களும் தானவரும் நாமும் எல்லோரும் சிவலிங்கபூஜை செய்ய வேண்டியவர்களே பிரமனே நீர் இதை அறிந்திருந்து மறந்ததும் ஏனோ? நீ இனிமேலாவது எவ்வகையிலாவது சிவலிங்க பூஜைசெய்து வரவேண்டும். எந்தக் காலத்திலும் சிவத்தியானத்திலேயே மூழ்கியிருக்க வேண்டும் எப்பொழுது சிவத்தியானத்தை மறக்கிறோமோ அப்பொழுதே நமக்கு இடையூறு நெருங்கும் அதுவே அதர்மமாகும். அதுவே விக்னகாலம். அதுவே மூடத்தனம் சிவபக்தி எவருக்குண்டோ , சிவஸ்மரணை எவர் செய்வாரோ அவர்கள் துயரங்களின்றி வாழ்வார்கள் மனோகரமான வீடுகள், பலவிதமான ஆபரணங்கள், சுந்தர அழகான பெண்கள், போது மென்ற அளவு தனம் புத்திர பாக்கிய சந்ததி தேகாரோக்கியம், பலவித சீனி சீனாம்பரங்கள் இரதகஜ துரகம் முதலான வாகனங்கள். பெரும்புகழ் ஸ்வர்க்கபோகம், தீர்க்காயுள், நல்ல சிநேகிதர்கள், முக்திபலம் முதலானவற்றை விரும்புகிறவர்கள் எப்போதும் சிவபகவானை சிவலிங்க மூர்த்தத்தில் பூஜிக்க வேண்டும். பக்தியுடன் லிங்கபூஜை செய்கிறவன் புண்ணிய கருமங்களைச் செய்ய நேரிடுமேயன்றி பாவத்தால் பீடிக்கப்படமாட்டான் என்று மகாவிஷ்ணு விவரித்தார். இம்மகா ஆலோசனையைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களும் முனிவர்களும் திருமாலை வணங்கி நாங்கள் பூஜைசெய்ய லிங்கம் கிடைக்காததால் இஷ்டகாமியங்களெல்லாம் . எங்களுக்குக் கைகூடச் சிவலிங்கங்களை பிரஸாதிக்க வேண்டும். என்று பிரார்த்தித்தார்கள். விஷ்ணுவும் பிரமதேவரும் யோசித்து விசுவகர்மனை அழைத்து இத்தேவர்கட்கெல்லாம் அவரவர் கவுரவத்திற் கேற்றாற்போல் யோக்கியமான லிங்கங்களை செய்து கொடு என்று சொன்னார்கள். விசுவகர்மனும் அப்படியே அவர்களுக்கு லிங்கங்களைக் கொடுத்தான். இந்திரனுக்குப் பதுமராக லிங்கத்தையும் குபேரனுக்கு சுவர்ண(பொன்) லிங்கத்தையும் இமயனுக்கு கோமேதக லிங்கத்தையும் வருணனுக்கு நீலலிங்கத்தையும், விஷ்ணுவுக்கு இந்திரலிங்கத்தையும், பிரமனுக்கு சுவர்ண லிங்கத்தையும் விச்சுவ தேவர்களுக்கு பார்த்திவ லிங்கத்தையும் அஸ்வினி தேவர்களுக்கு ஸ்திரீகளுக்கும் ஸ்படிக லிங்கத்தையும் இலக்குமிதேவிக்கு தாமிர லிங்கத்தையும் துவாசாதித்தர்களுக்கும் சோமனுக்கும் முத்துலிங்கத்தையும் வழங்கினார் வஜ்ரலிங்கத்தை அக்கினியும், சந்தன லிங்கத்தை மயனும் பவளலிங்கத்தை அநந்தன் முதலிய ஸர்ப்பராஜர்களும், கோமயலிங்கத்தை தைத்தியரும் இராக்ஷஸரும் இரும்பு லிங்கத்தைப் பைசாசங்களும், நவநீத லிங்கத்தைச் சசி முதலிய ஸ்திரீகளால் பூஜிக்கப்பட்ட பார்வதிதேவியும், தாருலிங்கத்தை நிருதியும், பஸ்மலிங்கத்தை யோகியும், மாவுலிங்கத்தைச் சூரியன் மனைவியான சாயா தேவியும் இரத்தின லிங்கத்தை சரசுவதி தேவியும், தயிரால் செய்த லிங்கத்தை யக்ஷர்களும் பெறும்படி விசுவகர்மன் கொடுத்தான். அவற்றை வாங்கிய தேவர்கள், முனிவர்கள், பிரமாவிஷ்ணு யக்ஷர் முதலானவர்கள் தமது காரியசித்தியின் பொருட்டு அந்த சிவலிங்கங்களை விதிப்படி அருச்சித்தார்கள், விஷ்ணுபகவான் பிருமன் முதலிய தேவர்களுக்குப் பூஜாவிதியைச் சொல்லியருளினார். அவர்கள் ஆனந்தமுற்றுத் தங்கள் வாசஸ்தானத்தையடைந்தார்கள். விஷ்ணுமூர்த்தியும், அந்தர்த்தானமாயினார். பிருமா சத்யலோகமடைந்து, முன்பு தன்னுடன் க்ஷீராப்திக்கு வராத தேவர்கட்கும் சிவபூஜாவிதியை முறைப்படி உபதேசித்தார். 25. பாஹ்ய ஆந்தரலிங்கங்கள் நைமிசாரண்ணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி ஞான வள்ளலே! பிரமதேவர், சத்தியலோகஞ் சென்ற பிறகு நடந்தலிருத்தாந்தங்களையும், பிரமதேவர் சிவபூஜா விதியை அவர்களுக்கு உபதேசித்ததையும், எங்களுக்குச் சொல்லியருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள சூதமுனிவர், உலகத்திலிருப்பவர் அனைவரும் சுகமடைய வேண்டிய விஷயமாக என்னைக் கேட்டீர்கள் இவ்விஷயத்தை முன்பு ஒரு காலத்தில் வியாச முனிவர் சநத்குமார முனிவரைக் கேட்க அதற்கு சநத்குமாரர் சொல்லியபடியே வியாசர் எனக்குச் சொல்லியதை உங்களுக்கு சொல்லுகிறேன் என்று கூறலானார். பிருமதேவர் சத்தியலோகமடைந்த பிறகு தேவர், முனிவர் முதலானோரை நோக்கி சிவபூஜா விதியைச் சொல்லுகிறேன் கேட்க வேண்டும். சகல ஜன்மங்களிலும் துர்லபமான மாநுட ஜன்மத்தில் நற்குலத்தில் அங்கக்கேடின்றி உதிப்பது அருமை. அத்தகைய அரிய பிறவியையடைந்த பிறகு தன் குலத்திற்கேற்ற காரியங்களைச் செய்ய வேண்டுமே தவிர, அளவு கடந்திருந்தால் அக்கருமத்திற்குத் தக்க பலன் கிட்டாது, தன் ஞானத்திற்கு எட்டாத காரியங்களில் யாருமே தலையிடக் கூடாது. கர்மயாகங்கள் பல்லாயிரஞ் செய்வதைக் காட்டிலும் தீர்த்த யாத்திரை முதலான தபோயாகஞ் சிறந்தது. தபோயாகங்கள் பல்லாயிரத்திலும் ஜெபயாகஞ் சிறந்தது. அந்த ஜப யாகங்கள் பல்லாயிரத்தையும் விட மான்சீக தியானயாகம் சிறந்தது. தியான யாகத்திலுஞ் சிறந்தது பிறிதொன்றுமில்லை. அதுவே ஞானமார்க்கத்திற்குக் காரணம் சர்வ வியாபகமாவுள்ள பரம்பிரம வஸ்துவை யோக புருஷன் தன் தியானத்தினால் தன் இதயத்தில் தரிசிக்கிறான். தியான யாகத்தில் இருப்பவனுக்குப் பரமசிவன் எப்பொழுதும் அருகிலேயே இருப்பார். அவன் பிரம ஸ்வரூபமாயிருப்பதால் சத்கருமங்களை விடுத்தாலும் பிராய சித்தம் வேண்டுவதில்லை, சுகம், துக்கம், அதர்மம், ஜபம், ஓமம், தியானம், யோகம் முதலியவெல்லாம் அவனுக்கு அவசியமில்லை பரமானந்தத்தை உண்டு செய்வதும் பரிசுத்தமானதும், நாசமில்லாததும் நிஷ்களமானதும், ஸர்வ பரிபூரணமாயுள்ளதுமான சிவலிங்கத்தை இதயத்திலிருப்பதாக அவன் எண்ணுகிறான். இந்த லிங்கம் பாஹ்யலிங்கம் ஆந்தலிங்கம் என இரு வகைப்படும். அவற்றுள் பாஹ்யம் என்பது ஸ்தூலமாக (பருமையாக) கண்ணுக்குப் புலப்படுவது ஆந்தரம்-இருதயத்தில் சூட்சமாக (நுட்பமாக) உள்ளது. காம்யாகத்திலிருக்கும் எல்லோரும் பாஹ்பலிங்கார்ச்சனை செய்ய வேண்டும். ஏனெனில் அஞ்ஞானிகளுக்கெல்லாம் பக்தியுண்டாவதற்காக ஸ்தூலத்தில் சூட்சமத்தை பாவனை செய்து பூஜிக்க வேண்டும். ஞானிகளுக்குத் தோஷரஹிதமான சூட்சமலிங்கம் பிரத்யட்சமாகவிருக்கும் அஞ்ஞானிகள் அனைவரும் மண் மரம் இவற்றால் செய்யப்பட்ட லிங்கங்களை பூஜிக்க வேண்டும். தத்வார்த்தங்களை உணர்ந்தவர்கள் இம் மிருத்லிங்கம் (புற்றுமண்லிங்கம்) முதலியவற்றால் பயமின்றிச் சகலமுஞ்சிவ மயம் என்று பாவித்து அகண்ட பரிபூரணமாக விளங்குகிறவன் சிவபெருமானென்று தெரிந்திருப்பார்கள். ஞானிக்கு விக்கிரக ஆராதனை (உருவ வழிபாடு) வேண்டியதில்லை. இத்தகைய ஞானம் இல்லாதவனுக்குப் பிரதிமாகல்பனஞ் செய்து கொள்ள வேண்டுவது அவசியம் உயர்விடத்தில் செல்ல வேண்டியவனுக்கு சொபானம் (மடி) இன்றியமையாதது போல நிர்குணமான சிவலிங்கப் பிராப்தியையடைய வேண்டிய அஞ்ஞானிக்கே பிரதிமா பூஜை விக்கிரக வழிபாடு சொல்லப்பட்டிருக்கிறது சகுண பூஜையால் நிர்குணமான சிவப்பிராப்தி யுண்டாகும். இவ்வாறே சகல தேவதாப் பிரதிமைகளும் அவரவர் கோரிக்கையின்படி இஷ்டசித்திகளைக் கொடுக்கின்றன பூஜை செய்பவன் பூஜை செய்கிறேன் என்பதேயில்லாமல் பக்திபரவசமாகி அவனுக்கு ஞானோதியம் உண்டாகும்வரை பூஜிக்க வேண்டும். ஞானமில்லாமல் செய்யும் பூஜையால் பூஜை செய்யும் சந்தனம்-புஷ்பம்-தீர்த்தம் நிவேதனம் ஆகிய அனைத்தும் பயனற்றதாகும் சிரத்தையேதுமில்லாமல் பிரயாமையின்றி பூஜை செய்கிறவனின் பூஜை வியர்த்தமாவதுமின்றி அவனும் அதோலோகப் பிராப்தியடைவான். இதனால் உங்களுக்கு மேலும் பாஹ்யலிங்க பூஜையைச் சொல்லுகிறேன் என்று பிரமதேவர் சொல்லலானார், தேவர்களே ஸ்வஜாதி யுசிதமான கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு எந்தெந்த விக்கிரகத்தில் தனக்குப் பக்தியுண்டாகுமோ அந்தந்தப் பிரதிமையை பூஜை செய்ய வேண்டும். பூஜை தானம் முதலான நற்கருமங்கள் செய்யாவிட்டால் பாதகம் ஒழியாது. பாதகம் ஒழியாவிட்டால் சித்தியுண்டாகாது. மாசுபடிந்த ஆடைகளை படிகாரத்தில் ஊறவைத்த பிறகு தோய்த்துச் சாயம் போட்டால் அந்தச் சாயம் அதில் லேசாக பிடிப்பது போல பாதங்களை ஸ்தூல பூஜையாகிய பிரதிமா பூஜைபோல் போக்கின பிறகு! சூட்சம பூஜையால் ஞானமடைந்து விஞ்ஞானிகளாவர் அந்த விஞ்ஞானத்திற்கு ஞானமும் ஞானத்திற்கு த்ருடபக்தியும், பக்திக்குப் பிரதிமா பூஜையும், பிரதிமா பூஜைக்கு சத்குருவும் சத்குருவையடைவதற்கு சத்சாங்கத்யமும் (நல்லுறவு) காரணமாகும் சத்சாங்கயத்தால் சத்குருவையடைந்து சத்குருவால் மந்தராதிக்க பூஜையும் அந்த பூஜையால் பக்தியும், பக்தியால் ஞானமும் ஞானத்தால் விஞ்ஞானமும் உண்டாவது சத்தியம், விஞ்ஞானிக்கு நான் அவன் என்றும், குமாரன் பிறன் என்றும் சிநேகிதன் பகைவன் என்றும்; மானம் அவமானம் என்றும் லாப நஷ்டம், ஜெயம் அபஜெயம் என்றும் பேதமின்றிச் சம்புத்தி உண்டாகும். இத்தகையச் சொந்த புத்தியற்றவன் சிவரூபியாவான், இப்படிப்பட்ட விஞ்ஞானியாக எல்லோரும் ஆவதில்லை, கோடியில் ஒருவனே ஆகிறான் அப்படி உள்ளவனை ஒருவன் கண்டதுமே அவனுடைய சகல பாபங்களும் ஒழிந்துவிடும். பிரதிமாரூபனேதேவர்கள் கூட ஒருவனைப் புனிதப்படுத்த அநேக காலமாகும். விஞ்ஞானியோ அவனைக்கண்ட பொழுதே புனிதமாக்குவான். இல்லறவாழ்க்கையில் இருக்கும் வரையில் பிரதிமா பூஜை செய்ய வேண்டும். சிவரூபமாவது தேவிரூபமாவது, விஷ்ணுரூபமாவது சூரியரூபமாவது கணபதிரூபமாவது அல்லது இந்த ஐந்து ரூபத்தையாவது சகலக் காரணகனான சிவலிங்கப் பெருமானையாவது பூஜிக்க வேண்டும். மரத்தின் வேரில்தான் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்பொழுது தான் அது கிளைகளுக்கும் இலைகளுக்கும் பாயும் அதற்கு மாறாகக் கிளையின் மேல் நீர் வார்த்தால் அது மரத்திற்குப் பயனளிக்காது அது போலவே மரத்தின் வேர் போலுள்ள மூல காரணனான சிவபெருமானைப் பூஜித்தால் அது சகல தேவர்களையும் சார்ந்து திருப்தியைத் தரும் சிவபூஜை செய்யாமல் மற்ற தேவர்களைப் பூஜிப்பது மரக்கிளையின் மேல் சொரிய்யப்படும் நீருக்கு ஒப்பாகும் த்ரியம்பகனாகிய சிவபெருமானைப் பூஜித்தால் கோரிக்கைகள் அனைத்தும் சித்தியாகும் என்று பிரமதேவர் கூறினார். 26. நித்திய கருமங்கள் கூறல் சூதர் சொல்லலானார். ப்ராம்ஹ முகூர்த்தத்தில் எழுந்து விஷ்ணுவையும் குருவையும் அன்புடன் துதித்து தேக சுத்தி செய்து கால்கைகள் கழுவி சூரிய உதயத்திற்கு முன் தந்ததாவனஞ் செய்து முகத்தை இரு கைகளாலும் நீர் கொண்டு பதினாறு முறைகள் கழுவி நதி முதலியவற்றில் தேசகால விரோதமின்றி ஸ்நானஞ் செய்ய வேண்டியது(ஆதிவாரம்-சிரார்த்ததினம்-சூரிய சங்கராந்தி கிரகணம். மகாதானஞ் செய்யும் சமயம் புண்ணிய காலம், உபவாசதினம் அசவுச தினங்கள் இந்தச் சமயங்களில் உஷ்ணஜல ஸ்நானம் செய்யக் கூடாது) எண்ணை தேய்த்து நீராட வேண்டியவர்கள் முறையே ஆதிவாரம்(ஞாயிற்றுக் கிழமை) ரோகத்தையும் சோமவாரம்(திங்கள்) தேஜசையும், அங்காரகவாரம்(செவ்வாய்) மரணத்தையும் புதவாரம் லக்ஷ்மிகடாட்சத்தையும் குருவாரம்(விழாயன்) தரித்திரத் தன்மையையும் சுக்ரவாரம்(வெள்ளிக்கிழமை) அசுகத்தையும் சனிவாரம் சுகத்தையும், உண்டாக்குமாதலால் நிசித்த வாரங்களில் (விலக்கு கிழமைகளில்) எண்ணை ஸ்நானம் செய்யக் கூடாது. அப்படி நிசித்த (விலக்கு) வாரங்களில் ஸ்நானம் செய்ய நேரிட்டால், ஆதிவாரத்தில் பூவும், மங்கள வாரத்தில் மண்ணும் குரு வாரத்தில் அருகம் புல்லும் சுக்ரவாரத்தில் ஜலத்துளியும் எண்ணையில் சேர்த்து அப்பியங்கனம் செய்து கொள்ள வேண்டும். நித்யாப்யங்கணஞ் செய்யும் நியதியையுடைவன் பரிமளவஸ்துக்கள் சேர்ந்த எண்ணையிட்டுக் கொள்ளலாம், ஸ்ரார்த்தம்-கிரஹணம் உபவாசம் பிரதமை ஆகிய தினங்களில் கடுகெண்ணெயை உபயோகிக்கலாம். தேசகாரிங்களையறிந்து சாஸ்திரப்படி ஸ்நானம் செய்கையில் வடக்கு திசையாயாவது கிழக்குத் திசையையாவது நோக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். முதல் நாளில் உடுத்திய உடையையும் இராத்திரி உடுத்தியதையும் பிறர் உடுத்திய ஆடைகளையும் கட்டிக்கொண்டு நீராடக் கூடாது. நல்ல உடைகளை உடுத்தி கைக்கால் கழுவி ஆசமனஞ் செய்து(நீராடும் தண்ணிரைக்கங்காதி தீர்த்தங்களாகப் பாவனை செய்து துதித்து) சங்கல்பங்கூறி உடலை நனைத்து மிருத்திகா ஸ்நானம் செய்து உடலைத் துடைத்து மடிவஸ்திரங்கட்டிக் கொண்டு ஆசமனஞ் செய்து கோமயம் முதலியவற்றால் சுத்தி செய்த நல்லவிடத்தில் நல்ல மரத்தால் செய்த ஆசனத்தில் கம்பளம் முதலிய சித்ராசனமிட்டு, அதன் மேல் பட்டாடை பரப்பி அதில் உட்கார வேண்டும் அப்படிப்பட்ட ஆசனஞ் கிடைக்காவிட்டால் மான்தோலின் மேலிருந்து த்ரிபுண்டரம் ஊர்த்துவ புண்டரம் அர்த்த சந்திரம் வமிசபத்திரம்-பாரிஜாத புஷ்பம் ஆகிய இவ்வைந்தில் தமக்குரிய ஒரு வகையாகத் தரித்துக் கொள்ளவும் திரிபுண்டர ஊர்த்துவ புண்டரங்கள் சிவ பக்தர்களுக்குரியவை பிரம்மக்ஷத்திரிய வைசியர்கள் நான்கு வகையான திலகங்களை அணியலாம். அர்த்த சந்திரம் ஊர்த்துவ புண்டரமாகிய இரண்டும் சூத்திரர்க்கு உரியவை வத்சபத்ரம் போன்ற திலகம் விஷ்ணு பக்தர்கள் தரிக்க வேண்டும். இவ்வாறு தரித்தால் ஜபம், தபம், தானம் எல்லாம் சபலமாகும், பஸ்மம் (திருநீறு) முதலானது இல்லாவிட்டால் ஜலத்தாலாவது திலகந்தரிக்க வேண்டும். பிறகு தங்கள் குலத்திற்கேற்ற அநுஷ்டானங்களைச் செய்து கொண்டு சிவார்ச்சனை செய்ய வேண்டும். எப்படியென்றால் மந்திர பூர்வமாக மூன்று தரம் அல்லது ஒரு தரம் ஆசமனஞ் செய்து கொண்டு வந்து கங்கையைத் துதித்து (ஆத்மதத்வாய சுவாஹா சிவதத்துவாய சுவாஹா வித்தியாத தத்துவாய சுவாஹா) என்று ஆசமனஞ் செய்து சங்கல்பித்து பூஜாபாத்ர ஜலத்தைக் கொண்டு சிவ பூஜைக்கு வேண்டிய உபகாரணங்களைத் தன் சக்திக்கேற்பச் சேகரித்து மனதைத் த்ருடப்படுத்தி லிங்கஸ்ய ஆக்நேய பாகஸ்த ப்ரகாதி முகமர் ச்சயேத் என்று சாஸ்திரப்படி அக்கினி திசையிலிருக்கச் சிவலிங்கத்தை வைத்து மந்திர குருவைத் தியானித்து அவரைப் பூஜித்து மனதில் குருகடாக்ஷத்தைக் கருதி, மீண்டும் தன் மனவிருப்பத்தைச் சேர்த்துச் சங்கல்பங் கூறி, பரிவார தேவர்களுடன் சிவனைப் பூஜிக்க வேண்டும் சங்கம் சக்ரம் தேனு முதலிய முத்திரைகளில் ஒன்றைக்காட்டி முதலில் சித்தி, புத்தி, சமேதராகியும் லக்ஷன், லாபன், என்னும் புதல்வர்களைவுடைய வர கவும் விளங்கும் விநாயகக் கடவுளை சித்தூர வர்ணமான மலர்களால் பூஜித்து நமஸ்கரித்து க்ஷமார்பணம் செய்து நந்திகேசுவரரை சிவகடாக்ஷங் கைகூடும்படி பூஜித்து கைகூப்பி வணங்கி துவார பாலகராகிய மகாதரரை பூஜித்து பார்வதி தேவியை சந்தன, குங்குமம், தூப தீப நைவேத்தியங்களால் அர்ச்சித்துப் பணிந்து சிவசன்னதி கல்பித்துக் கொண்டு தன் வீட்டில் பாத்திரம் பொன், வெள்ளி, இரத்தினம், முதலியவற்றால் செய்யப்பட்ட சரலிங்கமூர்த்தியையாவது ஸ்தாபித லிங்கமூர்த்தியையாவது அன்புடன் பூஜிக்கலாம் இதற்குப் பிராணப் பிரதிஷ்டையும் பூசித்தி பூதசுத்திகளுஞ் செய்து கொண்டு திக்பாலகர்களைப் பூஜிக்க வேண்டும் மூல மந்திரத்தாலேயே சிவபூஜை செய்ய வேண்டும் வீட்டில் சிவபூஜை செய்கையில் துவாரபாலக பூஜாநியமம் வேண்டியதில்லை ஆனால் பரிவாரங்களோடு கூடிய சிவபெருமானே என்று பாவனாமாத்திரமாகப் பூஜை செய்ய வேண்டியது பத்மாசனமாவது பத்ராசனமாவது உத்தானாசமாவது. பர்யநிகாசனமாவது செய்து உட்கார்ந்து ஆதிசைவர்களைக் கொண்டாவது தானேயாவது பூஜை செய்யவும் அர்க்யம் பாத்யம் கொடுத்து தண்ணீரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் நிர்ச்சலமான மனதுடன் இனிச் சொல்லப்படும் மந்திரத்தால் ஆவாஹனஞ் செய்ய வேண்டும். கைலாச ஸிகரஸ்தஞ்ச பார்வதீபதி முத்தமம் யதோக் த்ரூபிணம் தேவம் நிர்குணம் குணரூபிணம் பஞ்சவக்த்ரம் தஸ்புஜ த்ரிநேத்ரம் வ்ருஷபத்வஜம் கர்பூர கௌரகம் திவ்யம் சந்த்ர மௌளிம்கபர் திநம வ்யாக்ரசர் மோத்தரீயஞ்ச கஜசர்மாம் பர்ம்ஸுபம் வாசுக்யாதி பரீதாங்கம் பிநாகாதி விபூஷிதம் கபாலட மருயுக்தஞ்ச கண்டே கரள ஸோபிதம் ஸித்தயோஷ் டௌச யஸ்யாக்ரே ந்ருத்யந் தீஹ நிரந்தரம் ஜயஜயேதி ஸப்தைஸ்ச ஸேவிதம் நிஜபக்தகை; தேஜஸா துஸ்ஸஹேநைவஸம்பத்தம் தேவ ஸேவிதம் ஸரண்யம் ஸர்வஸத் வாநாம் ப்ரஸந்நமுக பங்கஜம் வேதஸாஸ்த்ரைர் யதாகீதம் ஸிவமாவாஹயாம் யஹ; (இதன் தமிழ் பொருள்) கைலாச சிகரத்தில் இருப்பவரும், பார்வதி நாயகரும், உத்தமரும், நிஜஸ்வரூபியும், நிர்குணரும். சுகுணரும், ஐந்து முகங்களும் பத்து கரங்களும், திரிநேத்திரங்களும் ரிஷபக்கொடியும், கற்பூரம் போன்ற வெள்ளிய திருமேனியும் பிரகாசமும், சந்திர சேகரமும் சடையும் புலித்தோல் ஆடையும் யானைத் தோலுடையும் சுந்தர வடிவமும் வாசுகியாதி சர்ப்பங்கள், பிநாகயல்லாதிவியவற்றால் அலங்காரமும் கபால டமருகமும் நீலகண்டமும், அணிமாதியஷ்ட சித்திகளின் நிருத்தமுடைய சன்னதியும் நிஜபக்தர்கள் ஜயஜயதொனியோடு சேவித்தலும் தேஜோரூபியும்! தேவர்களால் சேவையும் சர்வரக்ஷணமும், பிரசன்ன முகபதுமமும் வேதசாஸ்திரங்களாற் புகழப்படுவதுமுடைய சிவபெருமானை ஆவாஹநஞ் செய்கிறேன்! என்பதாகும். 27. சிவபூஜா விதிமுறைகள் சூதமுனிவர் சொல்லலானார். பூஜா பாத்திரத்திலிருக்கும் ஜலத்தால் இலிங்கமூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம். மகாபிஷேகம் செய்யும் பொழுது சேகரித்து அருகே வைத்துள்ள வேறு நன்னீராலும் அபிஷேகிக்கலாம் முன் அத்தியாயத்தில் சொல்லிய மந்திரம் சொல்லமுடியாவிட்டால் (யதோக்த்ரூபிணம் ஸம்பும் சிவமாவாஹயாம்யஹம்) மேற்கூறிய முறைப்படியே சிவபெருமானை ஆவாஹனம் செய்கிறேனென்று இலங்கிமூர்த்தத்தில் சிவபெருமான் இருப்பதாகப் பாவித்து விதிப்படி உபசாரங்கள் செய்ய வேண்டும். முன் சொல்லிய தோத்திரத்தைக் கூறி ஆசனங் கொடுக்க வேண்டும். சிவாய நம சொல்லி ÷ஷாட ச உபசாரங்களைச் செய்ய வேண்டும். அப்படியே கூறி சர்வவியாபியான பெருமானுக்குப் பாத்யம் ஆசமனங் கொடுத்து வேதமந்திரங்களால் பஞ்சாமிர்தமும் தான் விரும்பிய பழங்களும் அத்தர் பனிநீர் சந்தன முதலிய பரிமள திரவியங்களும் சுத்த ஜலமும் அபிஷேகித்து, தான் கையெட்டுந் தூரத்திலிருந்து சந்தனாபிஷேகஞ் செய்து ஆயிரத்தெட்டு அல்லது நூற்றெட்டுத் தாரைகளையுடைய ஜல பூரணகும்பத்தை மேலே கட்டி வேத மந்திரங்களாலாவது ஆறு மந்திரங்களோடு கூடிய ருத்திரஸுக்த மந்திரத்தாலாவது ஏகாதச ருத்திர மந்திரத்தாலாவது தன்னால் கூடியவரையில் அபிஷேகித்து வஸ்திரத்தால் ஒத்தி, ஆசமநியம் (உட்கொள்ளல் நீர்) கொடுத்து ஆடை தரிக்கச் செய்து! யஜ்ஞோபவீதமும் (பூணூல்) சமர்ப்பித்து. சந்தனம் வெள்ளை யக்ஷதை இவற்றையிட்டு (திலாஸ்சைவ யவாவாபி கோதூமா மாஷகாஸ்ததா, அர்ப்பணீமா-ஸிவாயைவமந்த்ரைர் நாநாவிதைரபி(14) என்ற படி அக்ஷதையாக எள்ளாயினும் எவையாயினும் கோதுமையாயினும் உளுந்தாயினும் தரிக்கலாம். எள் பாபத்தைப் போக்கு மென்றும்யவை (கோதுமையில் ஒருவகை) அன்னபாக்கியமும் கோதுமை தேகபுஷ்டியும் மாஷம்(உளுந்து) வம்சவிருத்தியுஞ் செய்யும் என்பார்கள்-பிரணவரத் நமோந் தகமாகிய சிவமந்திரத்தால் தாமரை, கொன்றை ஆத்தி, மல்லிகை ரோஜா, வில்வம், தர்ப்பை, அறுகு, கரூவூமத்தை துளசி இலை போன்ற தனக்குக் கிடைத்த புஷ்பங்களையோ அல்லது பத்திரங்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். வீட்டிலிருக்கும் சரலிங்கத்தையாவது அசரலிங்கத்தையாவது தானும் சன்னிதானத்தில் இருக்கும் பரார்த்த லிங்கத்தை ஆதிசைவரைக் கொண்டும் மேற்சொன்னவாறு பூஜை செய்த பிறகு பரிமளம் பொருந்திய குங்கிலியம், அகர், சந்தனத்தூள், சாம்பிராணி முதலியவற்றைத் தூபமிட்டு, ஏகார்த்தி, திடயார்த்தி, த்ரியார்த்தி, சதுரார்த்தி பஞ்சார்த்தி என்ற தீபங்களைக் கட்டி திடதீபங்களைக் காட்டி(ரூபந்தேஹி ஜயந்தேஹி பாக்யம் பகவான் தேஹமே புத்தி முக்தி பலம் தேஹி க்ருஹீத்வார்ச்யம் ஸிவாதுநா) பரமேஸ்வரா! நான் தேவரீருக்குச் சமர்ப்பிக்கும் அர்க்கியத்தை ஏற்று எனக்குச் சவுந்தர்யத்தையும் ஜயத்தையும் பாக்கியத்தையும் கொடுக்க வேண்டும் புத்தி, முக்தி பலவிதமான நிவேதனங்களைச் செய்து ஐந்து வர்த்திகளையுடைய தட்டுத்தீபத்தைக் காட்டி கர்ப்பூரதீபராதனை செய்து தாம்பூலம் கொடுத்து வலம் வந்து வணங்கி, குரு உபதேசித்தப்படி மந்திரங்களால் துதித்து ஐந்தெழுந்து மந்திரத்தை ஜெபித்து பலவித சிவ ஸ்தோத்திரங்களைக் கூறி தாவ கஸ்த்வத் கதப்ராணஸ் தச்சித்தோஹம் ஸதாம்ருடா கிருபாநித இதிஜ ஞாத்வா பூதநாதா ப்ரஸீதமே என்றபடி நான் உம்முடையவன், உம்மிடத்தில் பிராணனுடையவன் உம்மிடத்திலேயே மனதையும் உடையவன் கிருபாநிதியே சகல பிராணிகளுக்கும் பிரபுவே, பூதநாதா எனக்கு நீர் பிரசன்னராக வேண்டும் என்று மலர் தூவி புஷ்பாஞ்சலி செய்து வணங்கி! க்ஷமாபணம் செய்து நான் மீண்டும் பூஜை செய்யும்போது இங்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டுதல் வேண்டும். 28. சிவபூஜைக்கு உரிய மலர்களும் தாரையும் நைமிசாரண்ய வாசிகள், சூதமா முனிவரைப் பார்த்து வியாசரின் சீடரே! சிவபெருமானை எந்தெந்த மலர்களால் பூஜித்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? என்று கேட்டார்கள். சூதமா முனிவர் கூறலானார். தவஞானிகளே! பெருஞ் செல்வம் பெற விரும்புவோன் தாமரை மலர், வில்வம், சதபத்திரம் ஸங்கபுஷ்பம் ஆகியவற்றால் லக்ஷணக்கணக்கில் பூஜித்தால், சந்தேகமில்லாமல் பெருஞ் செல்வத்தைப் பெறுவான். தாமரை மலர்கள் இருபது கொண்டது பிரஸ்தம், சதபத்திரம் ஆயிரம் கொண்டது அர்த்த பிரஸ்தம் வில்வதளம் ஆயிரம் கொண்டது பிரஸ்தம்(பதினாறு பலம் எடையுடையது பிரஸ்தம்) மஹாபூஜையில் மலர்களைக் கொண்டு பூஜிக்கும்போது மலர்களை எண்ணிக்கொண்டே பூஜிப்பது தவறாகையால் இப்படி நிறுத்துப் பூஜிக்க வேண்டும். இராஜ போகத்தை விரும்புவோன் பழுதில்லாத பத்து கோடி மலர்களால் பார்த்திவலிங்கத்தைப் பூஜிக்க வேண்டும், அல்லது பத்து கோடி வில்வதளத்தை சுகந்த சந்தனத்தில் தோய்த்துப் பூஜிக்க வேண்டும் இதற்குத் தாமரை மலர்கள் அல்லது சங்க புஷ்பங்கள் பூஜிக்கத் தக்கவை பிறகு தூபதீப நைவேத்ய, அர்க்ய, ஆரார்திக பிரதக்ஷிண, நமஸ்கார, க்ஷமாபண, விஸர்ஜனம் முதலியவற்றைச் செய்தால், இஷ்ட போகமும் ராஜரீகமும் உலகநாயகரான சிவபெருமான் திருவருளால் கிடைக்கும். பிரதானித்துவத்தை விரும்புவோன். ஐந்து கோடி மலர்களாலும் சிறையிலிருந்து நீங்க விரும்புவோன் லக்ஷம் புஷ்பங்களாலும் நோய் நீங்க விரும்புவோன் ஐம்பதாயிரம் மலர்களாலும், அழகான மங்கையை மணஞ்செய்து கொள்ள விரும்புவோன் இருபத்து ஐயாயிரம் மலர்களாலும் கல்வியில் விருப்பம் கொண்டவன் பன்னிராயிரத்து ஐநூறு மலர்களாலும் பகைவன் வெற்றி கொள்ள விரும்புவோனும் பகைவனை ஊரை விட்டு விரட்ட விரும்புவோனும் பத்தாயிரம் மலர்களாலும் பூஜிக்க வேண்டும். மாரணஞ் செய்ய விரும்புவோன் நான்கு லக்ஷம் மலர்களாலும் மோகனஞ் செய்ய வேண்டியவன் இரண்டு லட்சம் மலர்களாலும் ஒரு பிரபுவை வெல்ல விரும்பியவன் கோடி மலர்களாலும் வசியஞ் செய்யவும் கீர்த்தியடையவும் வேண்டியவர்கள் பதினாயிரம் மலர்களாலும் முக்தி வேண்டியவன் ஐந்து கோடி மலர்களாலும் ஞானம் வேண்டியவன் கோடி மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். சிவபெருமான் பிரத்தியட்சமாக வேண்டியவன் அரைக் கோடி மலர்களாலும் அர்ச்சித்து மிருத்யுஞ்சய மந்திரத்தை ஐந்து லக்ஷம் உரு ஜபிக்க வேண்டும், லக்ஷ மலர்களால் செய்த அர்ச்சனை தேகத் தூய்மையையும் இரண்டு லட்சத்தில் செய்தது ஜன்மாந்தர ஞானமும் மூன்று லட்சத்தால் கர்மநாஞானமும் நான்கு லட்சத்தால் ஸ்வப்னதரிசனமும், ஐந்து லட்சத்தால் சிவப்பிரத்தியக்ஷமும் பத்து லட்சத்தால் எல்லாம் பயன்களும் கைகூடும் முக்தி நிலை அடைய விரும்புவோன் லட்சம் தருப்பையாலும் தீர்க்காயுளை விரும்புபவன் லட்சம் அறுகினாலும் புத்திரப் பேற்றை விரும்புபவன் லட்சம் கருவூமத்தையாலும் புகழை விரும்புபவன் லட்சம் அகத்திப் பூவினாலும் சித்தி முக்திகள் வேண்டியவள். லட்சம் துளசியாலும் சத்துருக்ஷ்யம் வேண்டியவன். லட்சம் லட்சம் வெள்ளெருக்கமலர் மாதுளைமலர் உற்பல மலர், சப்பாத்தி மலர்களாலும், ரோக நீக்கம் விரும்பியவன் கரவீர மலர்களாலும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தை வேண்டுவோன் அதஸிப் பூவினாலும் முக்திகாமி வன்னியினாலும் அழகான பெண்ணை அடைய விரும்புவோன் மல்லிகையாலும் தானிய சம்பத்தை வேண்டியவன் மலை மல்லியாலும் வஸ்திர சம்பத்தை வேண்டியவன் கோங்க மலராலும் மனநிர்மலத்தை வேண்டுவோன் நிர்க்குண்டியாலும் பூஜிக்க வேண்டும். சிவப் பிரீதியான மலர்கள் கிடைக்கா விட்டால் சண்பகம், தாழை தவிர்த்து, இதர மலர்களால் பூஜிக்கலாம் இவ்விரண்டு மலர்களும் சிவபூஜைக்கு யோக்கியமற்ற மலர்கள் இவை அவ்வாறு நீக்கப்பட்டதற்கான காரணத்தைப் பின் சொல்லுகிறேன். சிவப்பிரீதியான மலர்கள் லட்சங்கொண்டு அர்ச்சித்தால் அனந்தமான பயன்கள் கிடைக்கும் இனி சிவபெருமானுக்குத் தான்யம் சமர்ப்பிக்கும் பயன்களைச் சொல்லுகிறேன். சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசியை) லட்சம்(ஒன்பது பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும். இது போதாயன முனிவர் அருளிய ருத்ரநியாஸ விதானப்படி சுந்தர வஸ்திரந்தரித்துப் பிறகு சமர்ப்பிக்கத் தக்கது. இதற்கு வில்லப் பழத்தை வைத்து தூபதீப ஆராதனைகள் செய்தால் பூஜாபலன் கைகூடும் இவ்வாறு செய்பவன் இருபது அந்தணருக்கு அன்னமிட்டு நூற்றெட்டு ஸ்ரீருத்திர காயத்திரி ஜெபிக்க வேண்டும். எள் அட்சதை பதினொரு பலம் சமர்பித்தால் சகல பாபங்களும் நாசமாகும். இதற்குப் பிராமண பூஜையும் செய்ய வேண்டும். யவை அட்சதை லட்சம்( எட்டரை பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சுவர்க்க போகம் கிடைக்கும். இதற்கு பிரஜாபத்யகிருச்சிரத்திற்குச் செலவாகும் தொகையைப் பிராமண போஜனத்திற்குச் செலவிடலாம். கோதுமை அட்சதை லட்சம் (நூற்று இருபத்தெட்டு பலம்) சமர்ப்பித்தால் ராஜாதிபத்தியம் உண்டாகும். இதற்கும் மேலே சொன்ன அளவு பிராமண போசனம் செய்விக்கப்பயறு அக்ஷதை லட்சம் (ஏழரை பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சுக ஜீவனமும் உண்டாகும், உளுந்து அட்சதை லட்சம் (பதினைந் தரைப் பிரஸ்தம்) சமர்ப்பித்தால் இஷ்டகாமியங்கள் கிடைக்கும் இதற்கு பதினொரு பிராமணரை போக்ஷிக்கவும் சாமைதினை முதலிய தானிய அட்சதை (சுமார் ஒரு பிரஸ்தம்) சமர்ப்பித்தால் அறம், பொருள், இன்பம், வீடு (கர்ம அர்த்த காம மோட்சங்கள்) கிடைக்கும். இதற்குப் பன்னிரண்டு பிராமணர்களுக்கு அன்னமிடவும் கடுகு இலட்சம் (இருபது பலம்) சமர்ப்பித்தால் சத்துரு மாரணமாகும் இதற்கு நூற்றியொரு பிராமண போஜனமும் ஒரு கோதானமும் ஒரு ரிஷபதானமும் செய்க, இவை தவிர வேறு பல விதமான தானியங்களாலும் பூஜை செய்யலாம் துவரை இலையை குங்குமம் கலந்த சந்தனத்தில் தோய்த்துப் பூஜித்தால் பற்பல பயன்கள் சித்திக்கும் இவ்வாறு சூத முனிவர் கூறியதும் நைமி சாரண்யவாசிகள் அவரை நோக்கி, சிவஞானச் செல்வரே! தானியங்கள் ஒரு லட்சம் எவ்வளவு எடையிருக்கும் என்று சொன்னீர்கள்? இனி மலர்கள் லட்சத்துக்கு எவ்வளவு எடையிருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும் என்றார்கள். சூதமாமுனிவர் சொல்லலானார் முனிவர்களே, சங்கு புஷ்பம் ஒரு பிரஸ்தமும் ஜாதி மல்லிகை இருபது பிரஸ்தமும், திலபுஷ்பம் பத்தொன்பது பிரஸ்தமும், கரவீரம் நாற்பது பிரஸ்தமும் நிர்க்குண்டி நாற்பது பிரஸ்தமும், கோங்கு திரிசனம் இவை பத்துப் பிரஸ்தமும் லட்சம் மலர்களாகையால் பிற மலர்களை இவ்வாறே எடை நிர்ணயித்துப் பூஜிக்க வேண்டும். இனித் தாரா பூஜையைச் சொல்லுகிறேன். சிவலிங்கப் பெருமானின் மீது சொரியும் படி தாராபாத்திரங்கட்டி, அதனால் பூசித்தால் ஜ்வரம் முதலியவை நீங்கும் சதருத்திரம் ஏகாதசருத்திரம், ருத்திரம் புருஷஸுகம், மிருத்யுஞ்ஜயம், காயத்திரி சிவ நாமங்கள் முதலியவற்றாலும், ஆகம யுக்தமான பத்திரங்களாலும் தாரா பூஜையைச் செய்ய வேண்டும் ஜலதாரை பூசையால் சுக விருத்தியும் சந்தான விருத்தியும் கைகூடும். நெய்யைத் தாரா பாத்திரத்தில் சொரிந்து அபிஷேகம் செய்தாலும் செய்வித்தாலும் வமிச விருத்தியும் ரோக நாசமும் உண்டாகும், இது நபும்சகம் வந்தபோது, பத்தாயிரம் மந்திர ஜபத்தோடும், பிரசபத்ய கிருச்சிர செலவின் அளவு தொகைக்கு பிராமண போஜனத்தோடு செய்யத்தக்கது, சர்க்கரை கலந்த பாலை தாரா பாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் ஒருவன் தன்மேல் செய்த பிரயோகம் ஒழியும். இது பதினாயிரம் மந்திராஜபம் முடியுமளவும் தாரை பொழிய வேண்டும். சத்துரு உச்சாடனமும் பயமும் நீங்கும். பரிமளங் கலந்த தைலதாரை சத்ருக்களைத் தொல்லைப்படுத்தும், தேன் தாரைபற் பல ரோகங்களைப் போக்கும். கருப்பஞ்சாற்று தாரை சகல துக்கங்களையும் ஒழிக்கும், சுத்தமான ஜலதாரை மோட்சப்பலன் கொடுக்கும். இவை ஒவ்வொன்றும் தீமையை அகற்றி சுகத்தை கொடுக்கத் தக்கவை, இவற்றைப் பதினாயிரம் மந்திர சபத்தோடும் பதினொரு பிராமண போசனத்தோடும் செய்வித்தால் இஷ்டகாரியங்கள் கைகூடும். முனிவர்களே! நீங்கள் கேட்டவற்றுக்குதக்க பதிலை சொன்னேன். இவ்விதமாகப் பூஜித்தவர்கள் சகலபாபங்களும் நீங்கப்பெறுவர், ஸ்கந்தர், பார்வதி, கணேசர் இவர்களுடன் கூடிய சிவபெருமானை ஒருமுறையாவது பூஜித்தவனுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கைகூடி கோடி சூரியப் பிரகாசமான விமானத்தில் ஏறி அவ்வுலகை அடைந்து அங்கு அநேக தேவதாசிகள் நடனம் செய்யவும் இன்னிசை முழங்கவும் சிவபெருமானைப்போல, எந்த உலகத்தில் எவ்வளவு காலம்வாழ வேண்டும் என்று விரும்புவார்களோ, அவ்வுலகத்தில் அத்தனைக் காலம் அப்படியே வாழ்வார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமில்லை. 29. தாழம்பூ பெற்ற சாபம் சூத புராணிகரே; நீங்கள் தன்யர் அதிக புண்யர். நீங்கள் சொன்ன சிவ மஹாத்மியத்தைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அதில் சண்பகம், தாழை என்ற இரண்டு மலர்களும் சிவ பூஜைக்கு அருகதையற்றவை என்று சொன்னீர்களே? அதற்கு காரணம் என்ன? என்று நைமிசாரண்ய வாசிகள் கேட்டார்கள். சூதமாமுனிவர் கூறலானார். ஒரு காலத்தில் ஸ்ரீராமர் லக்ஷ்மணரோடும் சீதையோடும் தன் தந்தையின் கட்டளைப்படி வன சஞ்சாரம் செய்யச் சென்ற போது பல்குநதி தீரத்தில் தங்கியிருந்தார்கள். அந்தக் காலத்தில் தன் தந்தையின் சீரார்த்த தினம் வந்தது. வரவே இன்று அந்தத் திதியை எவ்வாறு முடிப்போம் என்று யோசித்துத் தம்பியாகிய இலக்ஷ்மணனைப் பார்த்து, தம்பீ! நீ அருகேயிருக்கும் கிராமத்துக்குப் போய் கொஞ்சம் தானியங்களைக் கொண்டுவா! என்று கட்டளையிட்டார். இலக்ஷ்மணன் நாணத்துடன் சென்று சீரார்த்த காலம் சமீபிக்கும் வரையில் திரும்பி வராததால் காலங்கழியும் என்பதையறிந்து இராமபிரானும் அங்குசென்றார். சீதை மட்டும் தனியாக இருந்தாள். அவள் நாம் பகலில் செய்ய வேண்டிய சிரார்த்தத்துக்குத் தேவையான சாமான்கள் இல்லையே? நம் கொழுந்தனும் கணவனும் இன்னும் வரவில்லையே? எப்படி இந்தச் சிரார்த்தத்தை முடிப்பது சிரார்த்த காலமும் கழிந்து போகிறதோ? இனி ஆசுர காலம் வருமே என்று விசனத்துடன் நெடு நேரம் யோசித்தாள். பிறகு விதிப்படி நீராடினாள். தாபசம், இங்குதி என்ற பழங்களைக் கொண்டு வந்து அவற்றை நெருப்பிலே அவித்து மணல் மேட்டில் காத்திருந்தாள். அப்பொழுதும் அவர்கள் வராததால், பிதுர்க்களுக்கு உரிய பிண்டத்தை நான் எப்படிக் கொடுப்பேன் என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு கிடைத்த சிறிதுமாவை பிண்டமாகச் செய்து இது என் மாமனாரான தசரதராஜருக்கு அர்ப்பணமாக வேண்டும் என்று நினைத்தாள். அப்போது பிதுர்க்கள் வந்து நாங்கள் நீ செய்த சிரார்த்தந்தில் திருப்தி அடைந்தோம். சீதா பல பூஷண அலங்காரமான உன் கையால் நாங்கள் பிண்டம் பெற்றதில் மகிழ்ந்தோம் என்று அதை ஏற்று நிற்கும் போது, சீதாதேவி அவர்களை நோக்கி நீங்கள் யார்? என்று கேட்க அதைக் கேட்ட பிதுர்களில் சீதையின் மாமனாரான தசரதர்: நல்ல நியமம் உடையவளே! நான் உன் மாமன், நீ கொடுத்த பிண்டம் எங்களைத் திருப்தி செய்தது அது சபலமாயிற்று சீதை என்றார். அவர்களை நோக்கி நீங்கள் நான் கொடுப்பதை உங்கள் கையால் ஏற்றுக் கொண்டீர்கள். இதை என் கணவர் கேட்டால் நம்பமாட்டாரே! என்றாள். அதற்குத் தசரதர் சீதையே நோக்கி, அவ்வாறாயின் தக்க சாட்சிகளை வைத்துக் கொள் என்றார். அச்சமயத்தில் அங்கிருந்த பல்குநதி, பசு, அக்கினி, தாழை என்ற நான்கையும் சீதை பார்த்து, நீங்கள் நால்வரும் இதற்குச் சாட்சியாக இருந்து என் கணவருக்கு இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும் என்றாள். பிதுர்களும் சென்று விட்டார்கள் பிறகு ஸ்ரீராமன் வந்தார். வந்தவர் சீதையைப் பார்த்து சீதை! விரைவில் உன் காரியங்களைச் செய்! உன் மாமன் வருவார் என்றார். அதைக் கேட்ட ஜானகி ஆச்சிரியப்பட்டு நடந்தவை எதையும்சொல்லாமல் இருந்தாள். அவள் தாமதிப்பதைக் கண்ட ஸ்ரீராமர், நீ ஏன் இப்படி சும்மா இருக்கிறாய்? என்று கேட்டார். சீதை நடந்தவற்றையெல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள். அதைக் கேட்டதும் ஸ்ரீராமர் தம் தம்பி லக்ஷ்மணரை நோக்கி, தம்பீ, நீ சீதை சொன்னதைக் கேட்டாயா? என்றார். சீதையைப் பார்த்து, பெண்ணே! நாங்கள் எவ்வளவு சாஸ்திரோக்தமாகச் செய்தாலும் எங்களுக்கு பிரத்யட்ச மாகாத பிதுர்கள் உன் கண்ணெதிரில் தோன்றினார்கள் என்பது அபத்தம் என்றார். அதைக் கேட்ட சீதை ஸ்வாமி! நான் பொய் சொல்லவில்லை எனக்குச் சாட்சிகளும் உண்டு. அச்சாட்சிகளை நீங்களே விசாரித்துக் கொள்ளலாம் என்றாள். ஸ்ரீராமர் சாட்சிகளிருந்தால் நீ சொல்வது நம்பத் தக்கதே என்றார். உடனே சீதை அந்த நான்கு சாட்சிகளையும் காட்டி இவர்களே சாட்சிகள் என்றாள். சாட்சிகள் இராமர் முன்பு உண்மையைச் சொல்லப் பயந்து நாங்கள் அதை அறியோம் என்றன. இராமரும் லட்சுமணரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, நான் வழக்கப்படி சிரார்த்தம் செய்யவேண்டுவதே, ஆகையால் விரைவில் சமையல் செய்! என்று சீதைக்குக் கட்டளையிட்டார். சீதையும் துக்கித்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அப்போது இராமர் சங்கல்பம் செய்து சிரார்த்தத்திற்கான பிராமணர்களை ஆவாஹனம் செய்தார். அப்போது சூரியனின் அருகிலிருந்து ஓர், வானொலி புத்திரனே! ஏன்? ஆவாஹனம் செய்கிறாய்? நாங்கள் ஜானகி செய்த சிரார்த்தத்தாலேயே திருப்தியடைந்தோம் என்று கூறியது. ஸ்ரீராமரோ, நான் ஜானகி சொன்னதை உண்மை என்று ஏற்றுக் கொள்வதற்கில்லை என்றார். அப்போது பிதுர்க்களின் வான்குரல் செய்த சிரார்த்தத்தை மீண்டும் செய்யக்கூடாது என்று கூற இராமர் அதை நம்பாது யோசிக்கும்போது சூரியபகவான் ஸ்ரீராமர் முன்பு பிரத்யட்சமாகி நீயேன் மீண்டும் சிரார்த்தம் செய்கிறாய்? என்றார். உடனே ஸ்ரீராம லக்ஷ்மணர்கள் சீதையைப் பார்த்து நன்றாக இருக்கிறது சீதா! நீயே புண்ணியசாலி! என்று புகழ்ந்தார்கள். பிறகு அவர்கள் அவள் செய்த பாகத்தை புசித்தார்கள். ஸ்ரீராமர் தம்பியைப் பார்த்து, லக்ஷ்மணா! இவர்கள் சாட்சியாகக் கோரப்பட்டும் ஒன்றும் சொல்லாமல் இருந்தார்கள்... துன்மார்க்கர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது சீதை அந்த சாட்சிகளைப் பார்த்து கோபத்துடன் நீங்கள் உண்மையை என் கணவருக்குச் சொல்லாததால், பல்கு நதியே நீ அந்தர்வாஹினியாக இருக்க வேண்டும் தாழம்பூவே நீ என்னால் பூஜிக்கப்படும் பரமேஸ்வரனுக்கு பூஜாயோக்கியமின்றிப் போவதே உனக்குத்தகும். பசுவே உனக்கு வாய் யோக்கியமற்று போவதால் நீ பின்புறத்தில் யோக்கியமும் முகத்தில் அயோக்கியமும் ஆவாய்! அக்கினியே! எல்லா தேவர்களுக்கும் முகஸ்வரூபியாகிய நீ இதனால் எல்லாவற்றையும் தின்றெரிக்கும் சர்வபக்ஷகவாக வேண்டும் என்று சபித்தாள். அந்நால்வரும சீதையின் சாபத்தைப் பெற்றார்கள். அன்று முதல் அந்நான்கும் சாபத்தின்படியே ஆயின. தாழம்பூவுக்கு ஏற்பட்ட சாபத்தின் கதை இதுதான் இனி சண்பகப் பூவுக்கு சாபம் வந்ததைச் சொல்கிறேன். 30. சண்பகப்பூ பெற்ற சாபம் நைமிசாரணயவாசிகளே! உலகங்கள் அனைத்திற்கும் சுகத்தைக் கொடுக்கும் சிவபெருமான், கோகர்ணேஸ்வரர் என்ற திருப்பெயர் பெற்றுத் தென் திசையில் இருக்கிறார். அவரது தரிசனத்தால் பாபங்கள் எல்லாம் நீங்கும். ஒரு காலத்தில் நாரத முனிவர் அங்கு வந்தார். அப்படி வரும்போது பரிமளம் மிகுந்த சண்பகமலர்கள் நிறைந்த மரம் ஒன்றையும் அதன் அருகே மலர் கொய்ய வந்த தேவியர் ஒருவரையும் கண்டார். அந்த வேதியர், நாரதரையும் அவர் கையில் ஏந்தியிருந்த மகதி என்ற வீணையையும் பார்த்தார். அதன் நாதத்தைக் கேட்டுச் சிறிது நேரம் அங்கிருந்துதான் செய்து வந்த வேலையைச் செய்யாமலே இருந்தார். நாரதர் அவரைப் பார்த்து மறையோனே! நீ கையில் பாத்திரமேந்தி இங்கு வந்த காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு வேதியர் உண்மையைச் சொல்லாமல், நான் பிச்சையெடுக்கப் போகிறேன் என்றார். பிறகு நாரத முனிவர் அங்கிருந்து ஈஸ்வரசன்னதியின் உள்ளே சென்று, இறைவரைத் தரிசித்து மீண்டும் வெளியே வரும்போது வேதியரைக்கண்டார் அந்தப் பிராணரோ நாரதர் அறியாதவாறு கொய்த மலரைப் பூஜித்துத் தன் கையிலிருந்த பாத்திரத்தை மறைத்துக் கொண்டு வெளியே வந்தார். இருவரும் சந்தித்தார்கள் நாரதர் வேதியரை நோக்கி, நீர் எங்கேயிருந்து வருகிறீர் என்று கேட்க அதற்கு அவர் நான் எங்கும் பிச்சை கிடைக்காததால் போகிறேன் என்று பொய் சொன்னார். நாரதர் தமது ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து சண்பக மரத்தின் அருகே சென்று மரமே! அந்த வேதியர் எங்கே போனார்! உன்னிடமிருந்து எத்தனை மலர்களைக் கொய்தார்? என்று கேட்டார்? ஆனால் வேதியர் தன் வரலாற்றை ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்று தன்னிடம் சொல்லியிருந்தால் அந்த மரம், அந்தப் பிராமணர் யார்? மலர்கள் ஏது? நீர் யாது? என்னை ஏன் இக் கேள்விகளையெல்லாம் கேட்கிறீர்? என்று கேட்டது. நாரதர் உண்மையை அறிந்து சிவ சன்னதியை மீண்டும் அடைந்து சிவபெருமான் பூஜை செய்திருந்த மலர்களைக் கணக்கிட்டுப் பார்த்தார். நூற்றியொரு மலர்கள் இருந்தன. இப்படியிருக்கும்போது மற்றொரு வேதியர் மலர்களைக் கொண்டு வந்து சிவலிங்கப் பெருமானைப் பூஜித்தார், அவரைப் பார்த்த நாரத முனிவர் நீ யார்? எதற்காக பூசை செய்கிறாய்? இந்தப் புஷ்பங்களெல்லாம் இதற்கு முன்பு யாரால் கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்டன? என்று கேட்டார். அதற்கு அந்த வேதியர் உண்மையைச் சொன்னார். ஐயா! நான் சதா சிவபூஜை செய்து முக்தியடைய வேண்டி இங்கு வந்தேன். இதற்கு முன் இங்கு வந்து பூஜித்த பிராமணர் இராஜ அனுக்கிரகத்தைப் பெற வேண்டும் என்று சிவபெருமானை தினந்தோறும் நூற்றியொரு சண்பக மலர்களால் அர்ச்சனை செய்து அவ்வாறே ராஜப் பிரியமடைந்து, அரசனால் செல்வம் பெற்று மற்றுமுள்ள மறையோரை வாட்டி வருத்துகிறார். இந்த சண்பகமலரின் சிறப்பைக் கண்டு பெருமையடைந்து இன்னமும் இங்கு வந்து பூஜிக்கிறார், நான் மோட்சம் அடையவேண்டும் என்று நான் பூஜிக்கிறேன், என்றார். நாரதர் உண்மையைச் சொன்ன அந்த அந்தணரைப் பார்த்து உனக்கு நிரந்தர முக்தி கிடைப்பது சத்தியம் என்று சொல்லி விட்டுச் சிவபெருமானின் சன்னதிக்குச் சென்று, சுவாமி! அந்த அந்தணன் சண்பகமலரால் உம்மைப் பூஜித்து ராஜப்பிரியத்தையும் வேதியருக்குத் தானம் கொடுக்கும் அருளையும் பெற்றதால் பிறரை வருத்துகிறான். இவையெல்லாம் சண்பக புஷ்பத்தின் பூஜா பலன், அத்தகைய பயனை அந்தத் துஷ்டனுக்கு ஏன் கொடுக்க வேண்டும்! என்றார். அதற்குச் சிவபெருமான் நாரதரே! அது சண்பக மலர்ப் பூஜையின் பயன்! சண்பகத்தால் அர்ச்சனை செய்தவருக்கு வேண்டிய வரங்களை நாம் கொடுப்பதில் எந்தவித தடையுமில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் ஒரு பிராமண மங்கை துக்கத்துடன் அங்கு வந்து சிவபெருமானை பார்த்து சிவசங்கரா, அந்த துஷ்ட வேதியனை தாங்கள் தண்டிக்க வேண்டும். என் வீட்டிலிருக்கும் பொருட்களையெல்லாம் அவன் பலாத்காரமாகக் கொண்டு போய் விட்டான் என்று முறையிட்டாள். நாரதர் அந்த பிராமண மங்கையை நோக்கி, மாதே யாரால் உனக்கு இத்தகைய துன்பம் நேரிட்டது? நீயே ஏன் அழவேண்டும் என்றார். மகானுபாவரே! என் துக்கத்தைச் சொல்கிறேன் காது கொடுத்துக் கேளுங்கள் என்று சொல்லத் துவங்கினாள். முனிவரே! என் கணவர் கர்மவசத்தால் முடமாகி வீட்டில் இருந்தார் எனக்கு ஒரு புதல்வி திருமணபருவம் நெருங்கியதால் வீட்டில் இருக்கிறாள். அவளுக்குகல்யாணம் செய்யவேண்டிய அவசியத்தாலும் பொருள் இல்லாததாலும் என் கணவர் அரசனிடம் சென்று இன்று தானம் வாங்கினார். அதற்காக இத்துஷ்டவேதியன் என் வீட்டில் பலாத்காரமாக நுழைந்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் கொண்டு போனான். அரசனோ இவை ஒன்றும் அறியாத அந்தகனைப் போல் இருக்கிறான். இந்த விஷயத்தை முறையிட்டும் அவன் கேட்கவில்லை என்ன செய்வது என்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. என் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கவர்ந்து சென்ற பிராமணன் இங்கு தினந்தோறும் சிவபூஜைக்கு வருகிறான் என்றாள்! நாரதர் அந்த மங்கையை பார்த்து, சுந்தரி! உன் கணவனுக்கு அரசன் என்ன தானம் கொடுத்தான்? என்று கேட்டார். அதற்கு அவள் முனிவரே அரசன் பெருஞ் செல்வத்துடன் உபயகோமுகி தானஞ் செய்தான்; அதை இங்கே பூஜைக்கு வருகிற பிராமணனே கொடுக்க வைத்து தான் கொடுப்பித்த காரணத்தால் என் வீட்டிற்கு வந்த அவற்றைக் கொள்ளையிட்டான். இந்த விபரீதநஷ்டத்தை நான் யாரிடம் சொல்வேன்? நான் என்ன செய்வேன்? என் கணவர் இது வரையில் இத்தகைய பாப தானத்தை வாங்கியவர் அல்ல. என் கன்னிகைக்கு கல்யாணம் செய்யவே அத்தகைய தானத்தை வாங்கினார், பிராமணனோ அந்தத் தானத்தால் தனக்குப் பாதியைத் தர வேண்டும் என்று தொந்தரவு செய்தான். அதற்கு நாங்கள் தானம் வாங்கியப் பொருளில் பாதியைப் பெற்றுக்கொள் என்றோம். அவனோ தானம் மட்டும் போதாது. பசுவையும் பங்கிட்டு கொடு என்றான். பசுவைவிலை மதித்தலும் பாதியாகப் பங்கிடுவதும் தோஷமாதலால், அந்தப் பாவத்தை ஒழிக்க வழியில்லை என்று நாங்கள் சொன்னோம், என்றாள். நாரதர், சிவபெருமானை வணங்கி மகாதேவா! இத்தகைய துஷ்டப் பிராமணன் கையால் தாங்கள் எவ்வாறு பூஜிக்கப்படுகிறீர்? இவனைவிடத் துஷ்டன் ஒருவனுமில்லையே! முதலில் அரசனிடம் தானம் வாங்கவே கூடாதே அத்தகைய தானத்தை வாங்கியவனிடத்திலேயே பசுவை பங்கிட்டுப் பொருள் வாங்குவோனின் பாபத்திற்கு ஓர் அளவு உண்டோ? என்றார். கோமஹாத்மியம் பசுவின் வலது கொம்பில் கங்கையும், இடது கொம்பில் யமுனையும் மத்தியபாகத்தில் சரஸ்வதியும் முன்காலில் பிரமனும் மத்திய பரிவாரங்களுடன் உத்திரனும், பின்புறத்தில் விஷ்ணுவும் பக்கங்களில் அநேக தீர்த்தங்களும் வயிற்றின் வலது புறத்தில் முனிவர்களும், இடது புறத்தில் சகல தேவர்களும் வயிற்றின் கீழ் சகல நதிகளும் குளம்புகளில் வேதங்களும் பால்மடியில் சமுத்திரங்களும், ஆக, பசுவை இடமாகக்கொண்டு உலகம் முழுமையும் விளங்கும் இத்தகைய சிறப்பையுடைய பசுவைப் பூஜித்து பிரதக்ஷிணம் செய்தால் பூப் பிரதக்ஷணம் செய்த பலன் கிடைக்கும். பசுவைத் தானம் செய்பவன் கடல் சூழ்ந்த பயன் கிடைக்கும் பூவுலகையே தானம் செய்த பயனை அடைகிறான். எனவே கோ தானமும் பூமிதானமும் சம பலமுடையன, பசுவின் சாணத்தையும் கோமூத்திரத்தையும் உட்கொண்டவன் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவான். பசுவிடம் பூஜிக்கத் தகாத இடம் எதுவுமில்லை உலகத்தில் கோதானம் பூதானம் வித்யாதானம் ஆகிய மூன்றும் பவித்ரமானவை. இவை நாகத்திலிருந்து நூற்றியொரு தலைமுறைகளை சுவர்க்க வாசத்தில் சேர்க்கக்கூடியவை. பிராயச்சித்தமே இல்லாத பாங்களும் கோதானத்தில் ஒழியும் பசுவின் தரிசனம் ஸ்பரிச தியானம் ஆகியவை உண்டு பண்ணும் பயனைச் சொல்ல முடியாது, அதன் கொம்பில் பொன், குளம்பில் வெள்ளி புட்டத்தில் தாமிரம் கண்களில் பவளம் கழுத்தில் ஆபரணம் உடல் முழுவதும் ஆடைகள் இவற்றால் அலங்கரித்து பால் கறக்கும் வெண்கல பாத்திரத்தோடும் கன்றோடு நன்றாகக் கறக்கும் இளம் பருவமும் அழகும் கொண்ட பசுவை தேசகாலத்தில் யோக்கிமானவனுக்குத் தானஞ் செய்தால் கொடுத்தவனுக்கு எவ்வுலகத்திலும் துர்லமானது ஒன்றுமில்லை. இவ்வகையான கோதானம் கொடுத்தவனுக்குப் பெற்றுக் கொண்டவன் செய்திருக்கும் புண்ணியத்தில் எட்டுப் பங்கு அதிகப் புண்ணியம் கிடைக்கும் தாயை விற்றல். கன்னியை விற்றல் வேத விக்கிரயம் கோவிக்கிரயம் இந்த நான்கு பாபங்களுக்கும் பிராய்ச்சித்தமில்லை. ஓ சுவாமி இந்தத் துஷ்டப் பிராமணன் பசுவைப் பங்கிடச் சொல்கிறானே? இதற்கு என்ன செய்வது? தங்களுக்குப் பக்தனாக இருப்பதால் ஒன்றும் செய்யக் கூடவில்லையே! என்று வருந்தினார். அதைக் கேட்ட சிவபெருமான் நாரதரே! நீ என் பிரம பக்தனாகையால் உன் மனதில் எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்தால் அது எனக்குச் சம்மதமே, இவன் என் பக்தனாகையால் முன்னால் பாப பலத்தையும் பின்னால் சிவார்ச்சனை செய்த பயனையும் அடையும்படிச் செய்யலாம் என்று கட்டளையிட்டார். நாரதர் சண்பக விருட்சத்தையடைந்தார். அதனருகே சென்று சண்பகமரமே? உன்னிடமுள்ள பல மலர்களை நாள்தோறும் அறுத்துச் செல்பவன் யார்? உண்மையை ஒளிக்காமல் சொல் என்றார் .அதற்கு அந்த மரம் ஒன்றும் பதில் சொல்லாதிருக்கவே நாரதர் கோபங்கொண்டு சண்பகமரமே உலகத்தில் உண்மை என்பது யாருக்கும் யாவற்றுக்கும் சாதகமானது, உண்மையைப் பேசினால் இந்த உலகத்திலும் மோட்ச உலகத்திலும் அசாத்தியம் என்பது எதுவுமில்லை. அப்படியல்லாமல் நீ அசத்தியம் கூறியதால் இன்று முதல் உன் புஷ்பம் உலகத்தில் சிவபெருமானுக்குப் பூஜாயோக்யமற்று போவதாகுக என்று சிவனானுக்கிரகத்தால் சாபங்கொடுக்கும் போது அந்த துன்மார்க்க வேதியனும் அங்கு வந்தான். நாரதர் அவனைக் கண்டதும் அடா! நீ சண்பக மலரின் சிறப்பினால் சிவபூஜை செய்து அரசனிடம் அதிகாரம் பெற்று, அநேக பிராமணருக்கு தொல்லை செய்கிறாய் நீ இவ்வாறு ராட்சஸ காரியம் செய்து கொண்டிருப்பதால் ராட்சஸனாகக் கடவாய் என்று சாப மிட்டார். அதைக் கேட்டதும் அந்தப் பிரமணன் நடுநடுங்கி என்தவற்றை மன்னித்துக் காப்பாற்ற வேண்டும் என்று நாரதரின் பாதங்களைப் பணிந்தான். அவர் சிவபெருமான் கூறிய வார்த்தையை மனதில் கொண்டு அவன் விஷயத்தில் தயாசொரூபியாய் பிராமணா! நான் சொன்னது மாறாதாகையால் நீ அவ்வாறே ராட்சஸ வடிவடைவாய் என்று கூற அப்போதே அவன் விராதன் என்று அசுரானானான். அப்போது நாரதர் அவனைப் பார்த்து நீ ஸ்ரீராமருடைய தரிசனமடைந்து அவரால் மரணமடைந்து பிறகு சிவனாரின் அருளால் திவ்விய உருவமடையக் கடவாய் என்று சாப விமோசனமும் கூறினார். அவன் அவ்வாறே சகல உயிரினங்களுக்கும் துன்பமிழைக்கத்தக்க விராதனானான். நாரதர் சிவபெருமானை நமஸ்கரித்து சண்பகத்தின் மகிமையை வர்ணித்து அங்கிருந்து சென்று விட்டார். ஆகையால் சண்பக மலர் சிவபூஜைக்கு யோக்கியதை இல்லாததாயிற்று என்று அறியுங்கள். இவ்வாறு சூதமாமுனிவர் கூறினார். 31. கணபாலன் அவதரித்த கதை பரம புண்ணியனே! நாங்கள் கேட்ட விஷயங்களுக்கு நீங்கள் சொன்ன பதில்களிலிருந்து எங்கள் சந்தேகங்கள் நீங்கின. நீங்கள் வியாசரின் சீடர், இது வரையில் பஞ்சாயதன பூஜை உத்தமம் என்றும் இஷ்ட காமியங்களைக் கொடுக்கதக்கது என்றும் சொன்னீர்கள். அதில் சிவபஞ்சாயதனம் விஷ்ணு பஞ்சாயதனம் சக்தி பஞ்சாயதனம், சூரிய பஞ்சாயதனம், கணபதி பஞ்சாயதனம் என்ற ஐவகைப் பூஜைகளையும் பிரதானமாகக் கூறினீர்கள், கணபதி யாருடைய புதல்வர்? அவருக்கு இத்தனை மகத்துவம் எப்படி ஏற்பட்டது? சிவபெருமான் முதலிய பெருந்தேவர்களுடன் அவர் இருப்பானேன்? அதிலும் அவரை முற்படப் பூஜிப்பது ஏன்? என்று முனிவர் கேட்டார் சூதபுராணிகர் அதைக் கூறலானார். புண்ணிய புருஷர்களே! உலகத்தினரின் சுகத்திற்காக நீங்கள் கேட்டதால் அதையும் சொல்கிறேன். சிவபெருமான் பர்வத ராஜனின் புதல்வியாக அவதரித்த பார்வதிதேவியைத் திருமணஞ் செய்து அழைத்துக் கொண்டு, திருக்கைலாய மலையை அடைந்தார். சில காலம் சென்ற பிறகு, பார்வதிதேவி தன் தோழிகளாகிய ஜயை. விஜயை, என்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அத்தோழியர்களில் விஜயை என்பவள் பார்வதி தேவியைப் பார்த்து, அம்மா சிவபெருமானுக்கு நந்தி, பிருங்கி முதலிய பிரதமகணங்கள் கணக்கின்றி இருக்கும்போது உங்களுக்கு கணங்கள் ஒருவரும் இல்லையே! அவர்கள் தான் நம் வாசலில் சிவாக்கினைப்படி காவல் செய்கிறார்கள். ஆகையால் அவர்கள் சிவபெருமானின் கட்டளையை ஏற்று நடப்பதைப் போல உங்கள் கட்டளையை ஏற்க மாட்டார்களாகையால் நமக்கென்று ஒரு சேவகன் இருந்தால் நல்லது என்றாள். தோழியின் வார்த்தையைக் கேட்டதும் பார்வதி அதை இதவார்த்தையாகக் கொண்டாள். ஒருநாள் பார்வதி தேவியின் அந்தப்புரத்தில் நீராடிக்கொண்டிருக்கும் போது சதாசிவமூர்த்தியான சிவபெருமான் அங்கு வந்தார். அவர் நந்திதேவரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளே சென்றார். உள்ளே வந்த அவரைக் கண்டதும் நீராடிக் கொண்டிருந்த பார்வதிதேவி நாணமடைந்து நெளிந்து சென்று தன் தோழி விஜயை கூறியது சரிதான் என்று நினைத்தாள். எனவே தனக்கு என்று யோக்கியமான சேவகன் ஒருவன் இருக்க வேண்டுவது அவசியம் என்றும் அவன் தன் கட்டளையின்றி அணுவைக்கூட தன் அந்தப்புரத்தில் அனுமதிக்ககூடாது என்று எண்ணினான். ஏவம் விசார்யஸாதேவி ஜலம் ஜக்ராஹபாணிநா தேஹஸ்தம் ருதமாதாய த்யாத்வாரூபம் ப்ரபோஸ் ஸாபம் நிர்மாய ப்ரணவாகாரம் சதுர்பாஹுந்த்ரி லோசனம் ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் கஜவக்த்ரம் ஸுவாச்ருதிம் இவ்வாறு தேவி யோசித்து கையிலே நீரை எடுத்துக் கொண்டு உடலில் தேய்த்து உருட்டி தன் நாதனான சிவபெருமானின் திருவுருவைத் தியானித்து அதுபோலவே பிரணவஸ்வரூபமும் யானைமுகமும் நான்கு தோள்களும் மூன்று கண்களும் மங்கள ரூபமும் உடையவராய் வெண்ணிற ஆடையுடுத்தி ஸர்வ வியாபியாய் விளங்கும் கணன் என்னும் புத்திரனை உருவாக்கி, உயிர்கொடுத்து வாயிற்படியில் நிறுத்தி, நீ என் உத்தர வில்லாமல் ஒருவரையும் உள்ளே விடாதே, என்று கட்டளையிட்டு நல்ல ஆடைகளையும் ஆபரணங்களையும் கொடுத்து நீ தீர்க்க ஆயுளுடையவனாக இருப்பாய் என்று ஆசீர்வதித்து நீ என் பிரியபுத்திரன் என்று கூறினாள். உடனே உமாபுத்திரன் தன் தாயைப் பணிந்து அம்மா! உனக்குள்ள பணிவிடைகளை யெல்லாம் செய்கிறேன் என்றார். அதைக் கேட்டதும் பார்வதி நீ இப்போது துவாரபாலகனாக இரு, என்று ஒரு தண்டத்தைக் கொடுத்து மகிழ்ந்து, முகத்தில் முத்தமிட்டு அன்போடு அனைத்து விட்டுத்தன் அந்தப்புரத்திற்குச் சென்றாள் அன்று முதல் கணதேவர் பார்வதியின் கட்டளைப்படித் திருவாயிலில் காவலிருந்து வரலானார். ஒருநாள் உமாதேவி தன் தோழியருடன் நீராடிக் கொண்டிருக்கும் போது சிவபெருமான் பிரமதகணசகிதராய் தேவியின் அந்தப் புரத்திற்குவந்து உள்ளே நுழைய முயன்றார். அப்போது வாயிற்படியில் காவலிருந்த கஜானனர் என் தாய் நீராடுவதால் உள்ளே போகக்கூடாது என்று சொல்லித் தடுத்துத் தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அதைக் கண்டதும் சிவபெருமான், என்னை யாரென்று நினைத்தாய்? நானே சிவன் என்று சொல்லி மீண்டும் நுழைய முயலும்போது கணபதி கோபித்துக்கையில் இருந்த தண்டாயுதத்தால் ஓரடியடித்து சிவனாக இருந்தால் என்ன இப்போது ஏன் மீண்டும் போகிறீர்? என்று தடுத்தார். உடனே சிவபெருமான் கணபதியை நோக்கி, நீ என்னை அறிய மாட்டாய்! நீ மூர்க்கனாக இருக்கிறாய் உன்னை இங்கே அமர்த்தினவளுக்கு நான் கணவன் என்று சொல்ல கணபதி மீண்டும் அடிக்க சிவபெருமான் கோபங்கொண்டு பிரதம கணங்களைக் கூவியழைத்து இவன் யார்? இவன் துடுக்குத்தனத்தைப் பாருங்கள் என்று சொன்னார். அப்போது பிரதர்மர்கள் துவாரபாலகராயிருக்கும் விநாயகரைப் பார்த்து நீயார்? நீ ஏன் இங்கு வந்தாய் உன்வேலை என்ன? என்று கேட்டார்கள் அதற்கு கணனோ, நீங்கள் யார் ? இங்கே ஏன் வந்தீர்கள் தூரப் போய் விடுங்கள், என்று அதட்டினார். பிரதம கணங்கள் அவரைப் பார்த்துச் சிரித்து இவன் யார் பகவானைப் போல கடின வார்த்தைகளைப் பேசுகிறானே! என்று ஆலோசித்து மீண்டும் கணபதியைப் பார்த்து: அப்பனே நாங்கள் சிவகணங்கள் சிவபெருமான் இட்ட கட்டளையைச் செய்பவர்கள் உன்னையும் எங்கள் கணத்தைச் சேர்ந்தவன் என்று எண்ணியிருந்தோம். இனி தூரச்செல். இங்கே இருந்தால் நாசமாவாய் என்று அதட்டினார்கள். அந்த மிரட்டலைப் பொருட்படுத்தாமல் யானை முகத்தார் வாயிலை விட்டு நகராமல் அங்கேயே இருந்தார். கணங்கள் சிவபெருமானிடம் நடந்தவற்றைச் சொன்னார்கள் சிவபெருமான் அவர்களை நோக்கி கணங்களே! நீங்கள் என்ன பேடிகளா? அவனைத் துரத்துங்கள்! என்றார். பிரதம கணங்கள் மீண்டும் வந்து கணனே! உன்னை வாயிற் படியில் காவல் வைத்தவர்கள் யார்? எங்களை மதிக்காமல் நீ பிழைப்பாயா? நரிக்கு சிங்காதனம் கிடைத்தது போலிருக்கிறது! நாங்கள் போர் செய்யும்முன் இங்கிருந்து ஓடிப்போய்விடு இல்லையென்றால் மரிப்பாய் என்று மிரட்டினார்கள். அதைக் கேட்டுக் கஜானனர் கோபங்கொண்டு கையிலே தண்டாயுதத்தைத் தாங்கி இங்கிருந்து போகாவிட்டால் என் பராக்கிரமத்தைக் காட்டுகிறேன் பாருங்கள் என்று சுழற்றி அடித்தார். இவ்விதம் கணநாதரால் அடிபட்ட சிவகணங்கள், இனி இந்தத் துவாரபாலகனை எதிர்த்தால் என்ன விளையுமோ? என்று பயந்தவர்களாய்ச் சிவபெருமானிடம் விரைந்து சென்று பெருமானே! அவன் மிகவும் முரடனாக இருக்கிறான். எங்களையெல்லாம் தண்டத்தால் புடைத்தான்! என்று முறையிட்டுப் பணிந்து நின்றார்கள். சிவபெருமான் அவர்களைப் பார்த்து அவனோ ஒருவன்! நீங்களோ அநேகர் ஒருவன் அடித்தான் என்று இத்தனை பேரும் ஓடி வரலாமா? நீங்களோ பிரதமகணங்கள்? உங்களுக்கு வீரம் இல்லையா? உடனே சென்று அவனைத் துரத்திவிட்டு வாருங்கள் என்று புன்னகையுடன் கூறினார். அதனால் பிரதம கணங்கள் கணபதியிடம் சென்று சிறு பிள்ளையைப் போலப் பேசுகிறாயே! சீக்கிரம் இவ்விடமிருந்து போகாவிட்டால் எங்கள் பிராகிரமத்தைக் காட்டுகிறோம் பார் என்றார்கள். இது போலப் பலமுறைகள் அவர்கள் சொல்லியும் கணபாலர் காவலிருந்த இடத்தை விட்டு நகரவில்லை இதற்குள் அந்தப்புரத்திலிருந்த பார்வதிதேவியும் அவளது தோழியரும் கணபாலருக்கும் பிரதம கணங்களுக்கும் நடந்த பேச்சுக்களைக் கேட்டார்கள். இன்றையதினம் எமது சேவகன் வாயிலைக் காவல் செய்யாமல் இருந்திருந்தால் சிவபெருமான் மட்டுமின்றி மற்ற பிரதம கணங்களும் நாம் நீராடும் போது நம் அந்தப்புரத்தின் மாளிகையிலுள்ளே வந்திருப்பார்கள். அப்படி எல்லோரும் வந்திருந்தால் நன்றாக இராது. கணன் நல்ல காரியஞ் செய்தான். கணங்களுக்கும் கணநாதனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது. இதுவரை அவன் ஒருவரைக்கூட உள்ளே விடவில்லை அவர்களது வாய்ச் சண்டை முற்றி அவர்கள் ஜெயித்தாவது உள்ளே வரக்கூடும். அல்லது விநயத்தாலாவது உள்ளே வரக்கூடும் நமது கணனை தொந்தரவு செய்தது நம்மை தொந்திரவு செய்தது போன்றதாகும் தாயே! இந்த சமயத்தில் நாம் சிறிது கண்டிப்பாக இருக்கவேண்டும். என்று தோழி வற்புறுத்திக் கூறினாள். பார்வதிதேவி கணபதியின் மீது அபிமானமுடையவளாய் என் நாதராக இருந்தாலும் சிவபெருமான் நம் வாசலில் காவலிருப்பவனை ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? அவனை வேண்டிக் கொள்ளக் கூடாதோ? என்று சொல்லி அந்தத் தோழியை கணனிடம் அனுப்பி ஒருவரையும் உள்ளே அனுப்ப வேண்டாம் என்று மீண்டும் கட்டளையிட்டாள். அந்தத் தோழியும் வெளியே சென்று கணனைக் கண்டு, நீ செய்யும் கடமை சிறப்பானது. நீ ஒருவரையும் உள்ளே விட வேண்டாம். இந்தப் பிரதர்கள் உன்னை ஜெயித்தாவது அல்லது உன்னிடம் நல்வார்த்தை கூறியாவது தான் உள்ளே வருவார்கள்? ஜாக்கிரதை! இது தேவியின் கட்டளை என்று சொன்னாள். உடனே கணபதி தன் தாயின் ஆணைப்படி கட்டியிருந்த ஆடையை இழுத்துக் கட்டிக் கொண்டு கிரீடம் தரித்து, தொடையைத் தட்டி பிரதம கணங்களே! நானோ பார்வதி புத்திரன், நீங்களோ சிவகணங்கள் நாமிருவரும் சமபலமாகச் சேர்ந்தோம் செய்யத்தக்கதை பார்ப்போம் இனி உங்களுக்கு உரிய ஆக்ஞையைச் செலுத்திச் சிவாக்கினையைக் காத்துக் கொள்ளுங்கள், நானும் என்னுடைய தாயின் கட்டளைப்படி நடந்து கொள்ளுகிறேன். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமானால் என்னை ஜெயித்தாவது என்னிடம் உத்தரவு பெற்றாவது போகவேண்டும் என்று கர்ஜித்தார். சிவகணங்கள் வேறு வழியின்றி சிவபெருமானிடம் மீண்டும் ஓடி அவரை வணங்கி, நடந்தவற்றையெல்லாம் சொன்னார்கள். அதைக் கேட்டதும் சிவபெருமான் யோசிக்கலானார். நாம் உத்திரவு பெற்று உள்ளே சென்றால் கட்டளைக்கு உட்பட்டவராவோம். ஆகையால் நாம் அனைவரும் போர்புரிய வேண்டுவதே முறை எவ்வாறாயினும் முடியட்டும் என்று முடிவு செய்து சிவபிரமதகணங்களை நோக்கி, நீங்கள் பிரதமகங்களாக இருந்தும் போர் செய்வதை விட்டு வேண்டிக் கொள்வது யுத்தமல்ல, பார்வதியின் செயல் நன்றாக இல்லை! அதற்குரிய பயனை அவளும் அனுபவிப்பாள் யுத்தம் செய்ய வேண்டுவதே யுக்தமானது என்றார். 32. கணபாலர் போர் புரிந்த கதை சிவபெருமானின் கருத்திற்கிணங்கப் பிரமதகணங்கள் யுத்தம் செய்வதே தக்கது என்று போர் செய்ய ஆயத்தமானார்கள் அவர்கள் யாவரும் ஆயுதபாணிகளாய்க் கணபதியிருக்கும் இடத்தை அடைந்தார்கள் அவர்களை கண்டதும் போராட்டத்திற்குத் தயாராகி அவர்களைப்பார்த்து, சிவனாரின் கட்டளையைப் பரிபாலிப்பவர்களெல்லாம் வரலாம். நானோ சிறுவன், தனியன், தாயின் கட்டளையை ஏற்று நடப்பவன். பார்வதி தேவியே தனது புத்திரனான என் பலத்தைப் பார்ப்பாள். சிவபெருமானே உங்கள் பலத்தை பார்க்கட்டும் பலவந்தர்களும் பாலனுமாகிய நம்மிருவருடைய யுத்தத்தை நமது தலைவர்களாகிய சிவபார்வதிகள் பார்க்கட்டும் நானும் இதுவரையில் யுத்தஞ் செய்தவன் அல்ல. இப்பொழுதே போருக்கு வருகிறேன், ஆயினும் இறுதியில் உங்களுக்கு நாணமே உண்டாகும் நாமிருவருமே ஜெயிப்போம் என்றோ தோற்று விட்டோம் என்றோ நினைக்க வேண்டாம், நீங்கள் வெற்றி பெற்றால் சிவபெருமான் வெற்றி பெற்றவராவார் நான் வெற்றி பெற்றால் பார்வதிதேவியே வென்றவன் என்று நினைக்க வேண்டும் என்றார். அதைக் கேட்டவுடன் பிரதமகணங்கள் கோபங்கொண்டு கண்கள் சிவக்க, பற்களைக் கடித்து ஹுங்காரஞ் செய்து கொண்டு போர் செய்ய வந்தார்கள். அவர்களில் நந்திதேவர் முன்னே வந்து கணனுடைய ஒரு காலையும், பிருங்கி மற்றொரு காலையும் பிடித்து இழுக்க முயலும்போது அவர்கள் இருவருக்கும் பிள்ளையார் ஒவ்வொரு அறை விடவே அவருடைய கால்களை விட்டு ஓட்டம் பிடித்தார்கள். உடனே கணன் தன் அருகிலிருந்த ஓர் இரும்பு உலக்கையால் சிலர் மண்டையையும் சிலரது கழுத்தையும் சிலரது கால்களையும் சிலரது தோள்களையும் அடித்தார். அதைக்கண்டதும் சிவ கணங்கள் இந்தச் சிறுவனை ஜெயிக்க முடியாது என்று எண்ணமிட்டார்கள் சிலர் ஓடினார்கள், சிலர் பிள்ளையாரை கும்பிட்டு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிவபெருமானிடம் ஓடிச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் நான்முகபிரமன் தேவேந்திரன் முதலியவர்கள் இந்தச் செய்தியை நாரதர் மூலமாகச் கேள்வியுற்றுச் சிவபெருமானுக்குச் சகாயம் செய்யும் கருத்துடன் அங்கே திரண்டு வந்தார்கள். அவர்கள் சிவபெருமானை வணங்கி, மகாதேவா எங்களுக்கு அனுமதி கொடுத்தால் நாங்களும் போராடுகிறோம் என்றார்கள். அப்போது கணனால் அடிபட்டு வந்த பரமதகணங்கள் அங்கு வந்து வருந்தி முறையிட்டார்கள். சிவபெருமான் பிரமதேவன் நோக்கி நான்முகனே! நீ அவனிடம் சென்று போர் மேலும் நிகழாதவாறு அவனை இதமான வார்த்தைகளால் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பிரமதேவன் மற்ற முனிவர்களுடன் கணபாலன் இருக்குமிடத்திற்கு வந்தார், அவர் வந்ததுமே பிள்ளையார் அவரது மீசையை பிடித்துப் பறிக்க பிரமன் அந்த வலியைத் தாங்க மாட்டாமல், நான் உன்னோடு போர் செய்ய வரவில்லையே? என்று அலறினார் கணன் இரும்புலக்கையைக் கையிலெடுக்க பிரம தேவனும் மற்றவர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள் அவர்கள் சிவபெருமானிடம் சென்ற முறையிட பெருமான் கோபங் கொண்டு, இந்திரன், சுப்பிரமணியர் முதலிய பிரதமர்கள் பூதபிரேத பைசாசங்கள் யாவரையும் கணனுடன் போர் செய்யச் சொல்லி உத்தரவளித்தார். அத்தகைய கட்டளையைப் பெற்றதும் அவர்கள் தத்தம் ஆயுதங்களுடன் யுத்தம் புரியத் தொடங்கினார்கள் அவர்கள் செலுத்திய ஆயுதங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவிமறைந்தன அந்தச் சமயத்தில் அந்தப்புரத்தில் இருந்த பார்வதி தேவி இரண்டு சக்திகளைச் சிருஷ்டித்துத் தனியனாகப் போர் புரிந்து கொண்டிருந்த கணனுக்குத் துணைசெய்ய அனுப்பி வைத்தாள். அதில் ஒரு சக்தி பயங்கரமான உடலும் கருநிற மேனியும் மலை போன்ற முகத்தில் குகை போன்ற திறந்த வாயும் கொண்டவளாக இருந்தாள். மற்றொரு சக்தி மின்னலைப் போன்ற ரூபமும் அநேகம் கைகளையுடையவளாகவும் வந்து தேவர்கள் எய்யும் ஆயுதங்களையெல்லாம் தன் வாயைத் திறந்து விழுங்கிலானாள். பிள்ளையாரோ இரும்புலக்கையால் அடித்து தேவர்படை வெள்ளத்தைக் கலக்கினார் இதனால் தேவர்கள் மனங்கலங்கி இனி என்ன செய்வோம். எங்கே போவோம். என்று புலம்பி வருந்தினார்கள். அப்போது அரம்பை, மேனகை முதலிய அப்சரசுகள் சந்தன மலர்களைக் கையில் ஏந்தி ஆகாயத்திலிருந்து தூவினார்கள். நாரதர் முதலியோர் கணபாலன் போர் செய்யும் வீரத்தையும் ஆற்றலையும் பார்த்து மகிழ்ந்தார்கள் இத்தகைய வீரனை நாம் கண்டதே இல்லை. பிரளயகால ருத்திரனே இவ்வாறு வந்திருக்கிறான் என்று முனிவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே கடல் சூழ்ந்த பூமி முழுதும் குலுங்கியது ஏழு கடல்களும் நிலை கலங்கின நவக்கிரக மண்டலத்தையுடைய ஆகாயம் பிளவடையலாயிற்று யாவரும் மனம் மருண்டார்கள். இந்திராதி தேவர்களும் பிரமத கணங்களும் ஓடினார்கள் அப்போது ஆறுமுகப் பெருமான் சக்தியர் இருவரால் அடுத்த சைன்னியம் ஒழியமிகுந்தவர்களை அழைத்துக் கொண்டு சிவசன்னதியை அடைந்து நமஸ்கரித்து தந்தையே! அந்தக் கணனுடைய வல்லமையைச் சொல்ல முடியாது! அவனைப் போன்ற ஒருவனை இதுவரை கண்டதும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. இவனைத் தாங்கள் எதிர்த்து அடக்காவிட்டால் மஹாப்பிரளயம் உண்டாகும் என்று சொல்லவே சிவபெருமான் கோபங் கொண்டு, அப்படியாயின் நானும் வருகிறேன் என்று புறப்பட்டார் தேவர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அப்போது நாரதர் புன்முறுவலுடன் சிவபெருமானை நோக்கி, மகேஸ்வரா! அவன் கொல்லத் தக்கவனல்லன், அவன் சிறுவன் தனித்து இருந்து தாயின் கட்டளையை நிறைவேற்றுபவன். அவனை வசப்படுத்தினால், ÷க்ஷமம் உண்டு, ஆகையால் அவனை எப்படியாவது சிநேகம் செய்து கொள்வதே நல்லது. என்றார். அவர் வார்த்தையை சிவபெருமான், மறுத்துவிட்டுப் போர் புரியச்சென்றார். கணபாலனைக் கண்டதும் அவர் வியப்புற்று இவனை வஞ்சனையாலடிக்கா விட்டால் இவனை ஜெயிக்கவே முடியாது என்று கருதி படைவரிசைகளின் நடுவில் இருந்தார் நிர்குணராகிய சிவபெருமான் விஷ்ணு முதலியவர்களுடன் யுத்தம் புரியவந்ததைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தார்கள். விஷ்ணு சிவபெருமானை நோக்கி சிவபெருமானே, நான் இவனை மோகப் படுத்துகிறேன். அப்பொழுது நீங்கள் இவனை அடிக்க வேண்டும், தந்திரத்தாலன்றி இவனை வெல்லமுடியாது. என்றார் அப்போது சக்திகள் இருவரும் மறைந்தார்கள் விஷ்ணுவின் எதிரில் கணபாலன், கபட நாடக சூத்திரதாரி என்ற பெயருக்கேற்ப கபடஞ் செய்ய நினைப்பவனே! என்று ஏளனமாகச் சிரித்துத் தம் கையிலிருந்த இரும்புலக்கையால் விஷ்ணுவை அறைய சிவபெருமான் தம் கரத்தில் இருந்து சூலாயுதத்தால் தடுத்து கோபங் கொண்டு கணனைத் தாக்க முற்பட்டார். அப்போது அவர் கையிலிருந்த சூலாயுதம் கை நழுவி விழ அவர் பிநாக வில்லை ஏந்தி நின்றார். கணபாலன் அந்த வில்லையும் தம் பாரிசத்தால் பொடிபடச் செய்தார், அந்தப் பரிச ஆயுதம் ஐந்து கரங்களிலும் ஒரடியடிக்க மற்ற ஐந்து கரங்களால் வேறொரு குலத்தை ஏந்தினார் சிவபெருமான் அப்போது அவர் நாமே இவனால் இவ்வாறு சங்கடப்படுவோமானால் மற்றைய தேவர்களும் கணங்களும் இவனுக்கு எம்மாத்திரம்? என்று எண்ணமிட்டார் அப்போது விஷ்ணு அவரை நோக்கி கைலாச நாதரே! உடலுருவம் அழகு ஆகிய இவற்றில் இந்தச் சிறுவனுக்கு ஈடானவர் எவருமில்லை! என்று வியந்துரைத்தார், கணன் தன் பரிசாயுதத்தை விஷ்ணுவின் மீது பிரயோகிக்க அந்த ஆயுதம் விஷ்ணுவின் சக்கரத்தைப் பொடிப் பொடியாக்கியது விஷ்ணு வேறொரு சக்கரத்தை ஏந்திப் போராடத் தொடங்கினார். கணபாலன் தன் இரும்புலக்கையை அவர் மேல் விடுத்து மல்யுத்தஞ் செய்யலானார், அப்போது சூலபாணியான சிவபெருமான் கணனுக்கு பின்புறமாகச் சென்று கணனைப் பாசத்தால் இறுக்கி பூமியின் மேல் வீழ்த்தினார். இவ்வாறு கணபாலன் பாசத்தால் கட்டுண்டதைப் பார்த்து தேவர்களும் கணங்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்நிகழ்ச்சியைக் கண்ட நாரத முனிவர் உடனே பார்வதி தேவியிடம் விரைந்து சென்று ஓ ஜெகன்மாதா! இப்போது சிவபெருமான் பாசத்தால் கணனைக் கட்டி மூர்ச்சையடையச் செய்து விட்டார், நீ இந்தச் சமயத்தில் தன்மானம் காத்துக் கொள்ள வேண்டும். என்று கலகஞ்செய்து விட்டு அங்கிருந்து மறைந்து போனார். தேவர்கள் ஜெயஜெய சங்கரா! என்று வெற்றி முழக்கமிட்டு ஆன்ந்தத்தால் குதித்தார்கள். முனிவர்களே! இனி பார்வதி தேவி செய்தனவற்றை சொல்கிறேன் கேளுங்கள். 33. கணபதி பட்டாபிஷேகமும் விரதமும் முனிவர்களே! சிவபெருமான் கணபதியைப் பாசத்தால் கட்டி மூர்ச்சையடையச் செய்ததை நாரதர் மூலம் அறிந்த பார்வதி தேவி மிகவும் கோபங்கொண்டு இனி, என்ன செய்வேன்? எங்கு போவேன்? பிரளயத்தைச் செய்ய வேண்டி வந்ததே? என்று துக்கித்து, அநேகம் ஆயிரம் சக்திகளை உண்டாக்கினாள். அச் சக்திகள் மஹாதேவியைப் பணிந்து, நாங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? கட்டளையிட வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களை பார்வதிதேவி நோக்கி, நீங்கள் சிறிதேனும் யோசிக்காமல் இந்த சமயத்தில் தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், அசுரர்கள் முதலானவர்களை அழித்து மகாப்பிரளயத்தைக் கிளப்பிவிட வேண்டும்! என்னுடையவன் என்றும் பிறன் என்றும் பார்க்க வேண்டுவதில்லை என்றும் கட்டளையிட்டாள். உடனே கற்பாந்தரத்தில் செய்யும் சங்காரத்தைப் போலவும் பிரமன் விஷ்ணு ருத்திரன், இந்திரன், குபேரன் சூரியன், சுப்பிரமணியன் என்று யோசிக்காமல் அகப்பட்டவர்களை ஆங்காங்கே அவர்களை வாயிற்போட்டு கபளீகரம் செய்யவல்ல சக்திகளில் சிலர் வாயைத் திறந்து கொண்டும் சிலர் பயங்கரமாகவும் சிலர் தலையை ஆட்டிக் கொண்டும் பலவாறு யுத்தம் செய்தார்கள் அந்தச் சமயத்தில் அந்தச் சம்காரத் தொழிலைப் பார்த்து விஷ்ணு முதலான தேவர்களும், முனிவர்களும் ஐயோ! மஹாப்பிரளயமாக இருக்கிறதே! இது அகாலத்தில் சம்பவித்ததே நாம் பிழைப்பது கடினம், ஆகா என்ன செய்வோம்? ஏது செய்வோம்? என்று யோசித்து விட்டு இந்த மகாப்பிரளயம் பார்வதிதேவி கருணை செய்யக் கருதினாலன்றி அடங்காது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு சக்தி சிவபெருமானின் இடுப்பில் ஓங்கி அடித்தாள். அதனால் சிவபெருமான் மிகவும் வருந்தி பார்வதியிடம் சென்று. இது என்ன என்று கேட்டவுங் சக்தியற்று இருந்து விட்டார். சக்திகள் தராதரமின்றி யாவரையும் துன்புறுத்தினார்கள் நாரத முனிவர் அப்போது தேவர்களுக்கெல்லாம் நன்மை செய்யக் கருதி, பிரமா முதலான தேவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து மெல்ல தலைநீட்டி அவர்களோடு கலந்து என்ன செய்யலாம்? என்று ஆலோசித்துவிட்டு ஆகா! இனி பார்வதி தேவிக்குத் தயை வரச்செய்யாவிட்டால் நமக்குச் சுகம் உண்டாவதில்லை என்று கூறினார். அவரை தேவர்கள் உற்று நோக்கி நாரதரே! நீங்களே அதைச் செய்வதற்கு தகுந்தவராதலின் தயை செய்து அந்தப் பார்வதிதேவியிடம் சென்று தேவியின் கோபத்தைத் தணியச் செய்யும்! என்று விநயத்துடன் கூறினார்கள். நாரதர் சில முனிவர்களுடன் பார்வதிதேவியிடஞ் சென்று யாவரும் ஒன்றுகூடி பின்வருமாறு தோத்திரஞ் செய்தார்கள். ஜகதம்ப நமஸ்துப்யம் பரக்ருத்யைதே நமோஸ்துதே அபர்நாயை நமஸ்துப்யம் கிரிஜாயை நமோஸ்துதே பவாந்யைதே நமஸ் சைவ துர்க்காயைதே நமோஸ்துதே பத்ராயைதே நமஸ்துப்யம் ப்ரக்ருத்யைதே நமோஸ்துதே சண்டிகாயை நமஸ்துப்யம் காத்யாயன்யை நமோஸ்துதே ஜகன்மாதா! பிரகிருதி ரூபியே! சருகு பக்ஷணமுமின்றித் தவஞ் செய்பவளே! பர்வதராஜபுத்திரியே, பவானியே, துர்க்க ஸம்ஹாரியே சகல ஜகத்துக்கும் மங்களஞ் செய்பவளே, முதலாகவுள்ளவளே, சண்டமுண்ட சம்ஹாரியே காத்யாயனியே உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம் என்று துதி செய்ததும் பார்வதி தேவி அவர்களைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அதனால் முனிவர்கள் அனைவரும் பயந்து, அவளது திருவடியில் வீழ்ந்து வணங்கி தாயே சிவபெருமானும் நாங்களும் மிகவும் கஷ்டத்தையடைந்தோம். ஆகையால் ஸம்ஹாரத்தை நிறுத்தி சாந்தமடைய வேண்டும். நாங்கள் அனைவருமே உன்னால் படைக்கப்பட்டவர்களாகையால் சாந்தமடையவேண்டும் மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். அதனால் பார்வதிதேவி தயவு செய்யக் கருதி என் புத்திரன் கணபாலன் மூர்ச்சை தெளிந்து எழுந்த பிறகு இந்த சம்ஹாரம் நிற்கும் அதுவரையில் சம்ஹாரம் நடந்தேதீரும். தாயான என் கட்டளையை முன்னிட்டுத் தனியாகவும் சிறுவனாகவும் ஒருவனாகவும் இருந்து என் அந்தப்புரத்தை காவல் செய்தவன். அவனுக்கு எதிராக நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போர் செய்தது முறையற்ற செயல் நீதியற்ற செயல் ஆகையால் உங்கள் யாவராலும் அவன் பூஜிக்கப்படுபவனாய்ச் சகலருக்கும் முதற்கடவுளாக இருந்தாலன்றி நான் செய்யும் சம்ஹாரம் ஒழியாது. நீங்களும் சுகமடையமாட்டீர்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். அவர்கள் அனைவரும் தேவியிடம் விடைபெற்றுச் சிவபெருமானையடைந்து நிகழ்தனவற்றைச் சொன்னார்கள். சிவபெருமானும் விஷ்ணு முதலான தேவர்களும் அதைக்கேட்டு தீவிரமாக ஆலோசித்து விட்டு இப்பொழுது உலகங்களுக்கு ÷க்ஷமம் உண்டாவதே முக்கியமாகும் ஆகையால் பார்வதிதேவியின் விருப்பப்படி நடப்பதுதான் நன்மையைத் தரும் என்று தீர்மானித்தார்கள் பிறகு சிவபெருமான் சஞ்சீவி முதலிய சகல அவுஷதங்களையும் கொண்ட துரோணாசலய என்ற மலையைத் தம் முன்னால் வர வேண்டும் என்று நினைத்தார், உடனே சஞ்சீவகரணம் முதலிய மருந்து மூலிகைகள் நிறைந்த அந்த மலை அங்கு வந்து சேர்ந்தது அதிலுள்ள மூலிகைகள் படிந்த காற்று வீசியது. அதனால் போரில் உயிர் ஒழிந்த தேவ, முனி பிரதமகணங்கள் உயிர் பெற்று எழுந்தார்கள். அப்போது பாசத்தால் கட்டுண்டு மூர்ச்சித்துக்கிடந்த கணபாலனைப் பார்த்த சிவபெருமான் வருந்திப் பாசத்தை அகற்றித் தனது திருக்கையால் அவனது திருமேனியை தடவினார். அக்கணமே கணபாலன் மூர்ச்சை தெளிந்து என் இருப்புலக்கை எங்கே? என்னுடன் போர் செய்த அந்த விஷ்ணு எங்கே? அவனைக் கொல்ல வேண்டும் என்று அறைகூவிக் கொண்டே தன் இரும்புலக்கையைக் கையிலே தூக்கி நின்றான். இந்திரன் முதலான தேவர்களும் நாரதர் முதலான முனிவர்களும் கணன் மூர்ச்சை தெளிந்து எழுந்தது கண்டு மகிழ்ந்து, சிவபெருமான், மஹாவிஷ்ணு பிரமன் முதலிய முப்பெருந்தேவர்களைப் பார்த்து , இனி பார்வதி தேவியார் கேட்ட காரியங்கள் எல்லாம் உங்களால் செய்து முடிய வேண்டும் என்றார்கள். இத்யாலோச்ய ஸங்கரஸ்ச லோகாநாம் ஸுகஹேதுகாம் ஸஞ்ஜீவகரணீ யுக்தத்ரோணா சலமமேய தீ ஸ்மரணா தேவஸகிரிராகத்வ ஸ்மஸ்திதஸ்ததா ஸங்கரஸ்தவாக தஸ்ஸத்ய பாஸமோச நமோதநோத் ஸஞ்ஜீவகரணீ வாயுப்ரசார வஸதஸ்ததா ஸிவஸ்ய சகரஸ்பர்ஸாத் ஸஞ்ஞாம் லப்த்வ கணஸ்த்தா. பரிகம் க்வாத்ய விஷ்ணு; க்வஹந்மயதாம் ஹந்யதாமிதி உக்த்வாமுஸல மாதாய ஸ்திதோதுரி கணோத்தம இந்தராத்யா நாரதாத்யாஸ்ச கணம் வீக்ஷயமுதாந்விதா ப்ரஸம் ஸந்தஸ்ததா தேவாஸ்ஸிவம் விஷ்ணும் விதிந்ததா இவ்வாறு தேவர்கள் கூறியதைக் கேட்ட பிருமா முதலான தேவர்கள் நாம் அனைவரும் எப்படிச் சிவனாரின் கட்டளையால் சஞ்சரிக்கின்றோமோ, அத்தகைய பரிபூரண தேஜஸானது வேத மந்திர சம்பந்தத்தால் இந்தக் கணனுக்கு உண்டாக வேண்டும். என்று அபிமந்திரித்து சுந்தராகாரமுடைய கணனை பிரமத கணங்களும் யக்ஷர்களும் விஷ்ணு முதலான தேவர்கள் அனைவரும் கணநாதராக இருக்கும்படி பட்டாபிஷேகம் செய்து ஆடையாபரண அலங்காரஞ் செய்து, அவனை அழைத்துக் கொண்டு பார்வதியிடம் சென்று காண்பித்தார்கள். பார்வதி தேவி கணனை வாழ்த்தி அவன் உடலைத் தனது திருக்கையால் தடவி மகனே! நீ மிகவும் வருந்தித் தன்யனானாய், கடமையை நிறைவேற்றுவதில் கண்ணியமாக இருந்தாய் இன்று முதல் யாவராலும் நீ மிகவும் முன்னதாக பூஜிக்கத் தக்கவனாகுக, உன் முகத்தில் சிந்தூரம் அணிந்திருப்பதால் சிவப்பு சந்தனத்தால் பூஜிக்க நீ மகிழ்வாயாக, உன்னைச் செம்மலர்கள் சந்தனம் நைவேத்யம் நீராஞ்சனம், தாம்பூலம், அர்க்கியம், பிரதக்ஷிணம், நமஸ்காரம் முதலியவற்றோடு பூஜிப்பவர்களுக்கு சகல காரியசித்தியும் கைகூடும். இதில் ஐயமில்லை என்று சொல்லித் தான் முன்பு கோபித்துப் பிர யோகித்த சக்திகளை திருப்பியழைத்து இனி யுத்தம் வேண்டாம் என்று அச்சக்திகளை தன்னிடத்திலேயே ஒடுக்கிக் கொண்டாள் இப்பொழுதே தேவர்களுக்குச் சுகம் உண்டானதால் இந்திராதி இமையவர்கள் பார்வதி தேவியை பலவாறு துதித்து சிவபெருமானை அழைத்துக் கொண்டு போய் தேவியாருடன் இணைந்திருக்கச் செய்து இருவரையும் சந்தோஷப்படுத்தி. சிவபெருமானது திருத்தொடையின் மீது பிள்ளையாரான விநாயகரை யானை முகப்பிள்ளையாரின் தலை மீது தன் திருக்கையை வைத்து தேவர்களை நோக்கி இவன் என் பிள்ளை என்று கூற கணேசர் சிவபெருமானது திருத்தொடையிலிருந்து இறங்கி எதிர் நின்று சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வணங்கி தேவர்களை கைகுவித்து சிவபெருமானை நோக்கி தேவதேவா! நான் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்றார் சிவபெருமான் அங்கிருந்த தேவர்களைப் பார்த்து, பிருமனே! விஷ்ணுவே நாம் உலகத்தில் பூஜிக்கப்படுவதைப் போல இக் கணேசனும் யாவராலும் பூஜிக்கப்படவேண்டும், மேலும் இவ்விநாயகனை முதலில் பூஜித்து, நம்மைப் பின்னால் பூஜித்தால் தான் நாமே மகிழ்வோம். இவனைப் பூஜிக்காதவர்களுக்கு காரியங்கள் சித்தியாகாது என்றார். அதன் பிறகு சிவபெருமானே முதலில் கணபதியைப் பூஜித்தார். இரண்டாவதாக அவரை விஷ்ணுவும், மூன்றாவதாகவும் பிருமதேவனும், நான்காவதாகப் பார்வதியும் பிறகு தேவர்கள் அனைவருமாக மிக்க மகிழ்ச்சியுடன் அவரைப் பூஜித்தார்கள். சிவபெருமான் கணேசருக்குப் பல வரங்களைக் கொடுத்து உன் பெயர் விக்நஹந்தா(விக்கினங்களைப் போக்குபவன்) சகல கணங்களுக்கு தலைவனான நீ பூஜிக்கத்தக்கவனாக வேண்டும் என்று கூறினார். உடனே சிவ கணங்கள் மங்கள வாத்தியங்களை முழங்கினார்கள், தேவமங்கையர் நடனமாடி இன்னிசைப் பொழிந்தார்கள். சிவபெருமான் மீண்டும் கணபதியைப் பார்த்து பாத்திரபத மாச சுக்கில பக்ஷ சந்திரோதய சமயத்தில் இரவு முதற்சாமத்தில் உச்சஸ்தக் கிரஹஞ்சக யோகத்தில் பார்வதி தேவி விக்னேஸ்வரனை நிர்மித்ததால் அந்தச் சமயத்தில் விக்னேஸ்வரனை பூஜித்தல் உத்தமத்திலும் உத்தமமாகும். அன்று முதல் மறு வருஷம் வருகிற அந்தத் திதி வரையில் பிரதி சதுர்த்திகளிலும் விரதத்தை நியமந் தவறாமல் என் கட்டளைப்படிச் செய்யவேண்டும் இப்படிச் செய்பவர்களின் குடும்பம் சகல சவுகரியங்களையும் பெற்றுச் சுகமாக இருக்கும் என்று கூறினார். மார்க்கசீரிஷ கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி நாளன்று அதிகாலை உதயத்தில் நீராடிக் குளித்து ஒரு பிராமணனைத் தான் செய்யவிருக்கும் கணபதி பூஜைக்கு இராத்திரி உபயோகப்படும்படி நியமித்து தான் முழுவதும் உண்ணாவிரதத்தோடு உபவாசமிருந்து அந்தப் பிராமணனைக் கணபதியாகப் பாவித்து, தூர்வத்தால் பூஜித்து இரவு ஒரு ஜாமங்கழித்த பிறகு ஸ்நானஞ் செய்து பொன் முதலிய உலோகங்களாலாவது அல்லது பவளத்தாலாவது அல்லது வெள்ளெருக்க மரத்தாலாவது மண்ணாலாவது கணபதிப் பிரதிமை செய்து அதற்கு பிராணப் பிரதிஷ்டை முதலிய நியதியுடன் கந்த, புஷ்ப, தூப தீபங்களால் பூஜிக்க வேண்டும். பிறகு அவரது கீரிடத்தில் விளங்கும் பாலச் சந்திரனைப் பூஜிக்க வேண்டும், பிறகு அந்தப் பிராமணனைப் பூஜித்து அவனுக்கு இன்சுவையுடன் கூடிய அன்னம் இட்டுத் தானும் உப்பில்லாத இனிய அமுதைப் புசிக்க வேண்டும் இவ்வாறு மறு சதுர்த்திகளிலும் செய்து வந்து வருட முடிவில் விரத பூர்த்திக்காக உத்தியா பனமாக பன்னிரண்டு வேதியருக்கு அன்னமிட வேண்டும். இந்த விரதத்தில் தன் சக்திக்கேற்பத் திரவியலோபம் செய்யக் கூடாது. அஷ்டதளபத்மம் எழுதி அதில் ஒரு கலசத்தை அமைத்து, அதில் விக்னேஸ்வரரை ஆவாஹனம் செய்து தூப தீபாதிகளால் பூஜித்து ஹோமம் செய்து இரண்டு சுமங்கலிகளுக்கும் இரண்டு பிரம்மச்சாரிகளுக்கும் அன்னம் அளித்து பூஜித்து விதிப்படித் தான் இரவு முழுவதும் விழித்திருந்து வாத்திய கோஷங்களுடன் உத்சவம் செய்து மந்திரபுஷ்பம் சமர்ப்பித்து அன்புடன் தொழுது தன் இஷ்டங்களைச் சொல்லிக் கொள்ள வேண்டும். மறுநாள் விடியற்காலையில் மீண்டும் வழிபாடு இயற்றி நான் பூஜிக்கும் போது தேவரீர் எழுந்தருள வேண்டும் என்று விசர்ஜனம் செய்ய வேண்டும். இவ்வாறு விரதமிருப்பவர் மனதிலுள்ள கோரிக்கைகளை அடைவார்கள். பக்தியோடு செஞ்சந்தனம் சுவேதாக்ஷதை உபசாரம் முதலியவற்றோடு பூசிப்பவர்கள் சகல காரிய சித்தியும் பெற்று எல்லா விக்கினங்களும் துன்பங்களும் நீங்கப் பெறுவார்கள், இந்த விரதம் எல்லா வர்ணத்தவரும் பெண்களும் பகை வெல்ல விரும்பும் அரசர்களும் செய்வார்களாக! என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார். இந்தச் சமயத்தில் அனைவரும் பிள்ளையாரான கணநாதரைப் பூஜித்து வழிப்பட்டார்கள் தன் புதல்வனுக்கு நேர்ந்த ஏற்றத்தைக் கண்டு பார்வதிதேவி அடைந்த மகிழ்ச்சியை எழுத்தாலும் சொற்களாலும் சொல்ல ஒருவராலுமே முடியாது. அப்போது தேவவாத்தியங்கள் முழங்கின தேவர்கள் மலர் மாரி பொழிந்தார்கள் உலகங்கள் யாவும் மகிழ்ந்திருந்தன. 34. விநாயகர் வலம் வந்த கதை தவஞானிகளே! தேவர்களும் முனிவர்களும் சிவனாரின் கட்டளையை ஏற்றுச் சிவனாரையும் பார்வதி தேவியையும் கணேசரையும் புகழ்ந்து எத்தகைய பெரிய யுத்தம் உலகமே சம்ஹாரமாகத் தக்கதாக நிகழ்ந்து விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிவகணங்களும் சிவபெருமானும் உலகங்கள் பிழைத்தற்காக மகிழ்ந்தார்கள். பார்வதிதேவியின் கோபமும் தணிந்தது. மகாவிஷ்ணுவும் பிருமதேவரும் சிவபெருமானிடம் விடைபெற்று தத்தமது உலகை அடைந்தார்கள். நாரதரும் பார்வதிதேவியைப் புகழ்ந்து பாடிவிட்டு தம் சஞ்சாரத்திற்குச் சென்று விட்டார் என்றார் சூதபுராணிகர். மாதவரே! கணபதியின் வரலாற்றைச் சொல்லிக் கேட்டோம் ஆயினும் அவருடைய திவ்விய சரிதங்களைக் கேட்க நாங்கள் மேலும் ஆவலாக இருக்கிறோம். என்றார்கள் நைமிசாரண்ய முனிவர்கள். சூதபுராணிகர் கூறலானார் முனிவர்களே! சிவபெருமானும் பார்வதிதேவியும் கணேசரிடம் அதிக வாஞ்சை கொண்டு, அவரை விளையாட்டாகவே வளர்த்தார்கள், கணேசரும் ஆறுமுகனும் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து அவர்களுக்குப் பிரியம் விளைவித்தார்கள். வளர்பிறை நிலவைப்போல் இரண்டு சகோதரரிடமும் நட்பு பெருகிற்று இந்நிலையில் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் தங்கள் புதல்வர் இருவருக்கும் எப்படித் திருமணஞ் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பேசுவதைக் கேட்ட கணேசரும் முருகரும் ஆச்சரியமடைந்து எனக்கு தான் முதலில் கல்யாணம் ஆக வேண்டும் எனக்கே முதலில் திருமணம் என்று ஒருவரோடு ஒருவர் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அதை அறிந்த சிவபெருமானும் பார்வதிதேவியும் ஒரு யோசனை செய்து ஓரிடத்திலிருந்து புதல்வரிருவரையும் அன்புடன் அழைத்து பிள்ளைகளே! நீங்கள் இருவரும் சமமானவர்கள் நாங்கள் உங்கள் இருவரையுமே ஒரே தன்மையாகவே மதிக்கிறோம். இப்போது உங்களுக்குத் திருமணம் செய்ய வேண்டி ஒரு யோசனை செய்திருக்கிறோம். அதாவது உங்களில் எவன் ஒருவன் இந்த உலகத்தைச் சுற்றி வலம் வந்து முதலில் எங்களிடம் வந்து சேர்வானோ அவனுக்கு முதலிலும் எவன் பிறகு வருகிறானோ அவனுக்கு இரண்டாவதாகவும் திருமணஞ் செய்ய வேண்டும் என்பதே அந்த யோசனை, என்றார்கள் உடனே சுப்பரமணியர் பூப்பிரதட்சிணம் செய்வதற்கு விரைந்து சென்றார். தொந்திப்பிள்ளையாரான கணபதியோ நாம் எவ்வாறு பூவுலகைச் சுற்றுவோம் என்று யோசித்தார் பிறகு முறைப்படி நீராடித் தாய் தந்தையரிடம் வந்து நீங்கள் இருவரும் சிறிது நேரம் சிங்காதனத்தில் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அவர்களுக்கு ஆசனமளிக்க அவர்களிருவரும் அவ்வாறே அமர்ந்தார்கள், பிறகு கணேசர் அவர்கள் இருவரையும் பார்த்து நான் உங்களை பூசிக்க வேண்டும் என்று கூறி அவர்களை அமைதியாக உட்கார வைத்து அம்மை அப்பராகிய அவர்களிருவரையும் ÷ஷாடசோபசாரத்துடன் பூஜை செய்து ஏழு முறை அவர்களை வலம் வந்து கைகுவித்து இவர்கள் எதிரே நின்று நான் சொல்லும் விஷயத்தைக் கேட்டு சீக்கிரம் எனக்குத் திருமணஞ் செய்விக்க வேண்டும்! என்றார். நீ விரைவில் உலகத்தை வலம் வா. சுப்பரமணியன் அதற்காகவே போயிருக்கிறான் நீயும் சென்று பூப் பிரதக்ஷிணம் செய்து முன்னே வந்தால் உனக்கே விரைவில் மணஞ் செய்வோம் என்றார்கள் பெற்றோர்கள். நான் பூமியை ஏழு பிரதக்ஷிணம் செய்து வந்திருக்க என்னை மறுபடியும் போகச் சொல்லாமா? என்று கேட்டார் பிள்ளையார், அக்கேள்வியை வியந்த உமா மகேஸ்வரர் நீ எப்பொழுது பூமியை வலம் வந்தாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் உங்கள் இருவரையும் பூஜித்து ஏழு முறை பிரதட்சிணம் செய்தது பிரதட்சிணம் அல்லவா உங்கள் இருவரையும் பிரதட்சிணம் செய்தால் உலகை வலம் வந்தது போலாகுமென்று வேத சாஸ்திரங்கள் கூறுவது எல்லாம் பொய்தானோ? உலகத்தில்தாய் தந்தையரைப் பூஜித்தும் பிரதட்சணம் செய்தால் பூப்பிரக்ஷிண பலன் கிடைக்கும், வீட்டிலிருக்கும் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு தீர்த்த யாத்திரை செய்பவன் தாய்தந்தையரைக் கொன்ற பாபத்தை அடைவான். தாய்தந்தையரின் பாத கமலத்தீர்த்தத்தைவிட புதல்வனுக்கு வேறு தீர்ததங்களே கிடையாது. கங்கை முதலிய தீர்த்தங்களெல்லாம் கஷ்டப்பட்டு அடைய வேண்டியவை இதுவோ அண்மையில் உள்ளதும் எளிதானதும் தர்ம ஸாதனமானதும் பயன்கள் யாவற்றையும் கொடுக்கவும் வல்லது புதல்வனாக இருப்பவன் தன் தாய் தந்தையரைப் பூசிப்பதே தீர்த்த யாத்திரையின் பலனைத் தரும், மனைவியானவள் தன் கணவனைப் பூசிப்பதே தீர்த்த யாத்திரையின் பயனைத் தந்துவிடும் இவ்வாறு திருமறை நூல்களில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இதைப் பொய்யாக்குவதனால் உங்கள் ஸ்வரூபமும் அசத்தியமேயாம். வேதங்களும் பொய்! ஆகையால் நான் பூப்பிரதட்சணம் ஏழுமுறைகள் செய்தது நிச்சயமும் சத்தியமுமாகும் ஆகவே வேத சாஸ்திரங்களை மெய்யென்றோ பொய்யென்றோ ஆக்குங்கள் அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது என்றார் விநாயகர் வினயமாக அதனால் உமாதேவியும் சிவபெருமானும் பெரிதும் மகிழ்ச்சிடைந்தார்கள். 35. கணபதியாரின் திருமணம் சிவபெருமானும் பார்வதிதேவியும் கணபதியைப்பார்த்து கணேசா, நீயே மஹாபுத்திசாலி தாய் தந்தையரிடம் திடபக்தியுடைய நீ சொன்னவை உண்மையானவை துக்கம் ஏற்பட்ட சமயங்களில் எவன் ஒருவன் நிர்மலமுடையவனாக இருப்பானோ அவனது துக்கங்கள் சூரியனைக் கண்ட இருள்போல நீங்கும் தாய் தந்தையரை வலம் வந்தால் பூமியை வலம் வந்த பயன் கிடைக்கும் என்று வேதசாஸ்திர புராணங்கள் கூறுகின்றன. நாங்களும் உன் செயல் கண்டு மகிழ்ந்தோம் என்று பாராட்டிவிட்டுத் திருமண விஷயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விஸ்வரூபனின் புதல்வியர்களான சித்தி, புத்தி என்ற மிகவும் அழகிய கன்னியரை வேத விதிப்படிச் சர்வ ஆடம்பரமாகத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்கள். தேவர்கள் முனிவர்கள் யாவரும் கணபதியின் திருமணத்திற்கு வந்தார்கள். விசுவரூபன் தன் புதல்வியர் இருவரையும் கணபதிக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அதன் பிறகு கணபதியும் சித்தி புத்திகளுடன் கூடிச் சுகம் அனுபவித்ததைப் பற்றி அளவிட்டு வர்ணிக்கவே இயலாது சிறிது காலம் கழிந்த பிறகு சித்தி என்னும் மனைவியிடம் லக்ஷன் என்னும் பிள்ளையும் புத்தி என்னும் மனைவியிடம் லாபன் என்னும் பிள்ளையும் உண்டானார்கள். அந்த சமயத்தில் பூப்பிரதக்ஷிணம் செய்யச் சென்ற குமாரக் கடவுள்; பூமியை வலம் வந்து கைலாயமலைக்குத் திரும்பி வந்தடையும்போது கலகப் பிரியரான நாரதமுனிவர் புன்சிரிப்போடு அங்கு வந்து சுப்பிரமணியமூர்த்தி உம் தாய் தந்தையர் செய்த காரியத்தைக் கேட்டீரோ? உம்மை பூப்பிரதட்சிணம் செய்ய அனுப்பி விட்டு விக்கினேஸ்வரனுக்கு இரண்டு கன்னியரைக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். இப்போது கணபதி அவ்விரு கன்னியரிடமும் இரு புதல்வரைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார். நீரோ இத்தனைக் கஷ்டத்துடன் பூப்பிரதட்சிணம் செய்து வந்திருக்கிறீர் பெற்றோர்களே இவ்வளவு அபகாரம் செய்தால் இதரர் என்ன காரியம்தான் செய்ய மாட்டார்கள்? இது மிகவும் அநியாயம்! இது அவ்வளவு சரியில்லை. இப்படி செய்தவர்களுடைய முகத்தைக் கூடப் பார்க்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது ம்! சொல்ல வேண்டியதைச் சொன்னேன். இனி உம் இஷ்டம் சண்முகா! என்று கோள்மூட்டிவிட்டுப் போய் விட்டார். அதன் பிறகு ஷண்முகர் தம் தாய் தந்தையிடம் விரைந்துவந்து அவர்களை வணங்கி கோபங்கொண்டு புறப்பட்டார் தாய் தந்தையர் தடுப்பதையும் கருதாமல் கிரவுஞ்சகிரி நோக்கிச் சென்றார். அவ்வாறு போகும் போது தாய் தந்தையர் நீ போக வேண்டாம்! பூப்பிரதட்சிணம் செய்து வந்ததும் விவாகம் செய்வதாக நாங்கள் சொன்னபடி இப்போது விவாகம் செய்து வைக்கிறோம்! என்று தடுத்தார்கள். அதற்குள் குமாரர் நீங்கள் என் விஷயத்தில் கபடஞ் செய்தீர்கள் ஆகையால் நான் இங்கிருக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே நடந்து கிரவுஞ்சகிரி சென்று அங்கேயே நின்றுவிட்டார். அன்றுமுதல் அவருக்கு குமார பிரம்மச்சாரி என்ற பெயர் உண்டாயிற்று. கார்த்திகைப் பவுர்ணமியன்று தேவர்கள் முனிவர்கள் முதலிய யாவரும் அங்கு சென்று குமார தரிசனம் செய்கிறார்கள் அந்த நாளில் தரிசிப்பவர்கள் பாபம் கழிந்து இஷ்டகாமியங்கள் கைகூடும் புத்திரனது பிரிவுக்கு ஆற்றாத பார்வதிதேவி மிக்க துயரத்துடன் கிரவுஞ்சகிரியையடைந்தாள். பிறகு சிவபெருமானும் மல்லிகார்ஜுனன் என்ற பெயருடன் ஜோதிர் லிங்கஸ்வரூபத்துடன் அங்கு சென்று வசித்தார். அங்கு பார்வதி பரமேஸ்வரன் ஆகியஇருவரும் பிரத்தியட்சமாக இருக்கிறார்கள். அவ்விருவரது வருகையையும் உணர்ந்து ஸ்கந்தர் அங்கிருந்து செல்ல யத்தனிக்கையில் தேவர்கள் அனைவரும் அங்கிருக்கும் படிப் பிரார்த்தித்தார்கள் பிறகு அங்கிருந்து மூன்று யோசனை தூரத்தில் சுப்ரமணியர் தங்கியிருந்தார். தாய் தந்தையர்கள் இருவரும் குமாரக் கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தோடு இருவுருவங்களில் அங்கே வருகின்றார்கள். நைமிசாரண்யமுனிவர்களே! கணபதியின் விவாக விஷயத்தை நீங்கள் கேட்டபடியே சொல்லிவிட்டேன். இந்தச் சரிதத்தைக் கேட்டவர்கள் சகல பாவங்களும் நீங்கப் பெற்றுச் சுகமாக வாழ்வார்கள். கணபதி விவாஹம் உரைத்த கதை முற்றிற்று. 36. உருத்திராட்சத்தின் பெருமையும் வகைகளும் முனிவர்களே, சிவ சரிதைகளே உங்களுக்கு விருப்பம் உண்டாக்குகின்றன சிவனாரைப் பணிந்து அவரது திவ்விய சரிதங்களைக்கேட்பவர்களே பரிசுத்தர்கள். அவர்களால் அவர்களது வம்சம் முழுவதும் புனிதமாகும் எவனுடையவாக்கில் சிவநாமங்களும் நெற்றியில் விபூதியும் கழுத்தில் உருத்திராக்கமும் ஆகிய இம்மூன்றும் விளங்குமோ அவனைப் பார்த்தால் திருவேணியில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். அவனை மதிக்காமல் அவமதிப்போர் அப்போதே பெரும் பாவம் அடைவார்கள் விபூதியணியாத நெற்றியும் உருத்திராக்ஷமணி அணியாத கழுத்தும் சிவநாமங்கள் சொல்லாத வாயுமுடைவனைக் கண்டால் சண்டாளனைக் கண்டாற் போல விலகிக் கொள்ள வேண்டும். சிவ நாமமே கங்கை விபூதியே யமுனை உருத்தி ராட்சமே சர்வ பாபங்களையும் போக்கும் ஸரஸ்வதி! விபூதிர்யஸ்ய கோபாலே களே ருத்திராக்ஷ தாரணம் நஹிஸிவமயீவாணீ தந்த்யஜே தந்த்ய ஜம்யதா ஸைவந் நாம ததா கங்கா விபூதிர் யமுநா சுததா ருத்திராக்ஷõ விதிஜாப் ரோக்தா ஸர்வ பாப ப்ரணாஸ நீ இம்மூன்றையும் அணிந்த பயனையும் திரிவேணியைத் தரிசித்த பயனையும், உலகத்திற்கு ஹிதஞ்செய்வதற்காக பிருமதேவர் ஒரு துலையில் வைத்து நிறுத்தார். அவை சமமாக இருப்பதைக் கண்டு பிரமன் முதலிய தேவர்கள் அனைவரும் இம்மூன்றையும் அடைந்தார்கள், ஆகையால் அணிந்தவனுடைய பயனைச் சொல்ல என்னால் ஆகுமோ? இவ்வாறு சூத முனிவர் சொன்னதும் நைமிசாரண்ய வாசிகள் அவரைப் பார்த்து சிவஞான செல்வரே; அத்தகைய பெரும் பேற்றைத் தரவல்ல ருத்திராட்சத்தின் மகிமையைக் கேட்டு நாங்கள் புனிதர்களாகும்படி விரித்துரைக்க வேண்டும்! என்றார்கள். சூதமுனிவர் சொல்லலானார். தவசீலர்களே! ஆயிரத்தொரு நூறு ருத்திராக்ஷங்களைத் தரித்தவன் ருத்திர ஸ்வரூபத்தையடைவான் அவன் அடையும் பயனை அநேக ஆண்டுகள் சொன்னாலும் முடிவுபெறாது அதிற்பாதியாகிய ஐந்நூற்றைம்பது மணிகளால் கிரீடஞ் செய்து தரித்தவன் சிவரூபியாவான். முந்நூற்றுபத்து மணிகளால் உபவீதம்(பூணூல்) செய்து தரிக்கலாம். சிகையில் மூன்றும் இருகாதுகளிலும் ஐந்து அல்லது ஆறும் ,கழுத்தில், நூற்றொன்றும், புயத்தில் பதினொன்றும் கன்னமாலை பதினொன்றும், மணிபந்தங்களிரண்டில் பதினொன்றும், பூணூலில், மூன்றுமாக முக்திகாமி அணியவேண்டும் ஐம்பது மணிகளை கடி சூத்திரமாக அணியத்தகும் இவ்வாறு அணிபவன் முக்தியடைவான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்விதம் அணிந்து ஆசனத்தில் அமர்ந்து சிவத்தியானம் செய்பவன் சாபாநுக்கிரக சாமர்த்தியமடைவான் அவனை கண்டவர் சகலபாவமும் போய் கங்கா ஸ்நான பலனும் சிவதரிசன பலனுமடைவான் ருத்திராட்ச மாலையைத் தாங்கி நூறு மந்திரஞ் ஜெபித்தால் ஆயிரம் ஜெபித்தபயன் கிடைக்கும். சிவபெருமான், மகாவிஷ்ணு சூரியன், சக்தி, கணபதி இவ்வைவர் மந்திரங்களையும் ஜெபிப்பதற்கு உருத்திராக்கமே சிறந்தது. இதனால் சகல மந்திரங்களும் ஜெபிக்கலாம் முக்தி, புத்திர பாக்கியம், ஐசுவரியம் வித்தை கன்னிகைகள் முதலானவற்றை விரும்புபவர்கள் ருத்திராக்ஷமணி தரித்து ஜெபித்தால் அவற்றைத் தடையின்றி அடைவார்கள் ஆயினும் சிவபக்தன் ருத்திராக்க மணிமாலையைச் சிறப்பாக அணிய வேண்டும். ருத்திராட்சத்தை விருப்பத்தோடணிந்தாலும் விருப்பமில்லாமல் அணிந்தாலும் பயனுண்டாம் எனவே அவை உத்தமமானவை. செல்வம் விரும்புவோன் பொன்னால் செய்த மணியும், புகழைவிரும்புவோன் முத்து மணியும், பிள்ளைப்பேறு விழைபவன் ஸ்படிகமணியும், வசியகாமி பவளமணியும், வாஹனகாமி வெள்ளிமணியும், கையிலேகொண்டு ஜபம் செய்யலாம் என்று திருநூல்கள் கூறுகின்றன. ஆயினும் ருத்திராட்ச மணியே இவற்றைக் காட்டிலும் சிறந்த பயனைக் கொடுக்கும். உபாசனை பல வகைப்படும், எனவே இந்த மணி மாலைகளில் வேதங்களைச் சொன்னேன். சிவபெருமானையும் விஷ்ணு மூர்த்தியையும் தியானிக்கும்போது ருத்திராட்ச மாலையே சுகம் கொடுக்க வல்லது சூரியனுக்கு ஸ்படிகமணியும் சண்டிகை கணேசருக்கு முத்து பவளமணியும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று பெரியோர் கூறுவர். இவ்விதமாகச் சொன்னாலும் ருத்திராக்கமே சிவபெருமானைப் பெரிதும் மகிழச்செய்யும், முத்துடன் கலந்த ருத்திராக்ஷம் விஷ்ணுவை மகிழச் செய்யும், பூர்வத்தில் வியாசபகவான் முதலிய முனிவர்கள் சாஸ்திர விசாரணையால் ருத்திராட்சம் சிறந்தது என்றார்கள். இனி ருத்திராக்ஷங்களின் பேதங்களைச் சொல்கிறேன். ஒரு முக ருத்திராட்சம் சகல காரிய சித்தியைக் கொடுக்கும். இந்த ஒரு முக ருத்திராட்சமணி இருக்கும் இடத்தில் அணிமா முதலான அஷ்டசித்திகளும் இருக்கும். இருமுகமணி இருக்குமிடத்தில் லக்ஷ்மிகடாக்ஷம் விளங்கும். மும்முகமணி சகல சித்திகளையும் விளைவிக்கும், நான் முகமணி அறம், பொருள், இன்பம், வீடு எனும் புருஷார்த்தங்களையும் நல்கும், ஐம்முகமணி பாவத்தைப்போக்கும். ஒரு முகமணிகிடைப்பது அரிது அது இலத்தைப் பழத்தின் அளவில் கிடைத்தாலே சுகசவு பாக்கியங்கள் விருத்தியாகும் நெல்லிக்கனியளவில் கிடைத்தால் சகல துக்கங்களையும் ஒழிக்கும். கடலையளவாயின் விலை மதிக்கமுடியாதது. அத்தகைய மணிகளால் மாலையணிந்தவனை என்னவென்று சொல்வேன்? அவ்வொருமணியை வைத்திருப்பவன் சாட்சாத் சிவபெருமானே! மண்டலாதி பத்யராஜ்யாதி பத்தியமும் அதற்குச் சமானமாகாது அத்தகையமணி யொன்று கிடைத்தால் பொற்குவியலாவது ஆணிமுத்துக்கள் நூறாவது கொடுத்துப் பெறலாம். உருத்திராட்சம் அணியவேண்டியவன் அதைபொருள்கொடுத்து வாங்கியணிய வேண்டும், ஒருவன் இனமாகக் கொடுத்தால் வாங்ககூடாது ஆனால் தானங்கொடுத்தவனுக்கு சிறப்பான பயனுண்டு பொருள் கொடுத்து வாங்க முடியாதவன் தன் புண்ணியத்தைக் கொடுத்தாவது பெறலாம். கடலையளவு மணிபோக மோக்ஷõர்த் தங்களைக் கொடுக்கும் குண்டுமணியளவுடைய மணி காரியசாதனஞ் செய்யும் எவ்வளவு சிறியமணியைப் பூண்டானோ. அவ்வளவு விசேஷ பயனைப் பெறுவான். சிவமந்திரத்தை ஜெபிக்காதவனையும் ருத்திராட்சம் அணியாதவனையும் பரிகாசம் செய்யாமல் தூரமாகப் போக வேண்டும். ருத்திராட்சமாலை அணிந்தவனைப் பார்த்தால், பூதப் பிரேத பைசாச, சாகினிடாகினி முதல் சகல கிரகங்களும் ஆபிசாரம் முதலிய பிரயோகங்களும் அவனை நெருங்காமல் விலகிப் போய்விடும். ஏகமுக ருத்திராட்சத்தை நீரோட்டத்தில் விட்டால் எதிர்த்து ஓடும். இருமுகமணியை அணிந்து நெருப்பில் இறங்கினால் உடல் வேகாது ஜ்வரரோகம் நீங்கும். மூன்று முக மணியை அணிந்தவனை ஆயுதங்கள் ஊறுசெய்யாது. நான்கு முக மணியை வைத்திருப்பவன் வீட்டிற்கு வந்த சோரனுக்குக் கண்தெரியாது. இதைத் தண்ணீரில் விட்டால் மூழ்கி விடும். ஐம்முகமணியிருந்தால் சகல துன்பங்களையும் விலக்கிவிடும். இது நீரில் மூழ்காது இவ்வாறு மணியின் குணத்தைப் பரிசோதித்துப் பார்த்து அணிய வேண்டும், ஸ்நானம் தானம், ஜபம் ஓமம், அத்தியயனம், பிதுர்த்தர்ப்பணம் சிவவிஷ்ணு பூஜைகள் சிரார்த்தம் முதலிய எல்லாக் காலங்களிலும் ருத்திராக்ஷத்தைதரித்துக் கொள்ளலாம் முனிவர்களே! நீங்கள் கேட்ட ருத்திராட்ச மகிமையை விரும்பி கேட்டவன் சிவபெருமானுக்கு மிகவும் பிரிய முள்ளவனாவான். 37. ஜோதிலிங்கங்களின் தொகை சூதமுனிவரே! உலகத்திலே புண்ணிய தீர்த்தங்களிலுள்ள புகழ் பெற்ற லிங்கங்களையும் புண்ணிய ÷க்ஷத்திரங்களிலுள்ள லிங்கங்களையும் சொல்ல வேண்டும்! என்று சவுனகாதி முனிவர்கள் கேட்டார்கள் சூதமா முனிவர் சொல்லலானார். மாதவர்களே! நீங்கள் கேட்ட விஷயம் மிகச் சிறந்ததேயாயினும் பூமியே லிங்கமயமாக இருப்பதால் அவற்றின் தொகையைச் சொல்ல முடியாது. லிங்கம் இல்லாத இடமே இல்லை. கங்கை முதலிய தீர்த்தங்கள் யாவும் லிங்கமே. உலகம் யாவும் லிங்கத்திலேயே அடங்கியிருக்கிறது எனவே அவற்றை கணக்கிட முடியாது. ஆயினும் எனக்குத் தெரிந்த சில லிங்கங்களைப் பற்றிச் சொல்கிறேன். உலகத்தில் காணப்படுவதும் சொல்லப்படுவதும் நினைக்கப்படுவதும் கேட்கப்படுவதும் ஆகியயாவும் சிவரூபமே தவிர, வேறெதுவும் இல்லை. ஆயினும் எனக்கு வியாச பகவான் கூறியவற்றைச் சொல்கிறேன். தவசீலர்களே! இந்த உலகத்தின் இருப்பது போலவே பாதாவத்திலும் சொர்க்கலோகத்திலும் எவ்விடத்தும் லிங்கங்கள் இருக்கின்றன. பூமியிலுள்ள மானிடர்களும் பாதாளத்தில் இருக்கும் நாகர்களும் சுவர்க்கத்திலிருக்கும் தேவர்களும் ராட்சஸர் முதலானயாவரும் லிங்க பூஜை செய்கிறார்கள். சராசரத் மகமான பிரபஞ்ச முழுவதும் ஆன்மாக்களுக்கும் அருள் புரியவே சிவபெருமான் லிங்கரூபமாக விளங்குகிறார். பக்தியோடு பூஜிப்பவருக்கு அந்தந்த இடத்திலேயே விளங்கி அவரவருக்கு சர்வாபீஷ்டங்களையும் கொடுக்கிறார். ஆன்மாக்கள் தன்னை அருச்சித்துக் கடை தேறுவதற்காகவே சிவபெருமான் லிங்க ரூபத்தை ஏற்றிருக்கிறார். லிங்கார்ச்சனை செய்தால் சகல பயன்களும் கைகூடும் பிரதானமான லிங்கங்களைக் கேட்டால் சகல பாபங்களும் நீங்குமாகையால் தேஜோ லிங்கங்களைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். சவுராஷ்டிர தேசத்தில் ஸோமநாத லிங்கமும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன லிங்கமும், உஜ்ஜயினியில் மகாகாளிலிங்கமும் ஓங்கார லிங்கமும், ஹிமயமலையில் கேதார லிங்கமும், டாகினியில் பீமசங்கர லிங்கமும், வாரணாசியில் விஸ்வேஸ்வர லிங்கமும், கோதாவரி தீரத்தில் திரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைத்தியநாத லிங்கமும், தாருகாவனத்தில் நாகேஸ்வர லிங்கமும், சேதுவில் இராமேஸ்வர லிங்கமும், சிவாலயத்தில் குஸ்மேஸ் லிங்கமும் எனப் பன்னிரண்டு உண்டு. இந்த லிங்கங்களின் திருப்பெயர்களை விடியற்காலத்தில் எழுந்து துதிப்பவன் தன் பாபங்கள் ஒழிந்து சகல சித்திகளையும் பெறுவான். இந்த லிங்கங்களை எக்குலத்தினரும் அர்ச்சனை செய்து ஆராதிக்கலாம். அவ்வாறு அர்ச்சித்தவர்கள் மகாபாவிகளாக இருந்தாலும் கிருத கிருத்தியர்களாவார்கள். அந்த ஜோதிலிங்கங்களுக்கு நைவேதனம் செய்தவற்றை உண்டால் புண்ணியம் வரும் ஆறு மாதம் இந்த லிங்கங்களை அருச்சித்தவர்கள் உயர் குலத்தில் பிறந்து நற்கருமங்கள் செய்து மோட்சத்தை அடைவார்கள். இத்துவாதசலிங்கங்களேயல்லாமல் ஸ்மரித்தவுடனேயே பாபங்களை ஒழிக்கத்தக்க பஞ்சபூத லிங்கங்களான ஐந்துலிங்கங்கள் உண்டு. அவை காஞ்சியில் பிரித்விமயமான ஏகாம்பர லிங்கமும், ஜம்புகேஸ்வரத்தில் அப்புமயமான ஜம்பு கேஸ்வர லிங்கமும், அருணாசலத்தில் அக்கினிமயமான அருணாசல லிங்கமும், தக்ஷிணகைலாயம் என்ற புகழ் பெற்ற சுவர்ணமுகி லிங்கமும் பூலோக மஹா கைலாயம் என்ற புகழ் பெற்ற தில்லையில் ஆகாயமயமான திருமூல லிங்கமும் ஆகும். இவ்வைந்து லிங்கங்களைக் கண்ணால் கண்டாலும், காதால் கேட்டாலும், வாயால் சொன்னாலும், மனத்தால் நினைத்தாலும் அப்போதே புனிதமடைந்து, இஷ்டசித்திகள் கைகூடப் பெறுவர். இனி தீர்த்தங்களிலும் திவ்விய ஸ்தலங்களிலும் புண்ணிய லிங்கங்களின் உபலிங்கங்களைச் சொல்லுகிறேன். சவுராஷ்டிர சோமநாத லிங்கத்திற்கு மஹீநதிசாகர சங்கம் ஸ்தலத்தில் அந்தகேசலிங்கமும், மல்லிகார்ஜுனலிங்கத்திற்குப் பிருகுபர்வத சமீபத்தில் ருத்திரலிங்கமும், மஹாகாள லிங்கத்திற்குத் துக்தேச லிங்கமும், ஓங்காரேசுவர லிங்கத்திற்கு கர்த்தமேச லிங்கமும், கேதார லிங்கத்திற்கு யமுனா தீரத்தில் பூதேச லிங்கமும், பீமசங்கர லிங்கத்திற்கு பீமேஸ்வர லிங்கமும், விஸ்வே சுரலிங்கத்திற்கு சரண்யேஸ்வர லிங்கமும், திரியம்பக லிங்கத்திற்கு சித்தேஸ்வர லிங்கமும், வைத்தியநாத லிங்கத்திற்கு வைஜநாத லிங்கமும், நாகேஸ்வர லிங்கத்திற்கு ஜில்லிகா சரஸ்வதி சங்கமத்திலிருக்கும் பூதேஸ்வரலிங்கமும், இராமேஸ்வர லிங்கத்திற்கு குப்தேச லிங்கமும், குங்மேசலிங்கத்திற்கு வியாக்சிரேஸ்வர லிங்கமும் உபலிங்கங்களாகும், இனி பிரதானமான லிங்கங்களையும் சொல்கிறேன். அவை கங்கா தீரத்திலிருந்து பயன் தருகின்றன. அவை கிருத்திவாகேச லிங்கம், விருத்தகாலதேச லிங்கம், தலை பாண்டேசுரலிங்கம், தவாசுவமேத லிங்கம், கங்காசாகர சங்கமத்தில் சங்கமேஸ்வர லிங்கம், யமுனா தீரத்தில் கோதுமேஸ்வர லிங்கம், பிருந்தாவனத்தின் அருகே நீலேஸ்வர லிங்கம் பூதேஸ்வர லிங்கம், கவுசிகி தீரத்தில் நாரீசுவர லிங்கம், நல்லகி தீரத்தில் கடுகேச லிங்கம், புஷ்கரதீரத்தில் பூரேசலிங்கம், மல்குமணி தீரத்தில் மண்டகேஸ லிங்கம், கோமதி சாகர சங்கமத்தில் சித்த நாகேஸ்வரலிங்கம் பந்தனத்தில்(பாட்னா) தூரேச லிங்கம் மிருகேசலிங்கம், ஜகந்நாதலிங்கம் எனப்படும். நருமதை தீரத்திலுள்ள லிங்கத் தொகையை ஒருவராலும் சொல்லமுடியாது அந்த மகாநதியே சிவரூபமாயும் பாபநாசனியாகவும் இருக்கிறது அதிலுள்ள பருக்கை கற்கள் யாவுமே சிவலிங்கமே. ஆயினும் அங்கிருக்கும் லிங்கங்களில் சிலவற்றின் பெயர்களைச் சொல்கிறேன் அங்குள்ள மாமலையில் ஆவர்த்தேசர், பத்மேஸர், சிம்ஹேசர், ஸுமேசர், குமாரேசர், புண்டரீகேசர், மண்டபேசர், தீக்ஷீணேசர், துந்தரேசர், குலேசர், கும்பேசர், குபேரேசர், சோமேசர், நீலகண்டேசர், மங்களேசர் நந்திகேசர் எனப்பெயர் பெற்றவை நந்திகேசர் கோடி பிரம்மஹத்திகளையும் போக்கடிப்பவர் அந்த லிங்கத்தைப் பக்தியோடு பூஜிப்பவன் அடையாத பயன் இல்லை. அங்கு நருமதையாற்றில் நீராடிக் குளிப்பவர்கள் தாம் செய்த பாவங்களையெல்லாம் நீங்குவர். 38. யாத்ரீகன் கதையும் நந்திகேஸ்வர லிங்க மகிமையும் சிவ நேசர்களே! பூர்வத்தில் தர்மராஜன் நாரத முனிவரிடம் கேட்ட ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். நர்மதை நதி தீரத்தில் கர்ணகி என்ற பட்டிணத்தில் உதத்திய வமிசத்தில் உதித்த பிராமணன் ஒருவன் காசியாத்திரை செய்ய விரும்பி, தன் இரு குமாரர்களிடம் தன் மனைவியை ஒப்படைத்து விட்டு காசிக்கு யாத்திரை சென்று அங்கு தங்கியிருந்து ஒரு நாள் இறந்து விட்டான். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் புத்திரர்கள் தங்கள் தந்தைக்குச் செய்ய வேண்டிய அந்தியேஷ்டி முதலிய கருமங்களைச் செய்தார்கள். இறந்தவனின் மனைவி தன் மக்கள் மீது கொண்டிருந்த விருப்பத்தால் அவர்களைக் காத்து மணவினை முடித்து முன்னோர் வைத்திருந்த பொருளை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்து தன் பாதுகாப்பிற்குச் சிறிது தனம் வைத்திருந்து சில காலத்தில் அதைத் தரும வழியில் செலவிட்டுப் புண்ணியம் தேடியும் பிராணன் ஒழியாதிருக்க வாழ்ந்து வந்தாள். அப்போது அவளது புத்திரர்கள் தாயை நோக்கி. அம்மா உனக்கு மனக்குறை ஏதாவது இருந்தால் அதை எங்களிடம் சொல்! என்றார்கள். அதற்கு அவள் எனக்கு ஒரு குறையிருக்கிறது. அதை செய்வீர்களானால் எனக்கு நல்ல மரணம் ஏற்படும், என்றாள். அது என்னவென்று புதல்வர்கள் கேட்டார்கள். அதற்கு அவள் அது என் மூத்தமகன் செய்ய வேண்டியது அவன் அதைச் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. அதாவது காசியில் மரணம் கிட்டாவிட்டாலும் என் எலும்புகளை கங்கையில் விடவேண்டும் என்பதேயாகும்? அவ்வாறு செய்தால் எனக்கு ÷க்ஷமம் வரும் இதுவே என் விருப்பம் என்றாள். மூத்த மகன் அவளை நோக்கி, தாயே! நீ நல்லமனதோடு உயிர் நீத்தால் உன் காரியத்தை நீ சொன்னபடி நான் செய்த பிறகே என் காரியங்களைச் செய்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான். உடனே தாய் சிவஸ்மரணை செய்துகொண்டே பிராணனை விட்டாள். அப்போது அவளது புத்திரர்கள், தகனம் முதல் உத்தரகிரியை சீராக யாவற்றையுஞ் சிறப்பாகச் செய்தார்கள். சுவாதன் என்ற ஜேஷ்ட-குமாரன் முதல் மாசிகம் செய்து காசிக்குப் போகத் தாயின் எலும்புகளை எடுத்துக்கொண்டு தன் மனைவியையும் புதல்வரையும் வீட்டிலே நிறுத்தி விரைவில் வந்து விடுவதாகச் சொல்லி விட்டு ஒரு சேவகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டான். ஒரு யோஜனை தூரம் சென்றதும் இருட்டி விட்டதால் அங்கு ஒரு பிராமணன் வீட்டில் சேர்ந்து சந்தியா வந்தனம் முதலிய கிரியைகளைச் செய்து முடித்துக் கொண்டு அன்றிரவு தங்கி சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். அப்போது ஐந்து நாழிகை இரவில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. அந்த வீட்டு வாசலில் பசுவொன்று கட்டப்பட்டிருந்தது. அவ்வீட்டு வேதியன் பசுவை இன்னும் கறக்கவில்லையா? என்று கேட்டுக் கொண்டே கன்றை அவிழ்த்து விட்டு தன் மனைவியை பசுவை கறப்பதற்குக் கூப்பிட்டு அந்தக் கன்றின் கழுத்துக் கயிற்றைப் பற்றி இழுத்துப் போனான். அப்போது அந்தக் கன்று அவன் காலை மிதிக்கவே வேதியன் கோபங்கொண்டு தன்னை மிதித்தற்காக அந்தக் கன்றை கொம்பாலடித்துப் பாலூட்ட விடாமலும் கொண்டு சென்று ஒரு தூணில் கட்டிப்போட்டான். கன்று அருந்தாத பால் பசுவின் மடியில் இருந்ததால் பசுவானது மிகவும் அழுதது. அவ்விரைச்சலைக் கேட்டதும் பசுவின் கன்று தாயே! நீ ஏன் கூச்சலிடுகிறாய்? என்று கேட்டது. அதற்கு தாய்ப் பசு எனக்கு நேர்ந்த துக்கம் உன்னை அவன் கொம்பாலடித்ததால் உண்டானது என்றது. தாயே! நாம் கர்ம வசத்திலுள்ள ஜீவர்கள் ஆகையால் கர்மத்தை அனுபவிக்காமல் நாம் எங்கே போகமுடியும். பூர்வத்தில் சிரித்துக்கொண்டே செய்த கர்மத்தை இப்போது அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்கிறது. சுக துக்கங்கள் அனுபவிக்காமல் தப்புவதில்லை என்று கன்று பதில் கூறியது. அதற்குத் தாய்ப்பசு, மகனே, நீ சொல்லும் வார்த்தை நான் அறிந்ததுதான் ஆயினும் சம்சார மாயையால் துக்கம் அடைந்திருக்கிறேன். நான் அழுதும் துக்கம் அடங்கவில்லை! என்றது. அதற்கு அதன் கன்று நீ அழுவதால் பயன் என்ன! அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து தானே தீர வேண்டும்? என்றது. அதற்குப் பசுவானது எனக்கு இப்போது உண்டான துக்கம் இந்த வேதியனுக்கும் உண்டானாலன்றி ஒழியாது. ஆகையால் இவனுக்கு அத்தகைய துன்பத்தை நான் உண்டாக்குவேன். அப்போதுதான் அது தன் செயலால் விளைந்தது என்பதை உணர்வான். மகனுக்குத் துன்பம் நேர்ந்தால் தாய்க்கும் அதைக் காட்டிலும் துக்கம் அதிகமாக இருக்கும்! நாளை உதயத்தில் அவ்வேதியனின் மைந்தனை என் கொம்புகளில் குத்திவிடப்போகிறேன். அதனால் அவன் புத்திரன் மாண்டு போவான் என்றது. அதற்கு கன்று தாயே! இதுவரையில் நாம் செய்த கர்மத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது போதாதென்று இந்தப் பிரமஹத்தியை வேறு அடைய வேண்டுமா? இவன் புதல்வனைக் கொன்றால் உனக்கும் அத்தகைய துன்பம் மீண்டும் வராமல் இருக்காது நற்கருமம் செய்தால் சுவர்க்கலோகமும் துர்க்கருமம் செய்தால் நரகமும் மிஸ்ர(கலவைக்) கர்மம் செய்தால் மானுடப்பிறவியும் கர்மநவிவால் முக்தியும் உண்டாகும். ஆகையால் நீ இத்தகைய தீச் செயலைச் செய்ய வேண்டாம். என்னை அவன் அடித்தானே என்று நினைக்கிறாயா? நான் யார்; நீ யார்? நீ தாயும் இல்லை, நான் உன் புதல்வனுமில்லை. தாய் தந்தை உற்றார் உறவினர்கள் மக்கள் என்று சொல்லப்படுகின்ற யாவுமே பொய்! எல்லா பிராணிகளும் தத்தமது கர்மத்தை அனுபவிக்க வேண்டும். ஆகையால் இதனை உணர்ந்து தீமை செய்யாமல் நன்மையையே செய்ய வேண்டும் என்றது, அதற்குத் தாய்ப் பசு, உனக்கு விளைவித்த துன்பத்தைக்கண்ட நான் அதை அவர்களுக்குத் திருப்பிச் செய்வது எப்போது என்று நான் பதைக்கிறேன். பிருமஹத்தி வரும் என்றாயல்லவா? அதைப்போக்கடிக்க தக்க புண்ணிய ஸ்தலம் ஒன்று இருக்கிறது. அது எனக்குத் தெரியும். இந்த வேதியச் சிறுவனைக் கொன்றால் என் உடல் கறுத்து விடும். அந்தப் பிரமஹத்தி நீங்கியவுடன் என் உடல் பழையபடி வெள்ளையாகி விடும். இது எனக்குத் தெரியும் என்று சொல்லியது. கன்று பதில் பேசவில்லை. இந்த சம்பாஷணையை மிருகங்களின் பேச்சு மொழியை உணர்ந்திருந்த காசியாத்திரைப் பிராமணன் கேட்டுக் கொண்டிருந்தான். இதைச்சோதித்த பிறகே நாம் போகவேண்டும் என்று அவன் அந்த வீட்டிலேயே தங்கியிருந்தான். மறுநாள் காலையில் அவ்வீட்டு வேதியன் எழுந்து. வழிப்போக்கனைப் பார்த்து ஐயரே! பொழுது ஏறுகிறேதே! இன்னும் நித்திரை செய்கிறீரே? என்று கேட்டான். அதற்கு காசியாத்திரை செல்வோன் எனக்கும் என் சேவகனுக்கும் இளைப்பாக இருப்பதால் இரண்டு நாழிகை கழித்துச் செல்கிறோம் என்று மறைத்துச் சொல்லி உறங்குபவனைப் போலிருந்தான். அப்போது பசுவைக்கறக்கும் வேளையாயிற்று. வேதியன் வேறு வேலைக்குப் போக வேண்டியிருந்ததால் தன் மகனை அழைத்து, நீ கன்றை விடு என்று கூறிவிட்டுப் போய் விட்டான். அதன்படி சிறுவன் கன்றை அவிழ்த்து பசுவினிடம் விட அவன் தாய் பால் கறக்க வந்தாள். பசுவின் மடி சுரந்ததைக் கண்டு கன்றைப் பழையபடி கட்ட ஒரு கோலால் புடைத்து இறக்கிக் கட்டும் போது, பசுவானது கோபித்து அவனைத் தன் கொம்புகளால் குத்திற்று சிறுவன் பக்கத்தில் பாய்ந்து விழுந்து மூர்ச்சையானான். அதைக் கண்டோர் சொல்ல தந்தை முதல் அநேகர் கும்பலாகக் கூடித் தண்ணீர் கொண்டு வாருங்கள். என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அந்தச் சிறுவன் மரண மடைந்தான். அதைக் கண்டு அனைவரும் அழுது புலம்பினார்கள். அந்த வீட்டு வேலைக்காரன் பசுவை அடித்து அவிழ்த்து விட்டான். வெண்ணிறமான அந்தப்பசு கருநிறமடைந்தது: எல்லோரும் வருந்தினார்கள். இந்த வினோதத்தையெல்லாம் கண்ட காசியாத்ரீகன் தன் சேவகனுடன் புறப்பட்டு பசு போகும் வழியைப்பின் தொடர்ந்து சென்றான். பிருமஹத்தி தோஷத்திற்கு ஆளான பசுவானது வாலைக் கிளப்பிக்கொண்டு நருமதை நதியை அடைந்து நந்திகேஸ்வரரின் சமீபத்தில் இருந்த திவ்வியமான ஜலத்தில் மூன்று முறை மூழ்கி ஸ்நானம் செய்ததும், வெண்ணிறம் அடைந்து தான் வந்தவழியே திரும்பிச் சென்றது. அதைக் கண்ட காசியாத்ரீகன். ஆஹா! இந்தத் தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்தவுடனேயே பிரமஹத்தி ஒழிந்ததே! என்று தானும் தன் சேவகனுமாக அதில் ஸ்நானம் செய்து நந்திகேஸ்வரரை வணங்கி வழிபாடு இயற்றி விட்டுச் சென்றார்கள். அவர்களை அவ்வாறு போகும்போது, அவர்கள் இருவருக்கும் எதிரில் சர்வாபரணங்களையணிந்த பெண் ஒருத்தி வந்து நீ எங்கிருந்து வருகிறாய்? பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! என்று கேட்டாள். அதற்கு யாத்திரீகன் எதையும் மறைக்காமல் நடந்தவற்றைச் சொல்லிவிட்டான். அதன்பிறகு அவள் யாத்ரீகனைப் பார்த்து, நீ இங்கேயே இருக்கவேண்டும் என்றாள். யாத்ரீகனும் தன் சேவகனுடன் அங்கேயே தங்கியிருந்தான். அப்போது கங்கையான அந்த மங்கை நீ எங்கே இவ்விசேஷத்தைக்கண்டாயோ, அங்கேயே இவ்வெலும்புகளை விட்டு விடுவாயானால் உன் தாய் திவ்விய தேகமடைந்து ஸ்வர்க்கம் சேர்வாள் ஒவ்வொரு ஆண்டும் வைகாச சுத்த சப்தமியில் கங்கை இவ்விடத்திற்கு வருவாள். இன்றைய தினம் அந்தச் சப்தமியாகும். நானே கங்கை! நான் அங்கு தான் போகிறேன் என்று சொல்லி மறைந்துவிட்டாள். காசியாத்ரீகன் மீண்டும் நர்மதை நதி தீரத்திலுள்ள நந்திகேஸ்வரத்துக்கு வந்து தன் தாயின் திவ்விய உருவத்துடன் தோன்றி, குமாரா நீயே தன்யன், நீயே கிருத கிருத்யன். உன் வம்சத்தை நீயே பவித்ரஞ் செய்தாய். உனக்குத் தனம் தான்யம் ஆயுள் வசிமவிருத்தி முதலான கிடைக்கும் என்று வரமளித்து. நற்கதியடைந்தாள். இவ்விதமாக, அந்தப் பிராமணன், தன் தாயின் அஸ்தியை நர்மதை நதியில் நந்திகேஸ்வரத்தின் அருகே விடுத்து, தன் யாத்திரையை முடித்துத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். அன்று முதல் அந்தத் தீர்த்தம் மானுடருக்கெல்லாம் பிரசித்தமாகத் தெரிந்தது. ஆகையால் நந்திகேஸ்வரத்திற்கு அருகில் நருமதை நதியில் ஸ்நானம் செய்தால் இஷ்ட காமியங்களையடைவார்கள் என்று தெரிந்து கொண்டார்கள். மேலும் ருஷீகை என்ற இளம் பிராமண விதவை ஒருத்தி அந்த ஸ்தலத்திற்குச் சென்று கடுமையான சிவபூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது மூடன் என்ற தைத்தியன் ஒருவன் அவளை சிவபூஜை செய்யாதிருக்கும்படி பலவகையாகப் போதித்தான். அப்படிப் போதித்தும் ருஷீகை சிவபூஜையைச் செய்து வந்ததால் தைத்தியன் தன் கோரரூபம் முதலியவற்றை அவளுக்குக் காட்டி பயமுறுத்தவே அவள் பயந்து சிவ சிவ என்று சிவ நாமங்களை ஸ்மரித்து சரணமடைந்த தன்னைக்காக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள். உடனே நந்திகேஸ்வரர் அவள் எதிரில் தோன்றி, உனக்கு ஒரு பயமுமில்லை. உன்னை நான் இரட்சித்தேன். அவ்வரக்கன் தானாகவே போய்விடுவான் நான் அனைவரையும் காத்தருள்வதற்காகவே இங்கிருக்கிறேன் என்று வரமளித்து அவள் பூஜித்த பார்த்திவ லிங்கத்தில் அந்தர்த்தானமானார், கங்கையும் அவள் முன்பு தோன்றி அவளைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு, அவள் என் பொருட்டு இந்தத் தினமாகிய வைகாச சுத்த சப்தமியில் இங்கு வந்து பிரத்யட்சமாக இருக்க வேண்டும் என்றாள். அதற்கு அவ்வாறே இசைந்த கங்கை ஆண்டுதோறும் அங்கு வருகிறாள். ஆகையால் அந்தத் தினத்தில் அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் விலகிப்போகும்; முனிவர்களே! நீங்கள் கேட்ட சிவ சரிதங்களில் நந்திகேஸ்வர மகாத்மியமும் ஒன்றாகும். 39. அனுசூயை வழிபட்ட கதையும் அத்திரீஸ்வர மகிமையும் வியாசேஸ்வரர், அமேசுவர, பண்டாரேசுர, ஹாங்காரேசுவர, சுரேசுவர, பூதேசுவர, சையகேசுர, லிங்கங்கள் பாபத்தை நீக்குபவை, இன்னும் தப்திகாநதி தீரத்தில் குமாரேஸ்வர சித்தேஸ்வர ஸ்தாதஸ்வர, ராமேஸ்வர, ருக்ஷிஸ்வர, கும்பேஸ்வர நந்தேஸ்வர பஞ்ச புஞ்சேஸ்வர லிங்கங்கள் தரிசித்தவுடனேயே சகல விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியவை. பூர்ணாநதி தீரத்தில் பூரணாகேஸ்வர வீரேஸ்வர லிங்கங்களும், கோதாவரி தீரத்தில் கபாலேஸ்வர சக்கரேஸ்வர, சந்திகேஸ்வர, தவுதபாபேஸ்வர, பீமேஸ்வர, சூரியேஸ்வர லிங்கங்களும் விளங்குகின்றன. திருப்திகா நதி தீரத்தில் திரியம்கேசுவர, கோகர்ணேஸ்வர, நாரூகேஸ்வர, ராமேஸ்வர; நந்தேஸ்வர, விமலேஸ்வர சண்டகேஸ்வர லிங்கங்கள் பூஜித்தவுடனே ஞானம் உண்டாக்கத்தக்கவை. திருப்திகா நதி கீழ்கடல் சங்கமத்தில் தர்மகேஸ்வர லிங்கமும், மேற்குக் கடற்கரையில் சித்தேஸ்வர, பிலேஸ்வர; அந்தகேஸ்வர லிங்கங்களும் இருக்கின்றன. அந்தகாசுரனை சங்கரித்த உக்கிரரூபத்துடன் சிவபெருமான் நின்ற இடமே அந்தகேஸ்வரம் எனப்படும். எல்லாவுலகங்கட்கும் சுகத்தை விளைவிக்கும் அற்புதாசலத்தல் சங்கேஸ்வர, கர்த்தமேஸ்வர கோடீஸ்வர லிங்கங்கள் இருக்கின்ற கவுசிகி நதி தீரத்தில் அசலேஸ்வர, நாகேஸ்வர அனந்தேஸ்வர யோகேசுவர வைத்திய நாதேசுவர: கோடீசுவர; சப்தேசுவர; பக்திகேசுவர; சண்டசுவர, சங்கமேசுவர லிங்கங்கள் இருக்கின்றன. இதுவரையில் கீழ்த்திசையில் உள்ளவற்றைச் சொன்னேன். முனிவர்களே! இனி தக்ஷிணத்தில் உலகத்தில் இருப்பவர்கள் சுகமடையவும் அத்திரிமுனிவரும் அனுசூயையும் ஒரு பஞ்ச காலத்தில் அன்னதானஞ் செய்யச் சங்கற்பித்துக் கொண்டு அதனை நிறைவேற்றவும் சுயம்புமூர்த்தியாகத் தோன்றிய அத்திரீசுவர லிங்கமொன்று சாக்ஷõத்காரமாக (கண் கூடாக) விளங்குகிறது. இவ்வாறு சூதபுராணிகர் சொன்னதும் அவ்வத்தீஸ்வர லிங்கத்தின் உற்பத்தி முதலியவற்றை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்யவாசிகள் கேட்டார்கள் சூதர் சொல்லலானார். முனிவர்களே! நீங்கள் கேட்ட விஷயம் அருமையானது அந்தக் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள். தென்திசையில் காமதம் என்று ஒரு வனம் உண்டு. அது தவஞ் செய்வதற்குத் தக்கதாக இருந்தது. அங்கே பிரம்ம புத்திரரான அத்திரிமுனிவர் தன் பத்தினி அனுசூயையுடன் தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது நூறு ஆண்டுகாலம் மழையே பெய்யாததால் எல்லோரும் கஷ்டப்பட நேரிட்டது. எங்கும் தண்ணீரே இல்லாமல் போயிற்று மரங்கள் எல்லாம் உலர்ந்தன தளிர்கள் பழங்கள் எதுவுமே இல்லாமற்போயின. சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மங்கள், ஜலமில்லாமல் நிறுத்தப்பட்டன. எங்கும் நெருப்புக் காற்றடித்தது இதனால் யாவரும் பெருந்துன்பமடைந்தார்கள். இவற்றைக் கண்ட பதிவிரதையான அனுசூயை இந்தத் துயரைச் சகிக்கமாட்டாமல் தன் கணவன் யோகத்தில் அமர்ந்திருக்கும் போது அவரது சீடர்கள் முதலானோர் பசிப்பிணி ஆற்றாது பல இடங்களுக்குச் சென்றதால் நான் மட்டும் தனித்து அவருக்குப் பணிவிடை செய்து கொண்டு பார்த்திவலிங்கம் ஒன்றைச் செய்து பூஜித்து தன் கணவன் முன் இருத்தி இருவருக்கும் தண்டம் செய்தும் பிரதட்சிணம் செய்துகொண்டும் இருந்தாள். அவளது பூஜையைக் கண்ட தைத்தியர் தானவர் முதலியவர்கள் அழகியான அனுசூயையை பார்த்து மயங்கி மோகம் கொண்டார்கள். அவர்கள் ஆசையோடு அவளை நெருங்க முயன்றார்கள். ஆனால் சிவபூஜையின் சிறப்பினாலும் பதிவிரதை மகிமையினாலும் நெருப்பு மயமாய் உஷ்ணம் வீசுவதாலும் அவளை நெருங்க முடியாமல் தூரத்திலேயே இருந்தார்கள். அத்திரி முனிவர் செய்த தவத்தைக் காட்டிலும் அனுசூயை செய்த தவம் மிகவும் கடுமையானதாக இருந்தது. அனுசூயை தவஞ்செய்து முடித்தவரையில் அவ்விருவர் நீங்கலாக வேறொருவரும் அங்கில்லை இவ்வாறு சிறிது காலம் கழிந்தது. அத்திரிமுனிவர் தியான யோகத்தில் மயைவயப்பட்டு ஒன்று உணராதவராக இருந்தார் பதிவிரதையான அனுசூயையும் தன் கணவனையும் சிவலிங்க பெருமானையும் அன்றி பிரிதொன்றையும் உணராமல் பெரும் நிஷ்டையிலிருந்தாள். அத்திரி முனிவர் தவத்திற்கும் அனுசூயையின் சிவபூஜைக்கும் சகல தேவர்களும் முனிவர்களும் கங்கை முதலிய தீர்த்தங்களும் மகிழ்ந்து அவர்களைப் பார்ப்பதற்காக அங்கு திரண்டுவந்து அவர்களது அற்புதசமாதியோக நிலையைக் கண்டு அவர்கள் செய்யும் தவமும் பூஜையும் சிறந்தன. இதைப்போல் யாரும் செய்ததில்லை. இவர்கள் மகா புண்ணியசாலிகள்! என்று சொல்லிக் கொண்டே போய் விட்டார்கள். சிவபெருமானும் கங்காதேவியுமே அங்கே தங்கிவிட்டார்கள். அவர்களில் கங்கை அனுசூயையின் பூஜைக்கிரமத்தைக் கண்டு இவளுக்கு ஏதேனும் வரங்கொடுத்துத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானும் வந்திருந்தார் அவரும் ஏதாவது நன்று செய்தே அந்தர்த்தானமாவார் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அனுசூயையோ தன் கணவனது நிஷ்டைகலையும் வரையில் சிவபூஜையிலேயே இருக்கவேண்டும். என்று கருத்துடன் அன்னபானாதிகளை நீங்கியிருந்தாள். அவ்விருவர் நிஷ்டையும் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் நீடித்தன. ஒரு காலத்தில், அத்திரி முனிவர் தன் நிஷ்டை நீங்கி, அனுசூயையைப் பார்த்து, விரைவில் தண்ணீர் கொண்டு வருக! என்றார்; உடனே அனுசூயை கமண்டலத்தை எடுத்துக் கொண்டு போய் எங்கெங்கோ தண்ணீருக்காக அலைந்தாள். எங்கும் தண்ணீர் கிடைக்காமல் அவள் யோசித்தாள். அப்போது கங்காதேவி அவள் முன்னால் தோன்றி, அனுசூயை! உனக்கு வேண்டியதை கேள். கொடுக்கிறேன் என்று சொல்ல அனுசூயை அவளைப் பார்த்து; நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்று கேட்க. அதற்கு கங்கை; நான் உனது பதிவிரதா தர்மத்தையும் நீ உன் கணவனையும் சிவலிங்கத்தையும் பூஜித்து வந்த உறுதிப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தான் கங்கை. உனக்கு என்ன வரவேண்டுமோ, கேள் என்றாள். அதற்கு அனுசூயை கங்கையைப் பணிந்து தாயே! எனக்கு தண்ணீர் வேண்டும் என்றாள். அதற்கு கங்கை உன் கையால் சிறுகுழி ஒன்றை தோண்டுவாயின் அங்கே நான் ஜலம் கொடுப்பேன் என்று கூற அனுசூயை அவ்வாறே தோண்ட ஜலதாரை தோன்றியது. அனுசூயை பெரும் வியப்போடு தண்ணீர் முகந்து கொண்டு, கங்கா தேவியைப் பார்த்து, உனக்கு என்மீது தயை இருக்குமானால் என் கணவர் தவஞ்செய்து முடியும் வரையில் இங்கேயே இருக்க வேண்டும்! என்று பிரார்த்தித்தாள். அதற்கு கங்கை உன் கணவனுக்குச் செய்த பணிவிடையால் அடைந்த பயனில் ஒரு மாத பலனை எனக்குக் கொடுப்பாயானால் நான் அப்படியே இருக்கிறேன்! என்றாள். அனுசூயை அப்படியே தந்தேன்! என்று தத்தம் செய்து தண்ணீரை எடுத்துக் கொண்டு தன் கணவனிடம் கொடுத்து அவர் முன்பு நின்றாள். அத்திரி முனிவர் முறைப்படி ஆசமனஞ் செய்து தாகந்தீர்ந்து மிகவும் மகிழ்ந்து பெண்ணே! நான் தினமும் பானம் செய்யும் ஜலமல்லவே இது. இது சிறப்பாக இருக்கிறதே! என்று கூறி நாற்புறமும் சுற்றிப் பார்த்தார். எந்தப் பக்கம் பார்த்தாலும் உலர்ந்த மரமும் நெருப்புக் காற்றுமாக இருப்பதைக் கண்டு மழையில்லையா என்று அவர்தம் மனைவியைக் கேட்டார். ஆம் மழையில்லை என்றாள் அனுசூயை! மழையில்லையென்றால் இப்பொழுது எங்கிருந்து நீ தண்ணீர் கொண்டு வந்தாய்? என்று முனிவர் கேட்டார். தண்ணீர் வந்த விதத்தைச் சொன்னால் தற்புகழ்ச்சியாகும் சொல்லாவிட்டால் குற்றம் வரும் என்பதால் அனுசூயை சிறிது நேரம் யோசித்தாள் அத்திரி முனிவர் இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டார். அதற்கு அவள் சுவாமி! நான் உண்மையைச் சொல்கிறேன். தங்களுக்கு பணிவிடை செய்த பயனாலும் சிவபூஜை செய்த பலத்தாலும் கங்காதேவியே இங்கு வந்திருக்கிறாள். அந்த ஜலத்தையே உங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தேன் என்றாள். அதைக் கேட்டதும் அத்திரி முனிவர், பெண்ணே! நீ சொல்வது உண்மையா? உண்மையென்று நம்ப முடியவில்லை. யோகியருக்கும் தேவர்களுக்கும் அசாத்தியமான காரியம் உனக்கு எப்படி கைகூடும்? கங்கையை நான் என் கண்ணெதிரே கண்டாலொழிய நம்ப மாட்டேன். கங்கையைக் கண்டால்தான் நம்புவேன்? என்றார். நாதா! தாங்கள் என்னுடன் வந்தால் காண்பிக்கிறேன்! என்று கங்கை தோன்றிய இடத்துக்கு அவரை அழைத்துக் கொண்டு அனுசூயை போனாள். அங்கே குழியிலிருந்த ஜலப்பெருக்கைக் கண்டு அத்திரி முனிவர் மிகவும் மகிழ்ந்து நீ தன்யை! என் தவமும் சபலமாயிற்று. கங்கா நதியில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்ததே. இது பிறருக்கு கிடைக்குமா என்று அந்தக் கங்கை நீரில் நீராடி ஆசமனம் செய்து பல முறை கங்கையைத் துதித்தார். அப்போது கங்கை அவர்களைப் பார்த்து அனுசூயா தேவி! நான் இனி விடை பெறுகிறேன்! என்ற சொல்ல அனுசூயை கங்கையைப் பார்த்து கங்காதேவி! நீ எனக்குப் பிரத்யட்சமாகி பரிபூரண அன்புடையவளாக இருப்பது உண்மையானால் நீ ஏற்கனவே அங்கீகரித்தது போல இங்கேயே இருக்க வேண்டும்! என்று வேண்டினாள். அத்திரி முனிவரும் பலவாறு கங்கையைத் துதித்துத் தயை வைக்க வேண்டும் என்று இறைஞ்சினார். பிறகு கங்கை அனுசூயையை நோக்கி நீ முதலில் உன் கணவனையும் சிவலிங்கத்தையும் பூஜித்ததால் உண்டான பயனில் ஒரு மாத பயனைக் கொடுத்து உன் கணவனின் தவம் முடியும் வரையிலும் இங்கேயே இருக்க வேண்டும் என்றாய். இப்பொழுதும் இங்கேயே இருக்க வேண்டும் என்பாயாகில் அந்தப் பயனில் ஒரு வருஷ பயனைக் கொடுத்தால் தான் அவ்வாறே இருப்பேன். தானம், ஸ்நானம், யாகம், பதிசேவை முதலியவற்றால் அடையும் பயனைவிட பதிவிரதையைக் கண்டால் அதிகப் பயன் கிடைக்கும். ஆகையால் உன்னை தரிசித்துக் கொண்டே இங்கு இருப்பதால் எனக்கும் மகிழ்ச்சி தான், உலகத்துக்கெல்லாம் நன்மை உண்டாக வேண்டும் என்று நீ நினைத்தால், நான் கேட்ட அந்தப் பயனைக் கங்கைக்கு வழங்கினாள். பொன், சந்தனம், கரும்பு, இந்த மூன்றும் தான் துயருற்றாலும் பிறருக்குப் பயன் அளிப்பது போல கஷ்டப்பட்டு தேடியபுண்ணியத்தை உலக நன்மையை உத்தேசித்து அனுசூயை தன் புண்ணிய பயனைக் கங்கைக்குக் கொடுத்து விட்டாள். அப்போது சிவபெருமான். அனுசூயை பூஜித்த பார்த்திவலிங்கத்திலிருந்து பிரத்தியட்சமாகி, உன் பதிவிரதா தர்மத்திற்கும் உன் பூஜைக்கும் மகிழ்ந்தேன். உனக்கு வேண்டியவரத்தைக் கேள் என்றார். ஐந்து திருமுகங்களுடன் பிரத்யட்சமாகிய சிவபெருமானை அத்திரி முனிவரும் அனுசூயாதேவியும் வணங்கி வழிபட்டு. தேவரீரும் ஜகன்மாதாவாகிய கங்காதேவியும் ஆகிய இருவருக்கும் எங்கள் மீது தயை இருக்குமானால் எப்போதும் இங்கேயே எழுந்தருளுயிருந்து உலகத்திற்கு நன்மை செய்து அருள் புரிய வேண்டும். என்று பிரார்த்தித்தார்கள். சிவபெருமானும் கங்கையும் அவ்வாறே அங்கீகரித்தனர், சிவபெருமான் அத்திரீஸ்வரர் என்ற பெயரால் சகலருக்கும் நன்மை செய்ய அங்கேயே கோயில் கொண்டார். கங்கையும் தன் சகோதரியாகிய பார்வதி தேவியுடன். அங்கேயே இருக்கிறாள். அதுமுதல் அவ்விடத்தில் குறைவில்லாமல் கங்காஜலம் எக்காலத்தும் விளங்கி வருகிறது. இதையுணர்ந்த தவமுனிவர்கள் தங்கள் பத்தினிமார்களோடும் சீடர்களோடும் அங்கே வந்தார்கள் கோதுமை தானியங்கள் இலைகள், புற்கள் பழங்கள் யாவும் விருத்தியடைந்தன அதைக் கண்ட முனிவர்கள் இதுவே தவத்திற்கு தகுதியான இடம் என்று அங்கேயே தவஞ் செய்திருந்தார்கள். அவர்களது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் மழை பொழியச் செய்தார். அதனால் சகலருக்கும் சுகம் உண்டாகி, அன்னபானாதிகளைப் பெற்றுத் தங்களுக்குரிய தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். இந்த அத்திரீசுவரரின் மகிமையை கேட்டவர்கள் சகல சுபங்களையும் அடைவார்கள். இவ்வாறு சூத புராணிகர் சொன்னதும் நைமிசாரண்ய வாசிகள் அவரை நோக்கி, ஞானிசிரியரே! இனி தாருகா வனத்திலுள்ள நாகேஸ்வரலிங்கப் பிரபாவத்தைச் சொல்லவேண்டும் என்று வேண்டினார்கள். சூதமுனிவர் சொல்லத் துவங்கினார். 40. பிக்ஷõடனர் மோகினி கதையும் நாகேஸ்வரலிங்க மகிமையும் முன்னொரு காலத்தில் ஒரு கற்பத்தில் தேவதாருவனம் என்ற காடொன்று இருந்தது. அதில் வசித்து வந்த மகரிஷிகள் யாகமே எல்லா பயன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் யாகத்தைக் காட்டிலும் கடவுள் வேறு இல்லையென்றும் தீர்மானித்தார்கள். அவர்களது மனைவியரோ தங்கள் கற்பே சிறந்தது என்றிருந்தார்கள். சிவபெருமான் அவர்களது மயக்கத்தையறிந்து அதை ஒழிக்கக் கருதி மகாவிஷ்ணுவை அழைத்து நீ பெண் வடிவம் ஏற்று என்னுடன் வருவாயாக! என்று பணிந்தார். உடனே திருமாலும் பொற்பதுமை போன்ற உடலழகும் முழுநிலாப் போன்ற முகமும் மன்மதனுடைய கரும்புவில்லைப் போல் வளைந்த புருவமும் உள்ள வேல் போன்ற கூர்மையான கருவிழிகளும் முல்லையரும்பு போன்ற அழகான பல்வரிசையும் கொவ்வைப் பழங்களைப் போன்ற சிவந்த உதடுகளும் பொற் கிண்ணங்கள் போன்ற ஸ்தனங்களும் சாணைக்கல் போன்ற கன்னமும் சங்கு போன்ற கழுத்தும் மூங்கில் போன்ற தோளும் உடுக்கைப் போன்ற இடையும் யானைத் துதிக்கைப் போன்ற தொடையும் பாம்பின் படம் போன்ற நிதம்பமும் செந்தாமரை மலர் போன்ற கைகளும் செம்பஞ்சுக் குழம்பூட்டிய பாதங்களுமுடைய சரவாபரண பூஷிதையான பூங்கொடியென ஒரு பெண்ணுருவம் எடுத்துக் கொண்டார். சிவபெருமானும் அந்த மங்கைக்கேற்ற ஆணழகராய் கோடி சூரியப்பிரகாசமான திவ்விய தேஜசையுடைய திருமேனியோடும் விளங்கினார். அவர் ஒரு கையில் டமருகமும் ஏந்தி, உள்ளாளப்பன் பாடிக்கொண்டு திகம்பரராய் (நிர்வாணமாய்) மதயானைப்போல் நடந்து மாயனாகிய மோகினிப் பெண்ணுடன் தாருகாவனத்து முனிவர்களின் தவநிலையையும் அம்முனி பத்தினியரின் கற்பையும் சோதிக்கக் கருதி அந்த வனத்தை அடைந்து நிர்வாணமாய்த் திரிந்து அம்மங்கையர்கள் மையல் கொள்ளும்படி வீடுகள் தோறும் சென்று பிச்சைக் கேட்டார். ரிஷிபத்தினிகளெல்லாம் பிட்சைப் பொருளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பிக்ஷõடனரைக் கண்டு காமப் பித்தேறியவர்களும் மதி மயங்கியவர்களும், தூரமாக ஓடியவர்களும் அப்படியே கட்டியணைப்பார்களும், ஆசையோடு அழைப்பவர்களும், மையல் அவஸ்தையால் அவரைத் தன்னோடு கூடி மகிழச் சேரவாரும் என்று கூப்பிடுபவர்களும், மோகாவேசத்தோடு பின் தொடர்பவர்களும், பெருமூச்சு விடுபவர்களும், காமத்தால் தாம் செய்வது எது வென்றே தெரியாதவர்களும் வளையல்களைச் சோரவிடுவோர்களும், ஆடைகளை நழுவ விடுவோர்களும், விழிதெரியாமல் வீழ்பவர்களும், வார்த்தை குழறுவோர்களுமாக அலைந்தார்கள். நீலகண்டராகிய பிக்ஷõடனப் பெருமான் வேத கீதங்களைப் பாடிக் கொண்டும் விநோத வித்தைகளைச் செய்து கொண்டும் வீதியில் திகம்பரராகவே(நிர்டாணமாகவே) உலாவிக் கொண்டிருந்தார். மோகினி வடிவமேற்ற மஹாவிஷ்ணுவோ உடல் இளைக்கச் செய்யும் தவமே சிறந்தது என்றறிந்த முனிவர்களைக் கண்டு பெண்மையின் சாகஸங்களையெல்லாம் காட்டத் தொடங்கினார். நாணமுற்றதைப் போல் கவர்ச்சிகரமாக நெளிந்து ஒதுங்கியும் தன் கையில் ஏந்திய வீணையில் சுருதி சேர்த்து இனிமையாகப் பாடியும், கண்வீச்சு வலைகளால் பலரது மதியை மயக்கியும், பண்ணமைந்த பாடல்களினால் பலர் உள்ளத்தை வாட்டியும் புன்னகையால் பலரைத் துன்புறுத்தியும் இவ்வாறு பலவிதத்திலும் மோகினி மோகாக்கினியை அவர்களுக்கு மூட்டி விட்டாள். அதனால் அம்முனிவர்கள் தங்கள் தவச்செயலை மறந்து. அவச்செயல் கொண்டு மதிமயங்கி மாயனாகிய மோகினியின் மலரடியில் விழுந்து பெண்ணே! பேரழகியே, நீ என்ன காரணமாக இங்கே வந்தாய்? நீ இங்கே வந்தது எங்கள் தவப்பயனே என்று தங்கள் சடைகள் அவிழ்ந்து தரையில் விழவும் உத்தரீயமும் நழுவி விழவும் மோகினியைப் பத்தினிகள் கற்பையும், வளையல் முதலான ஆபரணங்களையும் ஆடைகளையும் நழுவவிட்டு பிக்ஷõடனரைச் சூழ்ந்து வருவதைக் கண்டார்கள். உடனே கோபம் கொண்டு நிர்வாணமாகத் திரியும் அத்திகம்பரணையடைந்து பலவிதமாகச் சபித்தார்கள் ஆனால் அச்சாபங்கள் எதுவுமே சர்வலோக சரண்யனான சிவபெருமானை அடையவில்லை அதைக் கண்டதும் முனிவர்கள் பிக்ஷõடனரை நெருங்கி ஐயரே! நீர் யார்! இந்த மோகினி யார்? என்று கேட்டார்கள். அதற்குப் பெருமான் நான் ஒருமுனிவன். இவள் என் மனைவி. இங்கே தவம் செய்ய வந்தோம் என்றார். அதற்கு முனிவர்கள் அப்படியானால் மயக்கு வேசிபோல் திரியும் இவளை நீக்கிவிட்டு நீர் தவஞ் செய்யும்! என்றார்கள் அதற்கு பிக்ஷõடனர் மனைவியோடு தவஞ்செய்வதே சிறந்த வானப்பிரஸ்த தர்மம். நீங்கள் உங்கள் மனைவியரோடு சேர்ந்து தவஞ் செய்யவில்லையா? நீங்கள் உங்கள் மனைவியரின் கற்பு மிகவும் அழகாக இருக்கிறதே! உங்கள் செயல் இப்படியிருக்க கற்பிற்சிறந்த என் மனைவியை விட்டுவிட்டு நானோ தனித்துத் தவஞ்செய்வேன்? என்று சொல்லிக் கோபங்கொண்டவரைப் போல அவர்களை விட்டு நீங்கி மோகினியாகிய மாயவனோடு வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தையடைந்து வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் செய்த பூஜைகளை ஏற்று திருக்கைலையை அடைந்தார். வேததாருவனத்தைச் சேர்ந்த முனிவர்கள் சிவபெருமானையும் விஷ்ணுவையும் இகழ்ந்து பேசிய பாவத்தால் ஜ்வரம் முதலிய வியாதிகளையும் பசி முதலான துன்பங்களையும் மனக் கவலையையும் அடைந்து உடல் நடுங்க வாய் குழற சுவாமி! நோய்களாலும் எண்ணற்ற துன்பங்களாலும் நாங்கள் துன்புற்று வருந்துகிறோமே! இதற்குக் காரணம் என்ன? இதை ஒழிக்க வேண்டும், என்று வேண்டினார்கள். அதற்குப் பிரமதேவர், முனிவர்களே யாரானாலும் தன் வீட்டுக்கு வந்த அதிதியை பூஜிக்க வேண்டும் என்பது தர்மம், இதையுணர்ந்த நீங்கள் வேதங்களும் தேடியறியாத சிவபெருமானே பிக்ஷõடனராகவும் திருமாலே அவரது மனைவியாகவும் பிரத்யட்சமாகி உங்கள் இருப்பிடங்களுக்குவந்த போது நீங்கள் அவர்களை அவமதித்தீர்கள். அதனாலேயே இத்தகைய துன்பங்களை அடைந்தீர்கள் பரமேஸ்வரனை அப்பெருமானின் மனமகிழ நாள் தோறும் சிவ லிங்க அர்ச்சனை செய்யுங்கள்! என்றார் தவ முனிவர்களும் தாருகா வனத்தையடைந்து பிருமதேவர் சொல்லியபடி ருத்திராட்ச கண்டிகை அணிந்து விபூதி உத்தானனஞ் செய்து ஸ்ரீபஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவபக்தியை உடையவராய் மனைவியரோடு இரவும் பகலும் இடைவிடாது நல்லமலர்களால் அர்ச்சனைசெய்து வந்தார்கள். அவ்வாறு இருக்கும்போது சிவபெருமான் முன்பு போலவே பிக்ஷõடனராக மோகினியுடன் தாருகாவனத்தை அடைந்து சிறிதுநேரம் குதித்து விளையாடிக்கொண்டும் சிறிது நேரம் வேத கீதம்பாடிக் கொண்டும் பிøக்ஷ ஏற்பார்போல உலாவியும் யோகஞ் செய்தும் வீணே சிரித்தும் மோகினியோடு சேர்ந்து விளையாடிக்கொண்டும் இருந்தார். அவர்கள் அவ்வாறு விளையாடுவதைக் கண்டதும் தவ முனிவர்கள் தங்கள் பத்தினிகளோடு அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று அவர்களது திருவடிகளை மலர்களால் அர்ச்சனை செய்து பணிந்தார்கள். சிவபெருமான் அவர்கள் மீது தயையும் இரக்கமும் கொண்டு பல்லாயிரங்கோடி உதயசூரியனைப் போன்ற தமது மெய்வடிவைக்காட்டினார் முனிவர்கள் வேத வாக்கியங்களால் துதித்து உடல் சிலிர்க்க ஆனந்தக் கண்ணீர் சொரிய வணங்கி வழிபாடியற்றினார்கள். அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து மகரிஷிகளே! நீங்கள் கடவுளே இல்லை என்று கருதியதால் இவ்வாறு நாம் உம்மைப் பரீட்சித்தோம் என்று அவர்களுக்கு ஞான உபதேசம் செய்து இச்சிவலிங்கத்தை எப்பொழுதும் பூஜை செய்யுங்கள் என்று மோகினியுடன் அந்தர்த்தானமாய் ஆங்கோர் சிவலிங்க மூர்த்தமாய் எழுந்தருளியிருக்கின்றார். அந்த இலிங்கமே நீங்கள் கேட்ட தாருகாவன நாகேஸ்வரலிங்கம் அது முதல் முனிவர்கள் அந்த லிங்க மூர்த்தியைக் காலந் தவறாமல் பூஜை செய்து தங்கள் இஷ்ட காமியங்களை அடைந்தார்கள்

Related Articles